பள்ளிக்கூடத்தில் பழகலாம் பசுமைப் பழக்கம்!

Updated : டிச 02, 2014 | Added : டிச 01, 2014 | கருத்துகள் (2) | |
Advertisement
"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற பிரபலமான திரைப்பாடல் வரிகள் ஒரு மனிதனை உருவாக்குவதில் ஒரு அன்னையின் பங்கு என்ன என்பதை உணர்த்துகிறது. ஆனால், குழந்தைகள் தங்கள் இளமைப் பருவத்தின் பெரும்பகுதியை பள்ளிக் கூடத்தில்தான் செலவழிக்கிறார்கள். ஒரு மனிதனை உருவாக்குவதில் பள்ளிக் கூடங்கள் மிக
பள்ளிக்கூடத்தில் பழகலாம் பசுமைப் பழக்கம்!

"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற பிரபலமான திரைப்பாடல் வரிகள் ஒரு மனிதனை உருவாக்குவதில் ஒரு அன்னையின் பங்கு என்ன என்பதை உணர்த்துகிறது. ஆனால், குழந்தைகள் தங்கள் இளமைப் பருவத்தின் பெரும்பகுதியை பள்ளிக் கூடத்தில்தான் செலவழிக்கிறார்கள். ஒரு மனிதனை உருவாக்குவதில் பள்ளிக் கூடங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
நாம் பள்ளிக்கூடத்தில் பழகும் பழக்கங்களும் கற்ற பாடங்களும் நம் வாழ்நாள் உள்ளவரை மறப்பதில்லை. அவை ஒவ்வொன்றும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்தே கிடக்கின்றன. அந்த வகையில், பள்ளிப் பருவத்திலேயே ஒரு மாணவன் சுற்றுச் சூழல் விழிப்புணர்வைப் பெற்றால் எப்படியிருக்கும்...?! அந்த மாணவனால் வருங்கால தலைமுறையின் சுற்றுச்சூழல் நிச்சயம் காக்கப்படும். ஆம்! இதற்காக ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் பள்ளிகளில் மேற்கொண்டுள்ள முயற்சியே பசுமைப் பள்ளி இயக்கம்.

ஈஷாவின் பசுமைப்பள்ளி இயக்கம்
2011ல் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம் துவங்கப்பட்ட பசுமைப் பள்ளி இயக்கம், இதுவரை பாண்டிச்சேரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 1450 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதிலும் 1450பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டு சுமார் 21 லட்சம் மரக்கன்றுகள் நடப்படுவதற்கு இத்திட்டம் துணை நின்றுள்ளது. இதோடு, ஒவ்வொரு பள்ளியிலும் "தேசிய பசுமைப் படை"யில் (ழிநிசி) உள்ள 50 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, அதன் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வருடமும் 2000 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தத் திட்டத்தில் இணைந்துள்ள மாணவர்கள் தாங்களாகவே தங்கள் பள்ளிகளில் நாற்றுப் பண்ணைகளை உருவாக்கி மரக்கன்றுகளை நடுவார்கள். விதைகளைச் சேகரித்து மண்ணில் ஊன்றுவதிலிருந்து, அது கன்றாக வளர்ந்து மரமாகும் வரை தாங்களே பராமரித்து வளர்ப்பதால், அந்த மாணவர்களுக்கு மரங்கள் உற்ற தோழனாகி விடுவதோடு, அவர்களிடம் மரங்களை வெட்டக் கூடாது என அறிவுறுத்த வேண்டிய அவசியமிருக்காது. மேலும், தாங்கள் உருவாக்கிய மரக்கன்றுகளை தங்கள் ஊர்களில் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நடுவதற்காக கொடுக்கும்போது, அந்தச் சின்னஞ்சிறு உள்ளங்களின் மகிழ்ச்சியை சொல்லிட வார்த்தைகள் இல்லை!

மர நேயமும் மனிதநேயமும் வளரட்டும்!
மாணவப் பருவத்தில் அவர்களிடத்தில் உருவாக்கப்படும் இந்த பசுமை விழிப்புணர்வானது எதிர்காலத்தில் சுற்றுச் சூழலைக் காப்பதற்கு அவர்களுக்கு ஒரு தூண்டுகோலாய் இருக்கும் என்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஈஷா பசுமைக் கரங்களுக்கு, தன்னார்வத் தொண்டர்கள் பற்றாக்குறைதான் இப்போது பிரச்சனை. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் இந்தப் பசுமைப் பழக்கத்தை நீங்களே உருவாக்கலாம். ஒரு செடி விதையிலிருந்து வெளிப்பட்டு முளைவிட்டு வளருவதைக் கவனித்து வளர்க்கும் குழந்தைகள், எதிர்காலத்தில் மரங்களை நேசிக்கும் மனிதராக மட்டுமல்லாமல் சக உயிர்களை நேசிக்கும் மனிதநேயமிக்கவராகத் திகழ்வார்கள் என்பதில் ஐயமேதுமில்லை!
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உங்களுக்கு விருப்பமும் நேரமும் இருந்தால் ஈஷா அன்பர்களுடன் இணைந்து நாற்றுப் பண்ணைகளில் தன்னார்வத் தொண்டு புரிந்திட முடியும். பசுமைப் பள்ளி இயக்கம் பற்றி மேலும் தகவல் பெறவும், ஈஷா நாற்றுப் பண்ணைகளிலிருந்து மரக்கன்றுகளைக் குறைந்த விலையில் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
தொ. பே. 94425 90062

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
02-டிச-201411:29:38 IST Report Abuse
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. மிக சிறந்த இயக்கம் . மரங்களை வளர்க்க துணை நிற்கும் இந்த இயக்கத்தை பாராட்ட வார்த்தைகளே இல்லை . சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த புவியை காக்க மக்களை தூண்டும் இந்த இயக்கம் எல்லா பள்ளிகளிலும் விரிவடைந்து அனைவரும் சூழல் பாதுகாப்பில் பங்கு பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
B M Jawahar Muthukrishnan. - Nagapattinam,இந்தியா
02-டிச-201408:16:27 IST Report Abuse
B M Jawahar Muthukrishnan. எதிர்கால இந்தியா ஒரு பசுமை இந்தியா என்பதில் ஐயமில்லை. இறைவன் அருளால் வாழ்க வளர்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X