ரூ.80 கோடி நன்கொடை அள்ளிய தி.மு.க.,: தேர்தல் கமிஷனில் அறிக்கை

Updated : டிச 09, 2014 | Added : டிச 08, 2014 | கருத்துகள் (51) | |
Advertisement
புதுடில்லி : நன்கொடை பெற்ற விவரம் தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு, கட்சிகள் அளித்துள்ள தகவலின் படி, கடந்த நிதியாண்டில் காங்கிரஸ், 66 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. தி.மு.க., 79.85 கோடி நன்கொடை பெற்ற போதிலும், 1.05 கோடி ரூபாய்க்கு தான் கணக்கு காண்பித்துள்ளது.தெரிவிக்கவில்லை:நன்கொடை விவரங்களை, பா.ஜ., தெரிவிக்காததால், அந்த கட்சி பெற்ற நன்கொடை விவரங்கள் தெரியவில்லை.இந்த
ரூ.80 கோடி நன்கொடை அள்ளிய தி.மு.க.,: தேர்தல் கமிஷனில் அறிக்கை

புதுடில்லி : நன்கொடை பெற்ற விவரம் தொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு, கட்சிகள் அளித்துள்ள தகவலின் படி, கடந்த நிதியாண்டில் காங்கிரஸ், 66 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. தி.மு.க., 79.85 கோடி நன்கொடை பெற்ற போதிலும், 1.05 கோடி ரூபாய்க்கு தான் கணக்கு காண்பித்துள்ளது.


தெரிவிக்கவில்லை

:நன்கொடை விவரங்களை, பா.ஜ., தெரிவிக்காததால், அந்த கட்சி பெற்ற நன்கொடை விவரங்கள் தெரியவில்லை.இந்த வரிசையில், உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சி, ஒரு ரூபாய் கூட வெளியில் இருந்து நன்கொடை பெறவில்லை.


அளிக்காத கட்சிகள்:

கடந்த நவம்பர் 30க்குள் நன்கொடை விவரங்களை கட்சிகள் அறிவிக்க கெடு விதிக்கப்பட்டிருந்தது. அந்த தேதிக்குள் விவரங்களை அளிக்காத கட்சிகள் விவரம்:பா.ஜ., சந்திரசேகர ராவின் டி.ஆர்.எஸ்., சரத் யாத வின் ஐக்கிய ஜனதாதளம், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், நிதின் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம், ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, ஜம்மு - காஷ்மீரின் மக்கள் ஜனநாயக கட்சி.

நன்கொடை பெற்ற கட்சிகள்
மம்தாவின் திரிணமுல் காங்.,- 1.40 கோடி ரூபாய்
அ.தி.மு.க.,- 1.03 கோடி ரூபாய்
தி.மு.க., - 80 கோடி ரூபாய்
மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மிஇந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்சிவசேனா, தெலுங்கு தேசம், சிபு சோரனின் ஜே.எம்.எம்.,
லாலுவின் ஆர்.ஜே.டி., முலாயமின் சமாஜ்வாதி

Advertisement


வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
V Nath - PCMC,இந்தியா
08-டிச-201421:25:11 IST Report Abuse
V Nath இவையெல்லாம் கணக்கு 'காட்டவேண்டுமே' என்பதற்கான கணக்குகள். அந்த கட்சிக்கான மக்களவை தேர்தல் செலவு அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறேன் என்று ஒரு கிரானைட் புள்ளி பேரம் பேசினாரே? பேரம் படிந்திருந்தால் ரூ 1000 கோடி கிடைத்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அதை கணக்கில் காட்ட முடியுமா? கடற்கரையிலிருந்து 2000 மற்றும் சில உதிரிகள் எல்லாம் சேர்த்து 5000 கோடி இருக்கும். தொகுதிக்கு 100 கோடி என 4000 போக 1000 மிச்சம்.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-டிச-201421:21:13 IST Report Abuse
Pugazh V பிஜேபி சட்ட விரோதமாக கணக்கே காட்டாத செய்தி, திமுக மீதான போலிக் குற்றச் சாட்டின் மூலம் மறைக்கப்படுகிறது. யோசிக்கும் திறன் இல்லாத அடிமை ஜனம் கும்மி அடிக்கிறது.
Rate this:
skanda kumar - bangalore,இந்தியா
09-டிச-201414:54:30 IST Report Abuse
skanda kumarதி மு க பற்றி சொன்னால் அது போலி குற்ற சாட்டு. என்றால் ஏன் தமிழின தலைவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? எதற்கும் உடனே மறுக்கும் பாயும் தலை, மகன், மகள், இதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை? மக்கள் கேட்கிறோம். பி ஜி பி விடுங்கள். உங்கள் நிலைமை என்ன?...
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
08-டிச-201418:31:18 IST Report Abuse
g.s,rajan நேர்மைன்னா அது ஒரு குளியல் சோப்புத் தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X