பதிவு செய்த நாள் :
கருத்துகள் (38)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி:'இதுவரை, சொத்து கணக்குகளை சமர்ப்பிக்காத, பா.ஜ., - எம்.பி.,க்கள், 48 மணி நேரத்தில், சொத்து விவரங்களை, பார்லி., இணையதளத்தில் கட்டாயம் வெளியிட வேண்டும்' என, பிரதமர் மோடி, நேற்று காலை, அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

எம்.பி.,க்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட, 90 நாட்களுக்குள், எம்.பி.,க்கள் தங்கள் சொத்து கணக்கை, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறை நன்கு தெரிந்த பிறகும், நடப்பு, 16வது லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, 543 எம்.பி.,க்களில், 400க்கும் மேற்பட்டவர்கள், இன்னமும் தங்கள் சொத்து கணக்கை சமர்ப்பிக்காமல் உள்ளதாக, கடந்த செப்., 26ல் வெளியான தகவல் தெரிவிக்கிறது.

முக்கியமானவர்கள் : காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல்
பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், உமா பாரதி, நிதின் கட்காரி
சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் மற்றும் பலர்

சமர்ப்பிக்காத பிரபலங்கள்: மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ்வர்த்தன், ராதாமோகன் சிங், ஆனந்த் கீதே, ஆனந்த்குமார், கிரண் ரிஜிஜூ, லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், காங்கிரசை சேர்ந்த கேப்டன்அம்ரிந்தர் சிங், வீரப்ப

மொய்லி, மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே. முன்னாள் பிரதமர் தேவகவுடா, பா.ஜ.,வின் மீனாட்சி லெகி, வினோத் கன்னா, கிரண் கெர், ஹேமமாலினி.

என்னென்ன விவரங்கள் அவசியம்
*உறுப்பினர் பெயர், முகவரி, கட்சி.
*அசையாத சொத்துகள் விவரம் - எப்போது வாங்கப்பட்டது, யார், யார் பங்குதாரர்கள், யார் பெயரில் உள்ளது.
*அசையும் சொத்துகள் விவரம் - பைக், கார், வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்டுஉள்ள முதலீடு.
*எம்.பி.,யின் மனைவி பெயரில் உள்ள அசையும், அசையா சொத்துகள்.
*எம்.பி.,யின் வாரிசுகள் பெயரில் உள்ள அசையும்,அசையா சொத்துகள்.

எந்த கட்சி;எத்தனை பேர்
பா.ஜ.,:209
காங்., :31
திரிணமுல் காங்.,:27
பிஜு ஜனதா தளம்:18
சிவசேனா:15தெலுங்கு தேசம்:14
அ.தி.மு.க., :9
டி.ஆர்.எஸ்., :8
ஒய்.எஸ்.ஆர்., காங்.,:7
ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி:6

Advertisement

சமாஜ்வாதி:3
ஐக்கிய ஜனதா தளம்:2
அப்னா தளம்:2
அகாலி தளம்,ஆர்.ஜே.டி., ஆம் ஆத்மிதலா 1

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (38)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
28-நவ-201408:53:17 IST Report Abuse
மதுரை விருமாண்டி பிரதமரு அட்டைக்கத்தி வீசி, இத்தோட 48 மணி நேரத்துக்கும் மேல் ஆகி விட்டது.. அண்டம் கிடு கிடுங்கப் போற மாதிரி செய்தி மட்டும் காது கிழிஞ்சுதே.. இந்த அட்டைக்கத்தி வீசி வீரபிரதாபத்தை காட்டுறதுக்கு பிரதமர் தேவையில்லை.. ஒரு நாடக கோமாளி போதும்..
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
28-நவ-201401:19:43 IST Report Abuse
suresh மோடி தன்னுடைய மனைவியை மறைத்துவிட்டார் .முதல்ல மனைவிங்க கணக்கை காட்டுங்க
Rate this:
Share this comment
Cancel
தம்பி - பொள்ளாச்சி ,இந்தியா
27-நவ-201408:23:37 IST Report Abuse
தம்பி சொத்து கணக்கை காட்டாதவர்களை அடுத்த 48 மணி நேரத்தில் பதவி இருந்து நீக்கி உத்தரவு போடலாம்
Rate this:
Share this comment
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
27-நவ-201408:15:10 IST Report Abuse
Rajarajan போட்டு தாக்கு. அப்படியே, சிறிய வீடு, சின்னஞ்சிறு வீடு, துணைவியின் மகன் / மகள், பினாமி இவர்களையும் விடக்கூடாது. ஒரு சந்தேகம், இதுக்கு முன்னால MP / அமைச்சரா இருந்து சம்பாதிச்சவங்க எல்லாம் அதிர்ஷ்டசாலிகளா ?? பின்ன, சம்பாதிச்சிட்டு கம்பி நீட்டிட்டாங்களே ??? இவங்க கணக்கு எல்லாம் காட்ட வேண்டாமா ??? சொல்லவே இல்ல.
Rate this:
Share this comment
shyam - ALLENTOWN PA,யூ.எஸ்.ஏ
27-நவ-201408:26:45 IST Report Abuse
shyamஅவர்களும் கணக்கு காட்டினால்தான் சலுகையை பெறமுடியும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
27-நவ-201407:49:03 IST Report Abuse
N.Purushothaman நல்லது....இதற்க்கு எம்.பீ க்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் அவர்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல இமேஜ் இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
27-நவ-201407:23:16 IST Report Abuse
K.   Shanmugasundararaj சட்டம் எல்லாம் சாதாரண மக்களுக்கு தான்.தாங்கள் நிறைவேற்றிய சட்டத்தை மதிக்காத இவர்களை என்னவென்று சொல்வது.இவர்கள் தான் உத்தமர்கள்.இந்தியாவை சுத்தப்படுத்தனும்னு சொல்ற திருவாளர் மோடி ,சட்டத்தை மதிக்காத இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போறார்.சாதாரண மனிதன் மின்சார கட்டணம்,தண்ணீர் கட்டணம் கட்டா விட்டால் மின்சாரம் ,தண்ணீர் நிறுத்தபடுது.இவங்களுக்கு என்ன தண்டனை.ஒரு 6 மாதத்துக்கு பதவியில் இருந்து நீக்கலாம்.அப்பொழுது சம்பளம் மற்றும் அலவன்சுகள் கிடையாது.மந்திரிகளுக்கு பதவி பறிக்கபடனும்.சட்டத்தின் முன் அனைவரும் சமம் அப்படின்னு சொல்றாங்க.சட்டப்படி வேலைசெய்யாத அரசு ஊழியருக்கு தண்டனை.ஆனால் எம்.பி மற்றும் மந்திரின்னா ஒன்னும் கிடையாதா?.என்னமோ மோடி சாட்டையை எடுத்துட்டாருன்னு தினமலர் புளகாகிதம் அடையுது.எதிர்க்கட்சி எம்.பி க்களை வீட்டை காலிசெய்ய சொன்ன மோடி ,இதிலும் அதே மாதிரி சட்டத்தை மதிக்காத இந்த எம்.பி க்களுக்கு தண்டனை கொடுத்து இருந்தால் வரவேற்று இருக்கலாம்.இதெல்லாம் சும்மா நாடகம்.
Rate this:
Share this comment
Cancel
தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா
27-நவ-201406:57:53 IST Report Abuse
தி.இரா.இராதாகிருஷ்ணன் நம்ம தலையாக இருந்தால், சொத்துக் கணக்கை தன்னிடம் சமர்ப்பிக்க சொல்லி, அதில் தனக்கு இவ்வளவு என்று கப்பம் கட்ட சொல்லுவார்.....அப்படிதானே விருமாண்டி......
Rate this:
Share this comment
Cancel
Singai Vendan - Singapore,சிங்கப்பூர்
27-நவ-201406:50:02 IST Report Abuse
Singai Vendan ஒருவன்...நல்லவனாக இருப்பதற்கும்...நல்லவனை போல் இருப்பதற்கும்...அதிக வித்தியாசம் உண்டு....மற்றவர்களை விட்டு தள்ளுங்கள்... இப்போதைக்கு உங்கள் சொத்து...மற்றும் உங்களின் குடும்பத்தாரின் ஒட்டு மொத்த சொத்து நிலவரம்....அந்த சொத்து உங்கள் குடும்பங்களுக்கு இதுவரை வந்த விதம் ஆகிய வற்றை நீங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையாக வெளியிட முடியுமா...? ஒரு டீ கடையிலிருந்து...கோடிகளை தொட உங்களால் முடியும் போது...பாரம்பரியமாக அரசியல் செய்யும் மற்றவர்களை பற்றி பேசி என்ன பயன்? இன்று உங்கள் கையில் அதிகாரம் இருப்பதனால்...ஒருவனும்... உங்களை இப்போதைக்கு ஒன்றும் கேட்க போவது இல்லை...ஆனால் இதே அதிகாரம் உங்களை விட்டு நீங்கும் போது அனைத்து உண்மைகளும் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும்? நீங்கள் மற்றவர்களை பார்த்து கேட்கும் அத்தனை கேள்விகளும் உங்களையே திருப்பி கேட்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை? காலம் பதில் சொல்லும்???
Rate this:
Share this comment
பலராமன் - Cuttack,இந்தியா
27-நவ-201408:47:30 IST Report Abuse
பலராமன்அவர் அதாவது பிரதமர் அவர்கள் கிட்ட தட்ட பத்து வருஷத்திற்க்கு மேல் முதல்வராக இருந்துள்ளார்....அவரிடம் கோடி கணக்கில் சொத்து இல்லை.. அவர் முதல்வராக கணிசமான சம்பளம் பெற்றுள்ளார்.....அவருக்கு தனிப்பட்ட செலவுகள் குறைவு.....அதாவது குடும்ப செலவுகள்......அவர் ஆடைகள் தான் அதிகம் வைத்துள்ளார்......எனவே அவர் நேர்மையை சந்தேக பட வேண்டாம்.......அவர் என்ன கோடி கணக்கில் கணக்கு காட்ட முடியாத அளவிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ளாரா? அவர் நேர்மையாக இருப்பதால் தான் மற்றவர்களை கண்டிக்கிறார்...
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
27-நவ-201406:48:26 IST Report Abuse
தங்கை ராஜா எனக்கு ஒரு டவுட்டுங்க. இதனால யாருக்கு என்ன லாபம்? எதுக்காக இப்படியொரு ஹீரோ வேஷம்.
Rate this:
Share this comment
K.Sugavanam - Salem,இந்தியா
27-நவ-201408:23:17 IST Report Abuse
K.Sugavanamஅந்த சொத்துக்கணக்கு ஆதாரங்களுடனும்,அரசு அங்கீகரித்த ஒரு நிறுவனத்தால் ஆராய்ந்து சான்று கொடுக்க பட்டும் இருக்கவேண்டும்..அதை ஒரு ஆவணமாக கருத சட்டம் இயற்ற பட வேண்டும்.....
Rate this:
Share this comment
Narayan Arunachalam - DELHI,இந்தியா
27-நவ-201408:46:35 IST Report Abuse
Narayan Arunachalamஅதானே.. இதெல்லாம் நமக்கு பழக்கமே இல்லையே.. அடுத்தவங்க எவ்வளவு செர்த்திருக்காங்கன்னு தானே நாம விசாரிப்போம்......
Rate this:
Share this comment
Cancel
Ponthangam - Singapore,சிங்கப்பூர்
27-நவ-201406:09:52 IST Report Abuse
Ponthangam இப்படியே நீங்க பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா உங்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உங்களை வீட்டுக்கு அனுப்பிற போறாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X