மானபங்க படுத்திய இளைஞர்களுக்கு அடி உதை; ரோதக் இளம்பெண்களின் துணிச்சல்

Updated : நவ 30, 2014 | Added : நவ 30, 2014 | கருத்துகள் (21) | |
Advertisement
ரோதக்: அரியானாவில் பஸ்சில் பயணம் செய்த போது, தங்களை கிண்டல் செய்த மூன்று இளைஞர்களை, சகோதரிகள் இரண்டு பேர் , அடி கொடுத்தனர். கிண்டல் செய்தவர்கள், பெண்களை பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்ட போதும், சக பயணிகள் யாரும் சகோதரிகளுக்கு உதவவில்லை.இந்நிலையில், இந்த சம்பவம் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மானபங்க படுத்திய இளைஞர்களுக்கு அடி உதை; ரோதக் இளம்பெண்களின் துணிச்சல்

ரோதக்: அரியானாவில் பஸ்சில் பயணம் செய்த போது, தங்களை கிண்டல் செய்த மூன்று இளைஞர்களை, சகோதரிகள் இரண்டு பேர் , அடி கொடுத்தனர். கிண்டல் செய்தவர்கள், பெண்களை பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்ட போதும், சக பயணிகள் யாரும் சகோதரிகளுக்கு உதவவில்லை.இந்நிலையில், இந்த சம்பவம் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அன்று, கல்லூரியில் பி.எஸ்சி., இறுதியாண்டு படிக்கும் சகோதரிகள், தங்கள் வசக்கும் கிராமத்திலிருந்து ரோதக்கிற்கு, பஸ்சில் சென்றனர். கூட்டமாக இருந்த அந்த பஸ்சில், மூன்று பேர், சகோதரிகள் மீது ஆபாசமாக கிண்டல் செய்தனர். சகோதரிகள் இருவரும், அவர்களை எச்சரித்த போதும், அதனை பொருட்படுத்தாமல் கிண்டல் செய்து கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சகோதரிகள், தங்கள் கிண்டல் செய்தவர்களை தாக்க தொடங்கினர். சகோதரிகளில் ஒருவர், தன்னுடைய பெல்ட் மூலமும் தாக்கினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சகோதரிகளில் ஒருவர் கூறுகையில், பஸ்சில் நாங்கள் பயணம் செய்த போது, மூன்று பேரும் துண்டுச்சீட்டில் எண்களை எழுதி எங்கள் மீது வீசினர். இதற்கு எனது சகோதரிஎதிர்ப்பு தெரிவித்த போது, அவர்கள் எங்களை அவதூறாக பேச துவங்கினர். மேலும் மோசமாக எங்களை திட்டினர். இதனால் பொறுமையிழந்து அவர்களை நான் தாக்கினேன். மூன்று பேரில் ஒருவர் எனது சகோதரியின் கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டான். மற்றொருவன், எனது கழுத்தை பிடித்து நெறித்தான். இதனால் எனது சகோதரி பெல்ட் மூலம் தாக்க துவங்கினார் என கூறினார். இதன் பின்னர், மூன்று பேரும் எங்களை பஸ்சிலிருந்து கீழே தள்ளிவிட்டனர். இதில் எங்களுக்கு பலத்த காயமடைந்தது எனவும் கூறினார். இந்த சம்பவம் நடந்த போது, பஸ்சில் பயணித்த மற்ற பயணிகள், எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாக சகோதரிகள் கூறியுள்ளனர்.

பஸ்சில் நடந்த சம்பவம் தொடர்பாக சகோதரிகள் தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளனர்.

இதனிடையே, சகோதரிகளை கிண்டல் செய்து கீழே தள்ளிவிட்டவர்களின் பெற்றோர்கள், உள்ளூர் பஞ்சாயத்தை அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ishwarya - coimbatore,இந்தியா
01-டிச-201411:31:50 IST Report Abuse
ishwarya எல்லா பெண்களும் இது போல் theiriyamaga இருக்க வேண்டும். பாரதி கண்ட puthumai பெண்கள் இன்னும் irukkirarkal
Rate this:
Cancel
kalyan - CHENNAI,இந்தியா
01-டிச-201411:09:15 IST Report Abuse
kalyan இங்கு நிறைய வாய்ச்சவால் வீரர்கள் கனல் கக்க வசனம் எழுதியிருக்கிறார்கள்... அந்த இடத்துலே இருந்தா தெரியும் இதுலே எவ்வளவு உதார் எவ்வளவு உண்மைன்னு.. 300 பேர் பிலாட்பரத்துலே நிக்கும்போது திடீர்னு ஒரு ஆள் தண்டவாளத்துலே இறங்கி கல்லெல்லாம் எடுத்து ஒரு விளக்கு சன்னல் பாக்கி இல்லாம வீசி அடிச்சுகிட்டே ஒரே கட்சி தலைவர் பேரை உரக்கசொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணினான்.. அவனை ஒருத்தரும் கிட்டே கூட நெருங்கல்லே... கடைசீயிலே ரயில்வே போலீஸ் வதுதான் அவனை புடிச்சாங்க.. இதுபேர் கோழைத்தனம் இல்லே.. விவேகம்... அதுபோலவே அந்த பெண்களை தாக்கும்போது டிரைவர் வண்டியை நிறுத்தியிருந்தா அவனுங்க ஓடியிருப்பானுங்க.. ஊருக்கு ஊர் ரவுடிக்கூட்டம் நாளுக்குநாள் பெருகிக்கிட்டிருக்கும்போது யார் பின்னாடி யார் இருக்காங்கன்னு தெரிஞ்சு கிட்டுதான் மோத முடியும்...
Rate this:
Cancel
mukundan - chennai,இந்தியா
01-டிச-201410:09:50 IST Report Abuse
mukundan நம்ம ஊரா இருந்த ஒரு அடிமை சிக்கிடான்னு அவன் மேல எல்லாரும் பாஞ்சு இருப்போம்... அவனும் பயந்து பொய் மன்னிப்பு கேட்டு இருப்பான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X