ஓட்டல் கட்டுறாரு பினாமி... ஓட்டு வாங்குறப்ப வரும் சுனாமி!

Added : டிச 09, 2014
Share
Advertisement
''மித்து! எல்லாமே ரொம்ப 'சீப்'பா இருக்கேடி...இதே அயிட்டங்களை, 'மால்'ல வாங்குனா, பர்ஸ் கிழிஞ்சிரும்...!,'' தாமஸ் வீதியிலுள்ள பல்வேறு கடைகளில் புகுந்து, குட்டி குட்டி அன்பளிப்புப் பொருட்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்த மித்ராவிடம் கேட்டாள் சித்ரா.''ஆமாக்கா! கிறிஸ்துமஸ், நியூ இயர்...அடுத்து பொங்கல் வருது...எங்க ஏரியா குட்டீஸ்களுக்கெல்லாம் சின்னச் சின்ன போட்டி
ஓட்டல் கட்டுறாரு பினாமி... ஓட்டு வாங்குறப்ப வரும் சுனாமி!

''மித்து! எல்லாமே ரொம்ப 'சீப்'பா இருக்கேடி...இதே அயிட்டங்களை, 'மால்'ல வாங்குனா, பர்ஸ் கிழிஞ்சிரும்...!,'' தாமஸ் வீதியிலுள்ள பல்வேறு கடைகளில் புகுந்து, குட்டி குட்டி அன்பளிப்புப் பொருட்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்த மித்ராவிடம் கேட்டாள் சித்ரா.
''ஆமாக்கா! கிறிஸ்துமஸ், நியூ இயர்...அடுத்து பொங்கல் வருது...எங்க ஏரியா குட்டீஸ்களுக்கெல்லாம் சின்னச் சின்ன போட்டி வச்சு, 'கிப்ட்' கொடுப்பேன். ஹாஃப் இயர்லி லீவ் விட்டா, எங்க வீட்டுல ஒரே மழலைப்பட்டாளமாத்தான் இருக்கும்,'' என்றபடி, பெரிய பட்டியலை கையில் வைத்துக்கொண்டு, 'ஷாப்பிங்' வேட்டை நடத்திக்கொண்டிருந்தாள் மித்ரா.
''நல்ல விஷயமா இருக்கே...இந்த மாதிரி விளையாட்டுப் போட்டிகளை நடத்தியே, ஏகப்பட்ட 'யூத்'களை நம்மூர் வி.ஐ.பி., வசப்படுத்தி வச்சிருக்காரு தெரியுமா?,'' என்றாள் சித்ரா.
''அது யாருக்கா...'யூத்'களை 'கவர்' பண்ற வி.ஐ.பி.,?,'' என்று ஆச்சரியமாய்க்கேட்டாள் மித்ரா.''நம்ம லோக்கல் மினிஸ்டர் தான். முதல்ல அவரோட தொகுதிக்குள்ள இருக்கிற சின்னப் பசங்க யாரு வந்து, என்ன விளையாட்டுப் பொருள் கேட்டாலும் வாரி வழங்குவாராம். இப்போ, புறநகர் மாவட்டம் முழுக்க, இந்த சேவையை விஸ்தரிச்சிருக்காராம்!,'' என்றாள் சித்ரா.
''சின்ன வயசுப்பசங்க, தண்ணியடிச்சு கெட்டுப் போறதுக்கு, இப்பிடி விளையாட்டுல 'டைவர்ட்' பண்ணிட்டா, பிரச்னையே இல்லையே...நிஜமாவே இது நல்ல விஷயம் தான்!,'' என்றாள் மித்ரா.
''தண்ணின்னு ஞாபகப்படுத்தி விட்டுட்ட... 'டாஸ்மாக் மேட்டரை' முதல்ல சொல்லிர்றேன். மாநகர் மாவட்டத்துல 'பார்' விவகாரத்துல, இன்னமும் கருப்பு கவுன்சிலரோட கைதான் ஓங்கியிருக்காம். அவர் மட்டுமே, சிட்டியில முக்கியமான இடத்துல 10 கடை நடத்துறாராம். அதே கடைகளை இப்பவும் தக்க வச்சுக்கிட்டாராம். அந்த வகையில மட்டும், அவருக்கு மாசம் 10 லட்சத்துக்கு மேல வருமானம் வரும்கிறாங்க...!,'' என்றாள் சித்ரா.
''அவரு கவுன்சிலராகுறதுக்கு முன்னாடி, எப்பிடி இருந்தார்ன்னு எல்லாருக்கும் தெரியும். ஆளும்கட்சியில சம்பாதிக்கிறவுங்களே தான் மேல மேல சம்பாதிச்சிட்டு இருக்காங்கன்னு கோயம்புத்துார்ல ஒரே குமுறலா இருக்கு!,'' என்றாள் மித்ரா.
''கரெக்ட் தான்க்கா! கோயம்புத்துார்ல இருக்கிற ஆளும்கட்சி வக்கீல்கள் பலரும், இதே மாதிரித்தான் புலம்புறாங்க. ஆளும்கட்சி வக்கீல் ஒருத்தர்ட்ட, ரெண்டு முக்கியமான பதவி இருக்கிறதால, அவரு மட்டும் தட்டி எடுக்குறாராம்!,'' என்றாள் சித்ரா.
''மூன்று முகத்துக்கு ஒரு பதவி போலயிருக்கு...!,'' என்று சிரித்த மித்ரா, ''அக்கா! நீ சொன்ன கவுன்சிலரு, 'ரிசர்வ் சைட்'டை தன்னோட மனைவி பேருல பத்திரம் பண்ணிட்டாருன்னு ஒரு பிரச்னை கிளம்புச்சே. அதைக் கிளப்பி விட்டதே, ஆளும்கட்சிக்காரங்க தான். அவரோட வார்டுல, உலக நாயகன் பேருல ஒருத்தர் இருக்காராம். வார்டு செயலாளர் பதவியைக் கைப்பத்தணும்னு அவரு தான் இந்த விஷயத்தைக் கொளுத்திப் போட்ருக்காருங்கிறாங்க!,'' என்றாள் மித்ரா.
''அப்படின்னா அந்தப் புகார்ல உண்மை இல்லையா?,''
''அதென்னவோ உண்மை தான். ஆனா, டிஎம்கே ஆட்சியிலதான் இந்த தப்பே நடந்திருக்கு. அவுங்களே கண்டுக்காத விஷயம், இப்போ வெடிக்கிறதுக்கு உள்குத்து தான் காரணமாம்!,''
''டிஎம்கேல உட்கட்சித் தேர்தல் படு சூடா நடந்திட்டு இருக்கு. மாவட்டத்துல பல ஒன்றியங்களை, 'மாஜி'யோட எதிர்கோஷ்டி ஆளுங்க கைப்பத்திட்டாங்களாமே,'' என்றாள் சித்ரா.
''ஆமாமா...! மாவட்டத்துக்கு தேர்தல் நடக்கிறப்போ, இன்னும் பயங்கர அடிதடியா இருக்கும்கிறாங்க!,'' என்றாள் மித்ரா.
''மித்து! நம்ம பழைய டெபுடி மேயர் கார்த்திக் வீட்டுல, அவரு இல்லாதப்ப, அவரை விசாரிக்கணும்கிற பேர்ல, போலீஸ்காரங்க காம்பவுண்டு ஏறிக்குதிச்சு, கார் மேல ஏறி நின்னு... பண்ணுன சேட்டை எல்லாம் அவரோட வீட்டுல இருந்த 'சிசிடிவி'யில பதிவாயிருக்காம். முக்கால் மணி நேரம் ஓடுற அந்த 'வீடியோ'வை வச்சு, பிரைவேட் பெட்டிஷன் போடப்போறாங்களாம். அப்பிடியே வீதி வீதியா, 'டிவி'யில போட்டும், மக்களுக்கு காமிக்கப்போறாங்களாம்,''''அந்த ...டேஷ் ஆபீசர் தான், போலீஸ்காரங்களைத் துாண்டி விட்டதுங்கிறாங்க. அவரு சிக்குவாரா?,''
''தெரியலை...சிட்டிக்குள்ள சின்னச் சின்ன கடை கட்டுனவுங்க எல்லாம் 'வயலேஷன் பில்டிங் லிஸ்ட்'ல சிக்கிட்டாங்க. அதெல்லாம், சீல்' வச்சு ஒரு வருஷமாச்சு. திறக்கவே முடியலை. பெருசு பெருசா விதிமீறி கட்டுன கட்டடத்துல, ஜோரா வியாபாரம் நடந்துட்டு இருக்கு. என்ன அநியாயம் பார்த்தியா?,''
''எல்.பி.ஏ.,காரங்களைப் பத்திச் சொல்றியா?,''
''ஆமா மித்து! ஊருக்குள்ள இருக்கிற முக்கியமான ஜவுளிக்கடை கட்டடங்களைக் கண்டுக்காம இருக்கிறதுக்காக 4 கோடி ரூபா வசூல் பண்ணிருக்காங்க. இந்த மாதிரி கட்டடங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கிறதே, வசூலுக்கு தான். மேட்டுப்பாளையம் ரோட்டுல கார் ஷோரூம் ஒண்ணுக்கு 'சீல்' வச்சாங்க. இப்போ திறந்துட்டாங்க. இடையில என்ன நடந்துச்சுன்னே தெரியலை!,'' என்றாள் சித்ரா.
''வசூல்ன்னா எனக்கு நம்ம கவுன்சிலர்க ஞாபகம்தான் வரும். முன்னெல்லாம், கட்டடம் கட்டுறதுக்கு கல்லு மணலு இறங்குனாத்தான் வசூல் பண்ணுவாங்க. இப்போ, 'போர்வெல்' போடுறதுக்கு வண்டி வந்தாலே, சம்மந்தப்பட்ட வீட்டுக்குப் போய், மிரட்டி வசூல் பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''அடக்கொடுமையே...! நீ சொல்றது எந்தக்கட்சி கவுன்சிலர்டி...?,''
''ஆளும்கட்சியில தான்...சிட்டிக்கு தெற்கால இருக்கிற ஒரு வார்டு கவுன்சிலரம்மா, 'போர்வெல்' போடுற ஒரு வீட்டுல மிரட்டி....20 ஆயிரம் கலெக்ஷன் பண்ணிருக்காங்க!,''
''ஒரு நிமிஷம் மித்து! பக்கத்து வீட்டு செல்வி அக்கா கூப்பிடுறாங்க...என்னன்னு கேட்டு வர்றேன்!,'' என்று அலைபேசியோடு கடைக்கு வெளியே சென்ற சித்ரா, இரண்டே நிமிடங்களில் திரும்ப வந்து, ''என்னடி சொன்ன...ஒரு போர்வெல் போட 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமா?,'' என்று விழிகளை விரித்தாள்.
''இதென்னக்கா பெருசு? சிகரெட் விக்கிறவுங்ககிட்ட 7 லட்ச ரூபா லஞ்சம் வாங்கிருக்காங்க தெரியுமா?,'' என்று அடுத்த 'ஷாக்' கொடுத்தாள் மித்ரா.
''என்னடி? வரிசையா குண்டை துாக்கிப் போடுற...?,'' என்று மீண்டும் மிரண்டாள் சித்ரா.
''உக்கடம் ஏரியாவுல 'ஃபாரின் சிகரெட்' பண்டல்களை ஒரு குடோன்ல பதுக்கி வச்சிருக்கிறதை, சம்மந்தப்பட்ட டாக்ஸ்காரங்க கண்டு பிடிச்சிட்டாங்க. அந்த சரக்கை கைப்பத்தாம இருக்கிறதுக்கு தான், இந்த 'அமவுன்ட்' கை மாறிருக்கு!,'' என்றாள் மித்ரா.
''லஞ்சம் மட்டுமா...மாமூல் வாங்குற ஆபீசருங்க பண்ற அலும்பு அதை விட அதிகம். டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 'பில்லிங் மெஷின்' கொடுத்து, அதைத் திரும்ப வாங்கிட்டாங்க தெரியுமா?,'' என்றாள்.
''ஏன்க்கா...மெஷினெல்லாம் சரியில்லையா?,'' என்று கேட்டாள் மித்ரா.
''அதெல்லாம் சரியாத்தான் இருக்கு. டாஸ்மாக் ஆபீசர்கள் தான் சரியில்லை. 'பில்' போட ஆரம்பிச்சிட்டா, அதிக விலைக்கு சரக்கு விக்க முடியாது. மாமூல் வராது...அதனால, 'சாப்ட்வேர் 'இன்ஸ்ட்டால்' பண்ணலை', 'டிரெயினிங் கொடுக்கணும்'னு சொல்லி, மெஷினையெல்லாம் திரும்ப வாங்கிட்டாங்களாம். இப்போதைக்கு, இந்த மெஷினை கொடுக்க மாட்டாங்க போல... சீக்கிரமா கொடுக்கச் சொல்லி, யூனியன்காரங்க போராடப்போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''அக்கா...! போராட்டம்னதும் ஞாபகம் வந்துச்சு. ஸ்கூல், காலேஜ் பக்கத்துல மார்ச்சுவரி பில்டிங்கை கட்றதுக்கு எதிரா, பல ஆயிரம் ஸ்டூடன்ட்ஸ்களோட பேரன்ட்ஸ், போராட்டம் நடத்துறதுக்கு ரெடியா இருக்காங்க. ஆனா, அந்த விஷயத்துல ஜி.எச்.ல இருக்கிற பெரிய மேடம், 'அதே இடத்துல தான் கட்டுவேன்'னு ரொம்பவே உறுதியா இருக்காங்களாம்!,'' என்றாள் மித்ரா.
''ஏன்? அதுல அவுங்களுக்கு என்ன கிடைக்குதாம்?,'' என்றாள் சித்ரா.
''அது தான் தெரியலை...ஆளும்கட்சி எம்.எல்.ஏ., ஒருத்தரோட 'பினாமி', இப்ப இருக்கிற மார்ச்சுவரி பக்கத்தால ஓட்டல் கட்டுறாராம். அதனால தான், ஜி.எச்., டாக்டர்களே எதிர்ப்புத் தெரிவிச்சும், அந்த எம்.எல்.ஏ., சேலஞ்ச் பண்ணி, இடத்தை மாத்த வச்சிருக்காரு. ஒரு பினாமிக்காக, பல ஆயிரம் குடும்பங்களோட அதிருப்தியை ஆளும்கட்சி சம்பாதிக்கப்போகுது!,'' என்றாள் மித்ரா.
''மித்து! ஒரு ரகசியம்...ஆளும்கட்சி வி.ஐ.பி.,க்களுக்கு ரெண்டு பேருக்கு இடையில உரசல் ஆரம்பமாயிருச்சாம். ஒரு கோஷ்டி...ஓரமா நின்னு ரசிக்குது!,'' என்று சித்ரா காதைக் கடித்தபோது, 'சரி! வா...வெளிய போய் பேசுவோம்' என்று பார்சலை எடுத்துக் கொண்டு கிளம்பினாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X