திருமண நிதி உதவி திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை சரிவு: பெண்கள் ஓட்டு வங்கி அ.தி.மு.க.,வுக்கு கை கொடுக்குமா?

Updated : நவ 29, 2014 | Added : நவ 29, 2014 | கருத்துகள் (20) | |
Advertisement
தமிழகத்தில் பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. ஜெ., கைது நடவடிக்கைக்கு பின், இத்திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், பெண்கள் ஓட்டு வங்கி, அ.தி.மு.க.,வுக்கு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், பெண்களின் ஓட்டுகளை கவரும் வகையில், பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண
Will womens vote help for admkதிருமண நிதி உதவி திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை சரிவு: பெண்கள் ஓட்டு வங்கி அ.தி.மு.க.,வுக்கு கை கொடுக்குமா?

தமிழகத்தில் பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. ஜெ., கைது நடவடிக்கைக்கு பின், இத்திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், பெண்கள் ஓட்டு வங்கி, அ.தி.மு.க.,வுக்கு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில், 2011 சட்டசபை தேர்தலில், பெண்களின் ஓட்டுகளை கவரும் வகையில், பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண நிதியுதவி திட்ட மதிப்பில் உயர்வு செய்வதாக, அ.தி.மு.க., அறிவித்தது. தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அறிவித்த படி திட்டங்களை செயல்படுத்தியது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார், மணியம்மை, அன்னை தெரசா, டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி ஆகியோரின் பெயர்களில், அவர்களின் நினைவாக திருமண நிதி உதவித் திட்டம் துவக்கப்பட்டு, திருமண நிதியுதவியுடன், தாலிக்கு தங்கம் சேர்த்து வழங்கப்படுகிறது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம்: கடந்த, 2011 மே, 17ம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 25 ஆயிரம் காசோலையுடன், தாலிக்காக, 4 கிராம் தங்கமும், படித்தவர்களாக இருந்தால், 50 ஆயிரம் காசோலையுடன், 4 கிராம் தங்கம் என, இரண்டு வகையாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், 2011 - 12ல், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து, 228 பேருக்கும், 2012 - 13ல், ஒரு லட்சத்து,38 ஆயிரத்து, 656 பேருக்கும், 2013 - 14ல், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து, 35 பேருக்கும் நிதியுதவி, தங்கம் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் அக்டோபர் வரை, பயனாளிகளின் எண்ணிக்கை, ஒரு லட்சத்தை தாண்ட வில்லை.

மணியம்மை நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித் திட்டம்: டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டத்தில் வழங்கப்படும் நிதியுதவியே வழங்கப்படுகிறது. கடந்த, 2012-13ல் 6,883 பேருக்கும், 2013 - 14ல் 5,608க்கும் வழங்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை, 4,000த்தை தாண்ட வில்லை. ஜெயலலிதா, கைது செய்யப்பட்ட பின்னர், இந்த திட்டங்களில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில், அ.தி.மு.க., வுக்கான பெண்கள் ஓட்டு வங்கியில் கடும் சரிவு ஏற்படும் என, அக்கட்சியினரே புலம்புகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (20)

rajarajan - bangalore,இந்தியா
30-நவ-201423:41:16 IST Report Abuse
rajarajan டாஸ்மாக்கின் இந்த வருட இலக்கு 26 ஆயிரம் கோடி . போன வருடத்தின் வசூல் 24 ஆயிரம் கோடி. டாஸ்மாக்கிற்கு சப்பளை செய்வது மக்கள் முதல்வரின் மிடாஸ் டிஸ்டில்லரிதான். போலி வேஷம் போட்டு மக்களை சுரண்டி வருடத்திற்கு 20 ஆயிரம் கோடிக்குமேல் சம்பாதிப்பவரை ஏன்தான் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்களோ?
Rate this:
Cancel
karthick - Singara Chennai,இந்தியா
30-நவ-201419:58:54 IST Report Abuse
karthick எம் தமிழ் நாட்டில் உள்ள பெண்களின் தாளி பறிக்கும் மிடாஸ் தொழிற்சாலை நட்த்திக் கொண்டிருக்கும் ஜெயாவிற்கு எங்கள் வோட்டு கிடையாது என்று பெண்கள் சொல்ல வேண்டும்.....
Rate this:
Cancel
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
30-நவ-201409:52:40 IST Report Abuse
gummanguthu gopi எங்களைபோன்றவர்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்து இவர்களே இவர்கள் சொத்தில் கொடுபதைப்போல படம் போட்டு விளம்பரம் செய்து அதில் ஓட்டையும் வாங்கி கோடி கோடியாக சொத்து சம்பாதித்து... ஏன் இந்தெ வெத்து வீராப்பு ?? மக்களுக்காக வாழ்ந்த MGR இன் சொத்துக்களே இன்று காக்கா கூட்டம் தான் தின்று அனுபவிக்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X