கோர்ட் செய்தி

தமிழ்நாடு

"அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வெற்றி செல்லும்'

Added : அக் 23, 2010
Share
Advertisement
சென்னை : "வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டசபை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பாண்டுரங்கன் வெற்றி பெற்றது செல்லும்' என, சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. கடந்த சட்டசபை தேர்தலில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் பாண்டுரங்கன், பா.ம.க., சார்பில் வரலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டுரங்கன், 53 ஓட்டுகள்
"அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வெற்றி செல்லும்'

சென்னை : "வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டசபை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பாண்டுரங்கன் வெற்றி பெற்றது செல்லும்' என, சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. கடந்த சட்டசபை தேர்தலில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் பாண்டுரங்கன், பா.ம.க., சார்பில் வரலட்சுமி உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் பாண்டுரங்கன், 53 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

பாண்டுரங்கன் எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் வரலட்சுமி, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், "அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட சின்னபள்ளிகுப்பம் ஓட்டுச்சாவடியில், ஓட்டு எண்ணிக்கைக்காக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் முத்திரையை அகற்றிப் பார்த்த போது, அதில் பொத்தான் சேதமடைந்திருந்தது.

இயந்திரத்தில் மாற்றங்கள் செய்ததன் மூலம், எனக்கு விழுந்த ஓட்டுகள் பாண்டுரங்கனுக்கு சாதகமாக பதிவாகியுள்ளன. இது குறித்து தேர்தல் பார்வையாளரிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பாண்டுரங்கன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி, "மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு ஏதும் செய்ய முடியாதபடி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் கட்டுப்பாட்டுப் பிரிவிலும் ஓட்டுகள் பதிவாகும் என்பதால், இதில் எந்த மோசடியும் செய்ய முடியாது. ஆகவே, மோசடி செய்து விட்டதாக மனுதாரர் கூறும் காரணத்தை ஏற்க முடியாது' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X