ரஜினி, கமலின் பிரமாண்டம்...எனக்கு தெரியவில்லை - தயாரிப்பாளர் பஞ்சு சுப்பு 'பளிச்'

Added : நவ 23, 2014 | கருத்துகள் (3)
Advertisement
எட்டு வயதில் சினிமாவின் குட்டி நட்சத்திரம். படித்த பிறகு என்ன செய்யப் போகிறோம்? சினிமாவுக்குத்தான் வரப்போகிறோம் என்று சினிமா கனவும், நிஜமுமாய் மாறியவர் தயாரிப்பாளர் பஞ்சு சுப்பு.'பாஸ் என்ற பாஸ்கரன்' மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தந்தையுடன் சேர்ந்து தயாரித்த 32 படங்களில் பாதி படங்களில் தனிப்பட்ட தயாரிப்பாளராக இருந்துள்ளார். குணச்சித்திரம், காமெடி நடிகர்,
ரஜினி, கமலின் பிரமாண்டம்...எனக்கு தெரியவில்லை - தயாரிப்பாளர் பஞ்சு சுப்பு 'பளிச்'

எட்டு வயதில் சினிமாவின் குட்டி நட்சத்திரம். படித்த பிறகு என்ன செய்யப் போகிறோம்? சினிமாவுக்குத்தான் வரப்போகிறோம் என்று சினிமா கனவும், நிஜமுமாய் மாறியவர் தயாரிப்பாளர் பஞ்சு சுப்பு.'பாஸ் என்ற பாஸ்கரன்' மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தந்தையுடன் சேர்ந்து தயாரித்த 32 படங்களில் பாதி படங்களில் தனிப்பட்ட தயாரிப்பாளராக இருந்துள்ளார். குணச்சித்திரம், காமெடி நடிகர், தயாரிப்பாளர், பின்னணி குரல், நடன இயக்குனர் என பல வித்தையும் தன் கையில் வைத்துள்ளார்.காரைக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் கூறியது:எனக்கு எல்லாமே சினிமாதான். 'டெய்சி' என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானேன். பல்லில் கிளிப் மாட்டியதால் வித்தியாசமாக தெரிந்தேன். அதனால் தான் என்னை பிரதாப் போத்தன் தேர்வு செய்தார். அதில் கமலஹாசன், லட்சுமி நடித்திருந்தனர். 13 வயதில் 'குரு சிஷ்யன்' சூட்டிங் பார்க்க அப்பாவுக்கு தெரியாமல் எஸ்.பி.முத்துராமனின் காரில் ஏறி ரகசியமாக பெங்களூரு சென்றேன். அப்பாவோ படிக்க வேண்டும் என வற்புறுத்தினார். 'நீ என்னவாக போகிறாய்' என எஸ்.பி.முத்துராமன் கேட்டார்.'சினிமாவுக்கு வரப்போகிறேன்' என்றேன். என் அப்பாவிடம் 'அண்ணே, இவன் நம்ம ரூட்டுதான்' என்று கூறி சினிமா பக்கம் வர உதவினார். அப்பாவுடன் சேர்ந்து கற்ற நுணுக்கங்களால் 15 வயதில் அப்பா உதவியுடன் 'மைக்கேல் மதன காமராஜனை' தயாரிக்க வைத்தது.படங்கள் தோல்வி அடையும்போது எதை நோக்கி செல்கிறோமோ அதை நோக்கி செல்ல வேண்டும். சோர்ந்து போகக்கூடாது. வெற்றியோ, தோல்வியோ என் படங்களுக்குத்தான்; எனக்கு அல்ல என்பார் அப்பா.ரஜினி,- கமல் வெளியுலகுக்கு தெரிந்த பிரமாண்டம் எனக்கு தெரியவில்லை. சினிமா என்று வந்தால் அதற்கு எல்லையே கிடையாது என கமலஹாசன் என்னிடம் கூறினார். அதன்படி அனைத்தையும் கற்று கொண்டேன். சிவாஜி படத்தில் சுமனுக்கு டப்பிங் பேசியது நான்தான். இதை பார்த்த ரஜினி 'நான் பார்த்த பஞ்சு சுப்புவா? வாய்ஸ் எப்படி மாறி விட்டது', என பாராட்டியதாக ஷங்கர் சொன்னார்.ஒரு டான்ஸ் மாஸ்டராக தற்போது எனக்கு நேரமில்லை. விடுகதை, கவலைப்படாதே சகோதரா படங்களுக்கு நடனம் அமைத்துள்ளேன். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்தியுள்ளேன்.'பாஸ் என்ற பாஸ்கரனில்' ஆர்யாவின் அண்ணன் கேரக்டரில் நடிக்க டைரக்டர் ராஜேஷ் பலரை தேர்வு செய்தும் சரியான நடிகர் அமையவில்லை. அதன் தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன் 'சுப்புவை நடிக்க வைக்கலாமே' என கேட்டுள்ளார். 'நான் நெகட்டிவ் இமேஜ் கொண்டவன். சிரித்து கொண்டே கொல்வேன்' என பலர் அவரிடம் கூறியுள்ளனர். இதனால் தயக்கம் காட்டியவர் தயாரிப்பாளர் கூறியதற்காக வேறு வழியின்றி முதல் சீனில் நடிக்க வைத்தார்.'பரீட்சைக்கு பிட் கொண்டு போவது சரிதான், அந்த பிட் எங்கே? இருக்கு என்று தெரிந்து எழுத வேண்டும்' என்ற என்னுடைய முதல் சீனை பார்த்த ராஜேஷ், 'நான் தேடிய ஆள் நீங்கதான்' என்றார். என் இமேஜ்க்காக, 'புல்லட்டில் வருபவர் டெரர் என எண்ண வேண்டாம்...' என்ற அறிமுகத்தை வைத்தார்.கேரக்டர் ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சிவபெருமானாக நடிக்க வாய்ப்பு கிடைக்காது. அப்படி வந்த வாய்ப்புதான் 'நவீன சரஸ்வதி சபதம்'. அதற்காக சிவாஜி நடிப்புடன் என்னை ஒப்பிடாதீர்கள். அதில் 10 சதவீதம் கூட எனக்கு வராது என்றார்.இவரை வாழ்த்த email: subbupanchu@yahoo.com

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madukkur S M Sajahan - Madukkur,இந்தியா
30-நவ-201415:26:42 IST Report Abuse
Madukkur S M Sajahan நல்ல குரல்
Rate this:
Cancel
தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்
23-நவ-201420:01:36 IST Report Abuse
தமிழ்செல்வன் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள டாஸ்மார்க் கடையில் இவர் நிரந்தர வாடிக்கையாளர்...கட்ட பஞ்சாயத்தும் உண்டு ...
Rate this:
Cancel
rajarajan - bangalore,இந்தியா
23-நவ-201419:11:46 IST Report Abuse
rajarajan ராதிகாவின் சீரியலில் வில்லனாக நடித்ததை சொல்லவேயில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X