கட்சிக் கொறடா உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயப்ரதா மனு

Added : அக் 23, 2010
Share
Advertisement
புதுடில்லி : "கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின், கொறடா உத்தரவு தன்னை கட்டுப்படுத்தாது' என, அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் முன்னாள் எம்.பி.,யும், நடிகையுமான ஜெயப்ரதா. உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி சார்பில், உ.பி., ராம்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானவர் நடிகை ஜெயப்ரதா. அதேபோல், சமாஜ்வாடி
கட்சிக் கொறடா உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஜெயப்ரதா மனு

புதுடில்லி : "கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின், கொறடா உத்தரவு தன்னை கட்டுப்படுத்தாது' என, அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் முன்னாள் எம்.பி.,யும், நடிகையுமான ஜெயப்ரதா.


உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி சார்பில், உ.பி., ராம்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானவர் நடிகை ஜெயப்ரதா. அதேபோல், சமாஜ்வாடி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யானவர் அமர்சிங். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, ஜெயப்ரதாவும், அமர்சிங்கும் சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.


இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் நடிகை ஜெயப்ரதா கூறியிருப்பதாவது: ஒரு எம்.பி.,யோ அல்லது எம்.எல்.ஏ.,வோ, தாங்களாக கட்சியிலிருந்து விலகினால் மட்டுமே, அவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கு மாறாக கட்சி மேலிடம் அவர்களை நீக்கினால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களை, எந்தக் கட்சியிலும் சாராதவர்களாகவே கருத வேண்டும். அப்படி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவு அவர்களை கட்டுப்படுத்தாது. எனவே, சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எனக்கு எதிராக, அந்தக் கட்சி பிறப்பித்த கொறடா உத்தரவு என்னை கட்டுப்படுத்தாது என, அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்சிங்கும் இதே போன்ற மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இருவரின் மனு மீதான விசாரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X