ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தினர்: கொலை வழக்கில் நடிகை அதிர்ச்சி மனு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தினர்: கொலை வழக்கில் நடிகை அதிர்ச்சி மனு

Added : டிச 05, 2014

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் ரெனால்டு பீட்டர் பிரின்சோ, 30. இவர் சினிமா தயாரிக்க, சென்னை வந்து, மதுரவாயல் பகுதியில், தங்கியிருந்தார். கடந்த ஜனவரியில், திடீரென காணாமல் போனார். மர்ம நபர்களால், ரெனால்டு பீட்டர் பிரின்சோ கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டது, போலீசாருக்கு தெரிய வந்தது. சென்னையில், இவருடன், மனைவி போல வாழ்ந்து வந்த, நடிகை சுருதி என்ற சந்திரலேகா, உமாசந்திரன், ஜான்பிரின்சன், உட்பட பலர் சேர்ந்து, ரெனால்டு பீட்டர் பிரின்சோவை கொலை செய்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.நடிகை சுருதி, சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு: திருமணம் செய்யாமல், ரெனால்டுடன் மனைவியாக வாழ்ந்து வந்தேன். அவரை கொலை செய்த வழக்கில், ஐந்தாவது குற்ற வாளியாக என்னையும் போலீசார் சேர்த்து விட்டனர். கொலை செய்யப்பட்ட ரெனால்டு, உமாசந்திரன், ஜான்பிரின்சன், ஹானஸ்ட்ராஜ் ஆகியோர், 'ஆன் - லைன்' தொழிலில், என்னை மேலாளராக இருக்க, கட்டாயப்படுத்தினர். இளம்பெண்களை வைத்து, ஆபாச படம் எடுத்தனர். என்னையும் ஆபாசமாக நடிக்க வேண்டும் என்றனர். நான் சம்மதிக்கவில்லை; கொலை மிரட்டல் விடுத்தனர். ரெனால்டிடம் இருந்து, 'ஆன் - லைன்' தொழிலை அபகரிக்க, அவரை உமாசந்திரன், ஜான்பிரின்சன் மற்றும் சிலர் சேர்ந்து, கொலை செய்தது எனக்கு தெரியவந்தது. நான் அப்பாவி. எனக்கு ஜாமின் வழங்கவேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு: கொலை வழக்கில், மனுதாரர், செப்., 5ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார், இதுவரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. எனவே, நடிகை ஸ்ருதிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது. அவர், சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். தலைமறைவாகிட கூடாது; இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X