பதிவு செய்த நாள் :
கருத்துகள் (71)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் அடுத்த அதிரடியாக, பணக்காரர்களுக்கு சமையல், 'காஸ்' சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரத்து செய்யப்பட உள்ளது. ஆனாலும், இந்த பணக்காரர்களுக்கான வரைமுறை என்ன என்பது குறித்து, அதிகாரபூர்வமான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

தற்போது, சமையல் காஸ் சிலிண்டர்கள், நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்குமே மானிய விலையில் தான் தரப்படுகிறது. பெரும் பணக்காரர்களும்
இந்த சலுகையை அனுபவிக்கின்றனர்.இதை முறைப்படுத்தும் வகையில், பணக்காரர்களுக்கான மானியத்தை ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

டில்லியில் நேற்று நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியதாவது:அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, என்னைப் போன்ற பெரும் பணக்காரர்களுக்கு, சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து

செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முடிவு, விரைவில் அறிவிக்கப்படும். சமையல் காஸ் சிலிண்டர் மானியம் பெற தகுதியானவர்கள், தகுதியற்றவர்கள் யார் யார் என்பது பற்றிய வரைமுறை விரைவில் அறிவிக்கப்படும்.இது, தே.ஜ., கூட்டணி அரசின் கொள்கைகளில் ஒன்று. உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் இருந்தால், எந்த ஒரு சிரமமான முடிவையும் எளிதாக எடுக்க முடியும். தேவையற்ற மானியத்தை ரத்து செய்வது தொடர்பாக, முடிவு எடுப்பதற்காக, காலத்தை வீணாக்க இந்த அரசு விரும்பவில்லை. மத்திய அரசின் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடரும்.இவ்வாறு, ஜெட்லி கூறினார்.

பெரும் சுமை குறையும்!
பொது வினியோக திட்டம் மற்றும் சமையல் காஸ், டீசல், உரம் போன்ற பொருட்களுக்காக கடந்த பட்ஜெட்டில், 3.60 லட்சம் கோடி ரூபாய் மானியமாக, மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டது.இந்த அதிகப்படியான மானியத்தால், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை, மத்திய அரசுக்கு உருவாகி உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, மானிய திட்டங்களில் நடக்கும் குளறுபடிகளை தடுப்பதுடன், தேவையற்ற மானியங்களையும் ரத்து செய்வதற்கு, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.சமீபத்தில் டீசல்

Advertisement

விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பை, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடமே, மத்திய அரசு ஒப்படைத்தது.இதனால், அரசின் மானிய தொகையில், 15 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது.

மானியம் யாருக்கு ரத்து?
'வருமான வரி செலுத்தும் அனைவருக்கும் மானியம் ரத்தாகலாம்' என, ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால், 'என்னை போன்ற பணக்காரர்கள்' என, ஜெட்லி கூறியுள்ளதால், 'ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் வருமான வரி செலுத்தும் பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே மானியம் ரத்து ஆகும்' என, அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஒரு சிலிண்டருக்கு 432 ரூபாய்!
தற்போது சென்னையில், மானிய விலையிலான சமையல் காஸ் சிலிண்டர், 404 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்த சிலிண்டரின் சந்தை மதிப்பு, 836 ரூபாய். வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும், 404 ரூபாய் போக, மீதமுள்ள, 432 ரூபாயை, மத்திய அரசே மானியமாக பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்துகிறது.தற்போது, ஓர் ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள் மானிய விலையில் தரப்படுகின்றன.

தற்போதைய மானியங்கள்:
*பொது வினியோக திட்டத்தின் கீழ் பொருட்களை வழங்குவதற்காக மட்டும், 1.25 லட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
*சமையல் காஸ், மண்ணெண்ணெய் போன்ற பெட்ரோலிய பொருட்களுக்காக, 97 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
*உரத்துக்கு, 66 ஆயிரம் கோடி ரூபாயும், மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்காக, 60 ஆயிரம் கோடி ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (71)
g.s,rajan - chennai ,இந்தியா
22-நவ-201422:18:37 IST Report Abuse
g.s,rajan பணக்காரர்கள் வைத்து இருக்கும் சொகுசு வாகனங்கள் மற்றும் வியை உயர்த கார்களுக்கு முதலில் மானியத்தை ரத்து செய்யுங்கள் .அவர்களுக்கு இரண்டு அல்லது மூன்றுஅல்லது நான்கு மடங்கு பெட்ரோல் மற்றும் டீஸல் விலையை உயர்த்த வேண்டும்.அப்போதுதான் மற்றவர்களுக்கு நியாயமான விலையில் பெட்ரோல் டீஸல் கிடைக்கும் .மின் கட்டனத்தஹி அதிகமாகப் பயன்படுத்தினால் அவர்கள் வசதி படைத்தவர்கள் எனக் கருதப்பட்டு அவர்களிடம் மின் கட்டணம் குறிப்பிட்ட யூனிட்டுகளுக்கு மேல் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படுகிறது ,அதே போன்ற முறையில் பெட்ரோல் மற்றும் டீஸல் அதிகம் பயன்படுத்தும் தனி நபர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கலாம் .தவறில்லை .பொதுப் போக்குவரத்துக்கு பயன் படுத்தப்படும் டீசலுக்கு தனியாக கட்டணம் நிர்ணயித்துக் கண்காணிக்க வேண்டும் .இதற்குப் பிறகு சிலிண்டருக்கு வரலாம் .கையில் காசு இருக்கிறது என்பதற்காக இஷ்டப்படி பெட்ரோல் மற்றும் டீசலை வசதி படைத்தவர்கள் விரையம் செய்கின்றனர் ,டாங்க்கை நிரப்பி இஷ்டம் போல் ஊர் சுற்றுகின்றனர்.கறுப்புப் பணம் வரியை ஏமாற்றும் பணத்தை கண்டபடி செலவழிக்கின்றனர் ,இதற்கு முதலில் கடிவாளம் போடுங்கள் .அதிக அளவு பெட்ரோல் டீஸல் இறக்குமதி செய்வதால் நாட்டின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப் படுகிறது .அன்னியச் செலாவணி கையிருப்பு முற்றிலும் கரைகிறது.எனவே நாம் இருமதி செய்யும் கச்சாப்போருளின் செலவைக் குறைக்க வேண்டும் ,எரிபொருள் பயன்படுத்துவதில் சிக்கனமாக இருக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் ,அதே நேரத்தில் மாற்று எரிபொருளுக்கு வெகு விரைவில் வழி காண வேண்டும் . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-நவ-201421:32:28 IST Report Abuse
Pugazh V நல்ல திட்டம் என்று சொம்பு உடையும் வரை ஓங்கி ஓங்கி அடியுனக்ல், உங்கள் வீட்டிற்கு தெரியாமல் அடியுங்கள், ஏன்னா அவங்க தான் சிலிண்டர் வரும்போது வீட்டில் இருந்து வாங்குகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
22-நவ-201421:31:11 IST Report Abuse
Sukumar Talpady தேர்தலுக்கு முன்னால் சொன்னது ஒன்று.ஜெயித்து வந்த பிறகு செய்வது இன்னொன்று ஆட்சிக்கு வந்த பிறகு தான் தெரிகிறது என்ன என்ன கஷ்டங்கள் இருக்கிறது என்று . பணக்காரர்களுக்கு காஸ் மான்யம் கிடையாது என்றால் , பணக்காரர்கள் என்று ஏதாவது அளவு கோல் வைத்திருக்கிறார்களா? அல்லது பணக்காரர்கள் யாரும் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்கவில்லையா ? வருமான வரி கட்டுபவர்கள் எல்லாம் பணக்காரர்கள் இல்லை . பென்ஷன் வாங்குபவர்களும் வருமான வரி கட்டுகிறார்கள் . தேர்தலுக்கு முன்னால் மன்மோகன் அரசு 12 சிளிண்டர்களிலுருந்து 9 சிலிண்டர்களாக ( மான்யம் ) குறைத்த போது பா.ஜ.க. எவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தார்கள் . மன்மோகன் அரசு மறுபடியும் 12 ஆக உயர்த்தியபோதும் மக்கள் வாக்களிக்க வில்லை . சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று ஆக இருந்தால் பா.ஜ.க. அரசு வெகு சீக்கிரம் மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் ஜாக்கிரதை அமைச்சர்கள், எம்.பி.எம்.எல்.ஏ .இவர்களுக்கெல்லாம் சலுகைகளை எல்லாம் ரத்து செய்யுங்கள் பார்க்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
Uma Sridharan - Chennai,இந்தியா
22-நவ-201421:30:44 IST Report Abuse
Uma Sridharan சமையல் எரிவாயுவை குறைவாக பயன் படுத்துபவர்களுக்கு சலுகை வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-நவ-201421:29:53 IST Report Abuse
Pugazh V தனியார் முதலாளிகள் மற்றும் தனியார் துறை அதிகாரிகளுக்கான் ஆரசு இது. அவர்களில் தான் பலரும், அரசு ஊழியர்களை விட மிக அதிகமாக சம்பளம் வாங்கினாலும் வருமான வரி கட்டுவதே இல்லை. தனியார் அதிகாரிகள், மற்றும் அலுவலர்களுக்கு அந்த தனியார் கம்பெனிகள் டேக்சபில் இன்கம் என்பதை மிகக் குறைவாக காட்டுகின்றன. வெறும் 25000 ரூபாய் வாங்குகிற அரசு ஊழியர்கள் செத்தார்கள் - இனி 850 ரூபாய் அழ வேண்டும். மானியம் வங்கிக் கணக்கில் வரவும் வராது, மோடி, பி ஜே பி என்று ஆலாய்ப் பறந்து அடிமைத் தனமாக ஜால்ரா அடித்தவர்கள், அடிக்கிறவர்கள் அனுபவியுங்கள், மற்றவரையும் மாட்டி விட்டு விட்டீர்களே. ப சிதம்பரம் அவர்களின் திட்டத்தைக் காபியடிதார்கள், ஆனால் அவர் செய்ய முற்படாத மக்கள்விரோத செயலையும் சேர்த்துக் கொண்டுவிட்டார்களே.
Rate this:
Share this comment
Cancel
Sivo Ham - thiruvidaimaruthur,சிங்கப்பூர்
22-நவ-201420:49:45 IST Report Abuse
Sivo Ham 404 ரூபாய் சிலிண்டரை டோர் டெலிவரி செய்யும் ஏஜென்சி நிறுவனகள் 404 ரூபாய் பில்லை கொடுத்துவிட்டு 450 முதல் 480 வரை வாங்கிகொள்கிறார்கள் 500 ரூபாய்முதல் கள்ள மார்க்கெட்டிலும்கிடைக்கிறது
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-நவ-201419:50:02 IST Report Abuse
Pugazh V மாசம் 25000 சம்பளம் இருந்தாலே வருமான வரி கட்ட வேண்டும். இப்பவே சிலிண்டர் வரும்போதெல்லாம் 425 ரூபாய் கொடுத்தால் போதும், இனிமேல் 825 ரூபாய் கொடுக்க வேண்டும். மற்ற செலவுகளுக்கு என்ன செய்வது , அந்த மானியம் நமது கணக்கில் வரும்வரை எண்ணிய செய்வது என்று இப்பவே நடுத்தர குடும்பங்கள் விழி பிதுங்குவது நிஜம், ஆனால் இது ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Seoul,தென் கொரியா
22-நவ-201419:18:44 IST Report Abuse
முக்கண் மைந்தன் இவர்களுக்கு அரசாள தெரியவில்லை என்பது ஒவ்வொரு நாளும் நிரூபனமாகிக்கொண்டே வருகிறது. "எதைத் தின்றால் பித்தம் தெளியும்" என்ற கதைதான்.....
Rate this:
Share this comment
Cancel
kvmanokar - rajahmundry,இந்தியா
22-நவ-201419:16:58 IST Report Abuse
kvmanokar இன்னும் மூன்று ஆண்டுகள் போனால், இப்படித்தான் அனைவரும் சொல்லுவார்கள். மன்மோகன் 100 மடங்கு தேவலை என்று ,வெறும் விளம்பரத்தை நம்பி ஏமாந்து விட்டோம்
Rate this:
Share this comment
Cancel
kvmanokar - rajahmundry,இந்தியா
22-நவ-201419:14:32 IST Report Abuse
kvmanokar மக்களுக்கு மத்தியிலும் ஏமாற்றம் தான் மிஞ்சும் போல ,ஒட்டு வாங்கிவிட்டு ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னால் அது மிகை ஆகாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X