திருவள்ளுவர் பிறந்த தின விழா: மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி

Updated : டிச 02, 2014 | Added : நவ 30, 2014 | கருத்துகள் (47) | |
Advertisement
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:'திருவள்ளுவர் பிறந்த தினம், தேசிய அளவில் கொண்டாடப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, வரவேற்று பாராட்டத்தக்க அறிவிப்புகளில் ஒன்று. இதை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி. திருக்குறளை தேசிய நுாலாக அறிவித்து, தமிழர்களின் மற்றொரு நீண்ட காலக் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.சட்டசபையில் எனக்கு,
 திருவள்ளுவர் பிறந்த தின விழா: மத்திய அரசுக்கு கருணாநிதி நன்றி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:'திருவள்ளுவர் பிறந்த தினம், தேசிய அளவில் கொண்டாடப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, வரவேற்று பாராட்டத்தக்க அறிவிப்புகளில் ஒன்று. இதை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி. திருக்குறளை தேசிய நுாலாக அறிவித்து, தமிழர்களின் மற்றொரு நீண்ட காலக் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

சட்டசபையில் எனக்கு, சிறப்பு இருக்கை அமைத்து தர வேண்டும் என, தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். எந்தக் கட்சியில் இருந்தாலும், அவர் குமரி அனந்தனின் மகள். அவருக்குரிய அரசியல் பண்போடு, அதை தெரிவித்துள்ளார்.கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகியவை இந்த ஆட்சியில், சர்வ சாதாரணமாக நடக்கிறது. தலைமை செயலகம், தமிழக மக்களின் நிர்வாக அலுவலகம் என்ற நிலை மாறி, அ.தி.மு.க.,வினர் மட்டும் சென்று வருவதற்கான, செயலகமாகி வருகிறது. கர்நாடகாவை போல, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை, தமிழகத்திலும் துவக்க வேண்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து (47)

Devar - Abu Dhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
03-டிச-201414:15:49 IST Report Abuse
Devar மிக தெளிவாக பாராட்ட வேண்டியதை பாராட்டி வரவேற்கும் பண்பு கலைஞர் ஒருவரிடமே உள்ளது. வளர்க உங்கள் தொண்டு. தமிழகளுக்காக இந்த வயதிலும் ஓய்வில்லா உழைப்பிற்கு மக்கள் இன்னுமொரு முறை உங்களுக்கு முடி சூட்டுவார்கள். இது உண்மை, சத்தியம், சாத்தியம்.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
03-டிச-201408:21:55 IST Report Abuse
Rajarajan குமரியானந்தனுக்கே MLA சீட்டிற்கு பதிலாக மிட்டாய் கொடுத்து, இதயத்தில் இடம் கொடுத்தவர்தானே இவர்.
Rate this:
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
03-டிச-201408:19:07 IST Report Abuse
Rajarajan ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஜாதி / கட்சி தலைவர்களின் வயிற்று பிழைப்புக்குத்தான் உதவும். உண்மைலேயே பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும் எனில், இவர்களுக்குள்ளேயே பொருளாதார ரீதியாக முன்னேறியவர்களை விலக்கி, அடித்தட்டில் இருப்பவர்களுக்கு வாய்ப்பளித்து கைதூக்கி விடவேண்டும். தற்போது உள்ள கட்சிகளின் தலைவர்கள் எல்லாருமே பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் ஒருவரே. இது பெரும்பாலான MLA / MP / அமைச்சர்களுக்கும் / அதிகாரிகளுக்கும் பொருந்தும். இவர்கள்தான் பொருளாதார ரீதியாக முன்னேறி விட்டனரே, இவர்களுக்கு இன்னும் ஜாதிவாரி இடவொதுக்கீடு / சலுகைகள் எதற்கு ?? வேண்டாம் என்று சொல்ல யாருக்கேனும் மனம் வருகிறதா ??? இப்படி ஜாதி பெயரை சொல்லி சொல்லியே, ஒரு குறிப்பிட்ட பிரிவினரை பிற்படுதபட்டவன் / தாழ்த்தபட்டவன் என்று சமுதாயத்திலிரிந்து பிரித்து வைத்து, அவர்களுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையை தொடர்ந்து தக்கவைக்கின்றனர். இதை கண்டிக்கவேண்டிய / தட்டிகேட்கவேண்டிய இந்த சமுதாய மக்களோ, தாங்கள் தொடர்ந்து அரசின் இடவொதுக்கீடு / சலுகைகளை அனுபவிக்கவேண்டி, இதை தொடர்ந்து விரும்பி வருகின்றனர் போலும். இவர்களின் இந்த பலவீனம்தான், அரசியல்வாதிகளின் மிகப்பெரிய பலம். தேவை இல்லாமல் இவர்களின் வாழ்க்கையில் அரசியல்வாதிகள் தலையிட்டு, இவர்களை தொடர்ந்து கேவலபடுதுகின்றனர். ஜாதி கலவரத்தை ஊக்குவிக்கின்றனர். ஏனெனில், பல ஜாதி தலைவர்கள், தனியார் நிறுவனங்களில் வசூல் செய்வதும் உண்மையே. இவர்களை கண்டு பயந்தே, தனியார் நிறுவனங்கள் சில பிரிவினரை வேலைக்கு எடுக்க தயங்குவதும் நிதர்சன உண்மை. ஆகமொத்தம், தங்கள் ஜாதியினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக கூறிக்கொண்டே, மறைமுகமாக இவர்களை முன்னேரவிடுவதில்லை என்பதே உண்மை. அரசியல் சட்டத்தில் சில பிரிவினருக்கு இடவொதுக்கீடு மற்றும் சலுகைகள் உறுதிபடுத்தப்பட்ட பின்பு இன்னும் எதற்கு ஜாதி கட்சிகள் மற்றும் சங்கங்கள் ??? இதை இந்த பிரிவினரே விரும்பும்போது, மற்ற உயர்பிரிவினரை எல்லாவற்றிற்கும் குறைகூறி என்ன பயன் ?? உண்மையில் உயர்பிரிவு என்று கூறப்படும் சாதியினர்தான் கொடுத்துவைத்தவர்கள். சுதந்திர பறவைகள். எந்த ஒரு இடவொதுக்கீடு / சலுகை இல்லை. எனவே எந்த நிர்பந்தமும் இல்லை. எந்த அரசியல் தலைவரையும் / கட்சியையும் / சங்கத்தையும் சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் தொல்லையும் இல்லை. தன் கையே தனக்குதவி. தானே ராஜா, தானே மந்திரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X