பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் நாணய கண்காட்சி துவக்கம்

Added : நவ 29, 2014
Share
Advertisement
கோவை: வரலாற்று சிறப்புமிக்க பழங்கால நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சி, கோவை, ராம்நகர், கமலம் துரைசாமி மண்டபத்தில் நேற்று துவங்கியது.அரிய நாணயங்கள்: அரிய நாணயங்களை மக்களிடையே அறிமுகப்படுத்தும் விதமாக, கோவை, திருப்பூர் மற்றும் சேர நாடு நாணயவியல், அஞ்சலியல் கழகங்கள் இணைந்து, இக்கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. தமிழகம், கேரளா,
கோவையில் நாணய கண்காட்சி துவக்கம்

கோவை: வரலாற்று சிறப்புமிக்க பழங்கால நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் கலைப்பொருட்கள் கண்காட்சி, கோவை, ராம்நகர், கமலம் துரைசாமி மண்டபத்தில் நேற்று துவங்கியது.


அரிய நாணயங்கள்:

அரிய நாணயங்களை மக்களிடையே அறிமுகப்படுத்தும் விதமாக, கோவை, திருப்பூர் மற்றும் சேர நாடு நாணயவியல், அஞ்சலியல் கழகங்கள் இணைந்து, இக்கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகா, டில்லி, மும்பை, கோல்கட்டா உட்பட, நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்துள்ள சேகரிப்பாளர்கள், தங்கள் அரிய சேகரிப்புகளை, பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளனர். இதில், 2,500 ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட நாணயங்கள், புத்தம் புதிய யூரோ நாணயங்கள், சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள், குப்தர்கள், மொகலயர்கள், டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள் காலத்தில் வெளியான உலோக நாணயங்கள், பணத்தாள்கள் அடங்கிய, 50க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெற்றுள்ளன. 120க்கும் மேற்பட்ட நாடுகளில் காந்தியின் உருவப்படத்துடன் வெளியிட்ட சிறப்பு தபால் தலைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.


முக்கிய பங்கு:

கோவை மாவட்ட நாணயவியல் அஞ்சலியல் கழக செயலர் பழனிச்சாமி கூறுகையில், ''ஒரு நாட்டின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் நாணயங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. இத்தகைய நாணயங்கள் தான் நாட்டின் பண்பாடு, கலாசாரம் மற்றும் பாரம்பரிய சிறப்புகளை இன்று வரை அழியாமல் பாதுகாக்கின்றன. இதுகுறித்து இன்றைய தலைமுறையினருக்கு விளக்கவே இக்காண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம்,'' என்றார்.


நாணயங்கள் குறித்த அரிய புத்தகங்கள்!

கண்காட்சியில், 'தினமலர்' ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சங்க கால தமிழ் நாணயங்கள், தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட சீன நாணயங்கள், கரூரில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால கிரேக்க மற்றும் பொனீசியன் நாணயங்கள், பல்லவ நாணயங்கள், தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பிற்கால ரோமானிய செம்பு நாணயங்கள், சங்க காலத்தின் முக்கிய நாணயக் குறிப்புகள், தமிழ் எழுத்து சீர்திருத்தம், சங்க கால பாண்டிய மன்னர் பெருவழுதி நாணயம் கண்டு பிடிப்பு, செழிய செழியன் நாணயங்கள் உள்ளிட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இன்று நிறைவடையும் கண்காட்சியை, காலை 9:30 முதல் இரவு 9:00 மணிக்குள் சென்று பார்வையிட்டு ரசிக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X