பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

Updated : டிச 01, 2014 | Added : டிச 01, 2014 | கருத்துகள் (20) | |
Advertisement
புதுடில்லி:எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 67.01 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 96 காசுகள் குறைக்கப்பட்டு, 66.05 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல், 56.84 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 91 காசுகள் குறைக்கப்பட்டு, 55.93 ரூபாயாக நிர்ணயம்
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது

புதுடில்லி:எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. நேற்று நள்ளிரவு முதல், இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 67.01 ரூபாயாக இருந்தது. இது, தற்போது, 96 காசுகள் குறைக்கப்பட்டு, 66.05 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல், 56.84 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 91 காசுகள் குறைக்கப்பட்டு, 55.93 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டுள்ளதால், உள்நாட்டில், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் முதல் தற்போது வரை, பெட்ரோல் விலை, ஏழு முறை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 18ம் தேதி, டீசல் மீதான விலை கட்டுப்பாடு நீக்கப்பட்டு, அதன் விலை, லிட்டருக்கு, 3.37 ரூபாய் குறைக்கப்பட்டது. நவ., 1ம் தேதி, மீண்டும் டீசல் விலை லிட்டருக்கு, 2.25 ரூபாய் குறைக்கப்பட்டது.தற்போது, மூன்றாவது முறையாக, டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த நவ., 13ல், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை, லிட்டருக்கு, 1.50 ரூபாய் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
c.viswanathan - chennai,இந்தியா
01-டிச-201416:09:16 IST Report Abuse
c.viswanathan The reduction in price of petroleum products is due to international price reduction. What is the action taken by Ministry or petroleum companies to reduce the cost of their products comparing with industry cost internationally/simillar countries.The petroleum company simply fixes prime keeping their margin.We request Hon Prime minister to look into this issue since petroleum products are used by common man
Rate this:
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
01-டிச-201413:29:43 IST Report Abuse
P. SIV GOWRI மிகவும் நல்லது. எது செய்தாலும் குற்றம் சொல்லவே ஒரு கூட்டம்
Rate this:
Cancel
srini - chennai,இந்தியா
01-டிச-201408:29:45 IST Report Abuse
srini வெறும் 96 பைசா ஏமாற்று வேலை. குறைந்தது 5 ரூபாய் குறைத்திருக்க வேண்டும். எண்ணெய் நிறுவங்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X