'நதியே... நதியே... காதல் நதியே... நீயும் பெண் தானே...' என நதியை பெண்ணுடன் ஒப்பிட்டு 'ரிதம்' வாசித்து... அகிலத்தை திரும்பி பார்க்க வைத்தவர் டைரக்டர் வசந்த். 'இயக்குனர் சிகரம்' பாலசந்தரிடம் உதவியாளராக பணியை துவக்கியவர். சுதா ரகுநாதனை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தவர். யதார்த்தமான படங்களை வழங்கி கொண்டிருக்கிறார். சூர்யா, ஜோதிகா, சிம்ரன் என 18 பேரை அறிமுகம் செய்தவர்.'நடை உடை பாவனை' படத்தை இயக்கும் வசந்த் காரைக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். தினமலர் வாசகர்களுக்காக அவருடன் பேசியதிலிருந்து...* பாலசந்தரிடம் பிடித்ததுஅவர் என் குரு. அவருக்கும், எனக்குமான உறவை குறிப்பிட முடியாது. அவர் என்னை நண்பர் என்று கூறுகிறார். 20 வயதில் அவரிடம் சென்றேன். 28 ஆண்டுக்கும் பிறகும் அவர் என்னை நண்பர் என கூறுகிறார். இதைவிட அவரிடம் வேறு என்ன பிடிக்க வேண்டும்.* நீண்ட காலம் நடிக்காமல் தற்போது நடிக்க வந்ததில் விசேஷம் ஏதுமுண்டாநடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது இஷ்டமில்லை. தற்போது 'வை ராஜா வை' படத்தில் நடிக்க ஐஸ்வர்யா தனுஷ் கேட்டார். ஒப்புக்கொண்டேன். நடிக்க சென்ற பிறகு நடிப்பது பிடித்து விட்டது.* புதுவரவு நடிகர்கள் பலருக்கு நடிக்க தெரியவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளதே?விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன் போன்றோர் நன்றாக நடிக்கிறார்களே.* குறுகிய கால வெற்றி படம் பற்றி?'ஆசை' சினிமா 285 நாள் ஓடியது. அது அந்தக் கால கட்டத்தில் பெருமை. தியேட்டர் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஒரு வாரத்தில் கலெக்ஷனை எடுக்கவில்லை எனில், இன்டர்நெட், திருட்டு வி.சி.டி., என படம் வெளியாகி விடுகிறது. இதனால் அதிக தியேட்டர்களில் வெளியிடுகிறோம்.* மறக்க முடியாத அனுபவம்...பெண்ணும்... நதியும்... ஒன்று தான். நதியே தாயாக வலம் வருகிறார். 'ரிதம்' படத்தில் 'நதியே, நதியே காதல் நதியே நீயும் பெண்தானே' என்ற பாடலுக்கு தண்ணீரை எல்லா வடிவத்திலும் காண்பித்து, உடல் நனைய வேண்டும் என நினைத்தேன். அதே போல் அமைந்தது, பாட்டும் ஹிட்டாச்சு. 'சத்தம் போடாதே' 'அழகு குட்டி செல்லம்' ஆகிய படங்களில் குழந்தைகளின் சிரிப்பை வைத்து பாட்டு எடுத்தது மறக்க முடியாதது.தொடர்புக்கு: smavasanth@gmail.com, directorvasanthsai@gmail.com.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE