நசியும் மண்பாண்டம் தொழில்நடவடிக்கை எடுக்குமா அரசு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நசியும் மண்பாண்டம் தொழில்நடவடிக்கை எடுக்குமா அரசு?

Added : நவ 27, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 நசியும் மண்பாண்டம் தொழில்நடவடிக்கை எடுக்குமா அரசு?

சென்னை:''களிமண் கிடைக்காததால், மண்பாண்டம் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,'' என, அகில இந்திய குலாலர் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் தியாகராஜன் கூறினார்.80 யூனிட்:இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:தமிழகத்தில், மண்பாண்டங்கள் செய்யும் தொழிலில், ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட வாரியாக ஒவ்வொரு தொழிலாளிக்கும், 80 யூனிட் மண் வரை குளத்தில் எடுத்து கொள்ள, அரசு அனுமதி அளித்திருந்தது.தற்போது, உச்ச நீதிமன்ற உத்தரவை காட்டி, மண் எடுக்க அனுமதிப்பதில்லை.
இந்த தொழிலுக்கு குறைந்தளவு மண் மட்டுமே எடுப்பதால், குளத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே, மண்பாண்டத் தொழிலை நம்பியுள்ளவர்களுக்கு, குறைந்தளவு மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.தமிழக அரசு அறிவித்தபடி, மழைக்கால நிவாரணமாக தொழிலாளிக்கு, 4,000 ரூபாய் விரைவில் தர வேண்டும். குறிப்பாக, 58 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த நிவாரணம் வழங்க அரசு முன் வந்தால் உதவியாக இருக்கும்.
அமைச்சர் உறுதி:எங்களின் கோரிக்கை கள் குறித்து, கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சியிடம் மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivakumar S - singapore,இந்தியா
28-நவ-201403:48:49 IST Report Abuse
Sivakumar S மண்பாண்ட தொழிலாளர்களை காக்கும் கடமை அரசுக்கு உள்ளது, இந்த கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X