பா.ஜ., கொள்கை: ஸ்டாலின் விமர்சனம்

Updated : டிச 02, 2014 | Added : நவ 30, 2014 | கருத்துகள் (24) | |
Advertisement
'தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் கூட்டணி அமையுமா?' என்ற கேள்விக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பதில் அளித்தார்.ஸ்டாலின், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டி:வரும், 2016 சட்டசபை தேர்தலில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ., உடன் கூட்டணி அமைப்போமா என்பது பற்றி, இப்போதே எதுவும் தெரிவிக்க முடியாது. அதற்கு சரியான நேரம் இது அல்ல.சட்டசபை
பா.ஜ., கொள்கை: ஸ்டாலின் விமர்சனம்

'தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் கூட்டணி அமையுமா?' என்ற கேள்விக்கு, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

ஸ்டாலின், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டி:வரும், 2016 சட்டசபை தேர்தலில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் அல்லது பா.ஜ., உடன் கூட்டணி அமைப்போமா என்பது பற்றி, இப்போதே எதுவும் தெரிவிக்க முடியாது. அதற்கு சரியான நேரம் இது அல்ல.சட்டசபை தேர்தலுக்கு இன்னும், 16 மாதங்களே உள்ளதால், நான், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்தித்து, கட்சியை பலப்படுத்தி வருகிறேன். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் விலகியவர்கள் வருத்தம் தெரிவித்து, கட்சிக்கு மீண்டும் திரும்பினால், அவர்களை ஏற்றுக் கொள்ள, தி.மு.க., எப்போதும் தயாராக இருக்கிறது.

தேர்தலில் வெற்றி பெற, பா.ஜ., கொண்டுள்ள பார்முலா, தமிழகத்தில் பலிக்காது. மத்திய அரசு, பணக்கார பொருளாதார கொள்கைகளை கொண்டதாக உள்ளது. குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடையும் வகையில், பொருளாதார கொள்கைகளை கொண்டுள்ளனர். இதனால், பல தொழிலதிபர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதோடு, ஏழைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

கருணாநிதியை சந்தித்தஅழகிரி கோஷ்டியினர்:
நீண்ட நாட்களுக்கு பின், கருணாநிதியை அழகிரி ஆதரவாளர்கள் சந்தித்து பேசியது, அக்கட்சியில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளன.கடந்த வாரம், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மதுரை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, மாநகராட்சியின், 100 வார்டுகளுக்கும் செயலர் உட்பட அனைத்து பதவிகளுக்கும் நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. இதில், அழகிரி ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர்.இந்நிலையில், மதுரை நகர் தி.மு.க.,வில் ஒன்பது பகுதிகளுக்கும் நிர்வாகிகள் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நவ., 29ல் தேர்தல் நடக்க இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அழகிரி ஆதரவாளர்கள் சிவக்குமார் தலைமையில், 300 பேர் சென்னையில் நேற்று கருணாநிதியை சந்தித்து முறையிட்டனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:மதுரையில் நிர்வாகிகள் பட்டியல் வெளியானதில் நடந்த கோல்மால்கள் குறித்து, தலைவர் கருணாநிதியை சந்தித்து, ஆதாரத்துடன் முறையிட்டோம்.பட்டியல் செல்லாது என, பின்னர் அறிவித்தார். இது தொடர்பாக, கட்சியின் பொதுச்செயலர் அன்பழகனையும் சந்தித்து முறையிட்டோம். அவரும் அதையே சொன்னார். இதுதொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (24)

manu putthiran - chennai ,இந்தியா
01-டிச-201409:04:14 IST Report Abuse
manu putthiran ஸ்டாலின் பொருளாதாரம் குறித்து பேசுவது அதிர்ச்சியாக உள்ளது..ஒரு ஊழல் விஞ்ஞானியின் பிள்ளை ஒரு திட்டத்தை செயல்படுத்தும்போது அதில் எவ்வளவு தமது குடும்பத்திற்கும்,கழக உடன்பிறப்புக்கும் கிடைக்கும் என்பதில் மட்டுமே கவனம் கொள்ள வேண்டும்..
Rate this:
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
01-டிச-201407:53:11 IST Report Abuse
அறிவா லயதாத்தா என்ன ஒரு டயலாக். ? //மத்திய அரசு, பணக்கார பொருளாதார கொள்கைகளை கொண்டதாக உள்ளது. குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடையும் வகையில், பொருளாதார கொள்கைகளை கொண்டுள்ளனர்.//ஆமாம் உங்க ஆட்சியில் சன் டிவி தவிர மற்றவை தொழிலே செய்யமுடியாத நிலை ஏற்பட்டது உண்மைதானே ? அதுபோல உங்க வட்ட மாவட்டங்கள் புறம்போக்கு நிலத்தை ஆட்டயப்போட்டு விற்ற தொழில் இப்போது ஜெஜெனு நடக்குதே 2 ஜி யில் எத்தனை லெட்டர் பேடு தொழிலதிபர்களை வளர்த்தீர்கள் என்பது வெட்ட வெளிச்சம் சாராய விபச்சாரத் தொழில்கள் தமிழத்தில் மிகுந்த வளர்ச்சியடைந்ததற்க்கு உங்க குடும்ப ஆட்சிதானே காரணம் ( டாஸ்மாக்கின் முக்கிய மது உற்பத்தி மற்றும் சப்பளையர்கள் ஜெகத்ரட்சகன், சரத்ரெட்ட்டி, ஜெயமுருகன் டி ஆர் பாலு ஆகியோர் திமுகதானே? அண்ணா வழியிலல்லவா ஆட்சி செய்தீர்கள்
Rate this:
Cancel
ஷான் - mayiladuthurai ,இந்தியா
01-டிச-201407:35:07 IST Report Abuse
ஷான் தோப்பனார் பாராட்டுறார் ,பிள்ளையாண்டான் திட்டறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X