அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வில் உருவாகும் வர்த்தக அணி: கருணாநிதியிடம் கனிமொழி வலியுறுத்தல்

Updated : டிச 10, 2014 | Added : டிச 10, 2014 | கருத்துகள் (55)
Advertisement
Kanimozhi, urge, commercial, wing, DMK, தி.மு.க., வர்த்தக அணி, கருணாநிதி,கனிமொழி, வலியுறுத்தல்

தமிழகத்தில், பல கட்சி களிலும் இருக்கும் வர்த்தக அணி போல, தி.மு.க., விலும் உடனடியாக அந்த அணியை ஏற்படுத்த வேண்டும்; அது சட்ட சபைத் தேர்தலுக்கு, பெரும் உதவியாக இருக்கும் என, கட்சித் தலைவர் கருணாநிதிக்கு, கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழி வலியுறுத்தி சொல்லியுள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.


6 பேர் குழு:

கடந்த லோக்சபா தேர்தலில், கட்சி படுதோல்வி அடைந்ததும், கட்சியை சீரமைத்து பலப்படுத்துவதற்கென்று, ஆறு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, அக்குழு தலைமைக்கு ஏகப்பட்ட பரிந்துரைகளை வழங்கியது. அதன்படி, 34 மாவட்டங்களாக இருந்த தி.மு.க., நிர்வாக அமைப்பு, 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. கட்சித் தோல்விக்கு காரணமானவர்கள் என, கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. அந்தப் பரிந்துரையையும் ஏற்று, கட்சித் தலைமை, பலரையும் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது. இதற்கிடையில், உட்கட்சித் தேர்தல் வந்துவிட, கட்சிக்குள் ஏகப்பட்ட ரகளை. அறிவாலயத்துக்கு புகார் பட்டியலோடு வரும், கட்சியினரின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமானது. இருந்தபோதும், கட்சித் தேர்தலை ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர். மாவட்ட செயலர் மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்வு மட்டும் தான், நடக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில், கட்சியை வரும் சட்டசபைத் தேர்தலுக்கு தயார்படுத்தும் பணியில், கட்சி மேலிடம் தீவிரமாகி உள்ளது. அதற்காக, செய்ய வேண்டிய பணிகள் குறித்து, கட்சியின் முக்கியத் தலைவர்களிடம், கருணாநிதி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேர்தலுக்கு முன்...:

அந்த வகையில், சமீபத்தில், கட்சியின் ராஜ்யசபா எம்.பி.,க்கள் குழு தலைவர் கனிமொழியும், கருணாநிதியை சந்தித்து, தேர்தலுக்கு முன், கட்சி சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சில விஷயங்களை எடுத்து வைத்தார். அதில் முக்கியமானது, கட்சியில் வர்த்தக அணியை உருவாக்க வேண்டும்.
இதுகுறித்து, கட்சி வட்டாரங்களில் கூறியதாவது:

பலமுனை வரியை ஒரு முனை வரியாக்கியது; உணவுப் பொருட்களுக்கு வரி நீக்கம்; எண்ணெய் பொருட்களுக்கு வரி நீக்கம்; வணிகர்களுக்கு நல வாரியம் அமைத்தது; தொழில் வரியை நீக்கியது; 5 லட்சம் வரையில், வியாபாரிகள் விற்பனை வரி செலுத்த வேண்டியதில்லை என, வியாபாரிகளுக்கு, நிறைய சலுகைகளை செய்து கொடுத்தது, தி.மு.க., ஆட்சியில் தான். இப்படியெல்லாம், வியாபாரிகளுக்கு நிறைய நல்லதுகளை செய்து கொடுத்த தி.மு.க., அதை மக்களிடம் எடுத்து சொல்லாததால், 50 லட்சம் வணிகர்கள் மற்றும் குடும்பத்தினர் கூட, தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்கவில்லை.
வர்த்தகர் அணி:

அதனால், அவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்து செல்ல, தி.மு.க., வில் மற்ற கட்சிகளைப் போல, வர்த்தகர் அணி உருவாக்க வேண்டும். அதற்கு, கட்சியின் எம்.எல்.ஏ.,வான அனிதா ராதாகிருஷ்ணனை, மாநில செயலராக நியமிக்க வேண்டும் என்பது உட்பட, பல விஷயங்கள் குறித்து, கட்சித் தலைவர் கருணாநிதிக்கு எடுத்து சொன்னார். அதை பரிசீலிப்பதாக, கருணாநிதி சொல்லியிருக்கிறார். இதனால், தி.மு.க.,வில் விரைவில் வர்த்தகர் அணி உருவாக்கப்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்களில் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா
14-டிச-201417:36:55 IST Report Abuse
Thamarai Moorthy.C.V. கருத்து எழுதும் அனைவரும் 5 வருடத்திற்கு ஒரு தடவை இலவசமும்,ஓட்டுக்கு பணம் வாங்குகிறோம். முதலில் நம் காலனியை கொண்டு நம்மை திருத்திக் கொள்வேம். அடுத்தவர்கள் தவறை நாம் குறைசொல்ல வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-டிச-201421:23:17 IST Report Abuse
Pugazh V திமுக காரர்களை விட இது மாதிரி செய்திகளை அதிகம் படிப்பதும், அப்படிப் படிப்பவர்கள், செய்தியை விமர்சிக்காமல் கனிமொழியை விம்ரசிப்பதும் வழக்கம். கனி லுக்ஸ் கிரேட்
Rate this:
Share this comment
sundaram - Coimbatore,இந்தியா
12-டிச-201406:49:12 IST Report Abuse
sundaramஆமாம், ஆமாம், எல்லாருக்கும் கனி லுக்ஸ் கிரேட், அதனால்தான் விமரிசிக்கிறார்கள்....
Rate this:
Share this comment
Vaduvooraan - Chennai ,இந்தியா
12-டிச-201409:24:09 IST Report Abuse
Vaduvooraan புகழ், ஒரு திமுக அனுதாபியாக இருந்து கொண்டு இப்படி கருத்துப் பதிவு செய்வது சரியில்லை. உங்கள் கருத்து திமுக தலைவர்களுக்கு -அதுவும் குறிப்பாக - ஆ. ராசாவுக்கு எரிச்சலை மூட்டும்...
Rate this:
Share this comment
Cancel
mailvakanam - srivilliputtur,இந்தியா
11-டிச-201420:38:38 IST Report Abuse
mailvakanam இந்த அம்மா தனி கோஷ்டி சேர்க்கிறது. அதற்கு ஆதரவு சேர்பதற்கு வர்த்தக அணி அமைக்க முயற்சிக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X