பதிவு செய்த நாள் :
கருத்துகள் (206)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான மேல் முறையீட்டு மனுவை, முன்கூட்டியே விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக, ஜெ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நேற்று கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும், கர்நாடக ஐகோர்ட்டில், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை, சுப்பிரமணியன் சாமிக்கு அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக, சொத்து சேர்த்த வழக்கில், தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொதுச் செயலருமான ஜெயலலிதா, அவர் தோழி சசிகலா, அவர் உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதையடுத்து அவர்கள், பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.
பதவி இழந்தார்: அபராதத் தொகையாக, ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயும், மற்ற மூவருக்கும், தலா 10 கோடி ரூபாயும் விதிக்கப்பட்டது. இந்த சிறை தண்டனை காரணமாக, முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ., பதவியையும் ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. உடனே, தன்னை ஜாமினில் விடுவிக்கக் கோரி, ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, கர்நாடக ஐகோர்ட் நிராகரித்தது. இதையடுத்து, ஜெயலலிதா உட்பட நால்வரும், சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். இவரது மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கடந்த அக்., 17ம் தேதி, ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 'இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும், டிச., 18ம் தேதிக்குள், கர்நாடக ஐகோர்ட்டுக்கு வழங்க வேண்டும்;

ஒருநாள் கூட தாமதம் ஆகக் கூடாது' என்று, நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் பின், அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி, இரண்டு தினங்களுக்கு முன், மேல்முறையீட்டு வழக்கிற்கு தேவையான, ஆவணங்கள் அனைத்தையும், நான்கு பேருமே, கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.அடுத்த கட்ட...: இந்த சூழ்நிலையில் தான், நேற்று, ஜெயலலிதாவுக்கு ஜாமின் கேட்டு வாதாடிய, மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், சுப்ரீம் கோர்ட்டிற்கு வந்து, உரிய ஆவணங்களை, கர்நாடக ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட விவரத்தை, தலைமை நீதிபதி தத்துவிடம் தெரிவித்தார். அப்போது, பாலி நாரிமன் சார்பில், ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி, வரும் 18ம் தேதி அன்று, எடுக்கப்பட உள்ள ஜாமின் மனு மீதான, அடுத்தகட்ட விசாரணையை, முன்கூட்டியே வைக்க வேண்டுமென்று கேட்டார். இந்த கோரிக்கையை பரிசீலித்த, தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், "இந்த வழக்கு குறித்து, ஏன் அவசரப்பட வேண்டும்? ஜாமின் மனு

Advertisement

மீதான, அடுத்தகட்ட விசாரணை, 18ம் தேதி வரவுள்ளது. அதற்கு இன்னும் சில நாட்கள் தானே உள்ளன! திட்டமிட்டபடி, அன்றைய தினம் நடக்கும் விசாரணையின் போதே, மேல்முறையீட்டு மனு மீது, உரிய முறையில் உத்தரவு பிறப்பிக்கப்படும்,” எனக் கூறி, ஜெயலலிதாவின் மனுவை நிராகரித்து விட்டனர்.தர வேண்டும்: மேலும், இந்த வழக்கின் எதிர்மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி, தனக்கு, கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்களில், சிலவற்றை தர வேண்டுமென்று, கோரிக்கை வைத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சுப்பிரமணியன் சாமி கேட்கும் ஆவணங்களை, அளிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.


- நமது டில்லி நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (206)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
14-டிச-201415:18:11 IST Report Abuse
Bala Subramanian பொட்டு வைத்த வட்ட முகமோ என்பதை மாற்றி " நாமம் வைத்த வட்ட முகமோ" என்று பாடவேண்டும் போல் உள்ளது விருமாண்டி அவர்களே....I love your super comment and unable to control my laugh
Rate this:
Share this comment
Cancel
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
14-டிச-201415:05:48 IST Report Abuse
Bala Subramanian 44000 பக்கமா இப்போவே கண்ணை கட்டுதே. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதே உண்மை. பல மூத்த தலைவர்களை " உதிர்ந்த ரோமம்" என்று திட்டினத்தின் பலனை அனுபவித்து ஆகவேண்டுமே. கோர்ட் உடனடியாக தண்டனையை உறுதிபடுத்தி ஜாமீனை cancel பண்ண வேண்டும் நிர்வாகத்தில் தலை இடுவதற்காக....
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
13-டிச-201406:43:13 IST Report Abuse
மதுரை விருமாண்டி நாமம் சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜு போட்டு விட்டாரா? பளீச் ன்னு இருக்கே..
Rate this:
Share this comment
Cancel
SIVA.THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
13-டிச-201404:08:30 IST Report Abuse
SIVA.THIYAGARAJAN எல்லாம் அவரவர் விதிப்படிதான் நடக்கும்....பணம் பாதாளம் மட்டும் பாயும் என்றும் சொல்கிறார்கள்.........தற்காலத்தில் சுயநலம் விரும்பாதவர் உளரோ... புலி பசித்தாலும் புல்லை ............எல்லாம் அவன் செயல்.....
Rate this:
Share this comment
Cancel
ravi - coimbatore,இந்தியா
12-டிச-201421:27:46 IST Report Abuse
ravi எப்படி வேணாலும் மக்கள் ஆகிய நாம் கருத்து சொல்லலாம். ஆனால் T kunka தீர்ப்பில் மாற்றம் இருக்காது என்பதே உண்மை.. பிறகு எல்லோரும் தப்பு பண்ண ஆரம்பித்து விடுவார்கள் இல்லையா ... சட்டம் தனது கடமையை செய்யும்
Rate this:
Share this comment
Cancel
Nagarajan Thamotharan - Panagudi,Tirunelveli Dist,இந்தியா
12-டிச-201419:29:22 IST Report Abuse
Nagarajan Thamotharan தமிழக திராவிட கட்சிகள் கடந்த காலங்களில் மத்திய அரசின் மீது வீண் பழி சுமத்தியும் ,மத்திய அரசால் மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மக்களிடையே தவறான கருத்தை பரப்பி குறிப்பிட்ட திட்டத்திற்காக மத்திய அரசால் ஒதுக்கப்படும் நிதியை மாற்று வழியில் இலவசம் என்ற போர்வையில் தமிழகத்தை சீரழித்து மட்டுமல்ல , தமிழக மீனவர்கள் விசயத்திலும் நிரந்தர தீர்வு காண முயற்சிக்க வில்லை என்பதும்,தடை செய்யப்பட்ட விடுதலைபுலி இயக்கங்களுக்கு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அறிக்கை விடும் தமிழக திராவிட கட்சிகள் தனது சுய நலத்திர்க்காகவே செயல்படுகின்றனர் என்பதும் தெளிவாகிறது. கடந்த காலங்களில் இந்து மதத்தில் இருந்து லட்சகணக்கான இந்தியர்கள் (ஹிந்துஸ்தான் )சிறுபான்மை மதத்திற்கு மாற்றப்படும் போது அமைதி காத்த , கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியும் , தமிழகத்தில் ஆட்சி செய்த திராவிட கட்சிகளும் தாய்மதத்திற்கு சிறுபான்மையினர் விரும்பி மாறும்போது மட்டும் கோசம் எழுப்புவது மூலம் காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகள் போலி மதசார்பின்மை கொள்கையில் சிறுபான்மை மத மாற்றத்திற்கு துணை சென்றதும் / இந்தியாவிலேயே அதிகமாக N.G.O நிதியை பெற்று தமிழகத்தில் ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பதும் புலபடுகிறது. காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக திரை உலகை சாரத ஜாதி கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் புதிய அணி உருவாக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
mohan ramachandran - chennai,இந்தியா
12-டிச-201417:40:45 IST Report Abuse
mohan ramachandran ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டி ஓர் நாள் ஓடத்தில் ஏறும்
Rate this:
Share this comment
Cancel
Suresh - Pune,இந்தியா
12-டிச-201417:30:07 IST Report Abuse
Suresh ஜெயலலிதா இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆகி வருவது தான் தமிழ் நாட்டிற்கு நல்லது.... இல்லையென்றால் விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் ஒரு கும்பலிடம் தமிழ் நாடு சிக்கிக் கொள்ளும்... ஜெயலலிதா அவரது ஆட்சி காலத்தில் மிக சிறந்த நிர்வாகத்தை தந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை...
Rate this:
Share this comment
PALANIVEL RAMJI - CHENNAI,இந்தியா
12-டிச-201418:18:31 IST Report Abuse
PALANIVEL RAMJI5 ரூபாய்க்கு தயிர் சாதம் போட்டுவிட்டால் சிறந்த நிர்வாகமா ? அதன் கோடி கோடியா மணல் கொள்ளை நடக்குதே, இது கூட சிறந்த நிர்வாகமா ?...
Rate this:
Share this comment
டவுட் கோபாலு - Chennai,இந்தியா
12-டிச-201419:01:26 IST Report Abuse
டவுட் கோபாலு அம்மாவை அரசியலில் நேரடியாக எதிர்க்க முடியாமல் ஒரு சில கும்பல் செய்யும் சூழ்ச்சி தான் இது....சிறு உதாரணம் இதோ......... "The Special Economic Offences Court in Hyderabad sentenced Satyam founder-chairman B Ramalinga Raju and his brother Rama Raju to six months in jail in the Rs 617 crore income tax fraud case. " (IBN LIVE :Dec 08, 2014 at 06:36pm IST) புரிஞ்சுதா வாசகர்களே......."சத்யம் கம்ப்பியுட்டர்ஸ் இராமலிங்க ராஜு".......617 கோடி வருமான வரி எய்ப்பு வழக்கில் 6 மாதம் ஜெயில் தண்டனை......அம்மாவின் 66 கோடி சொத்து குவிப்பு வழக்கில் அம்மாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை 100 கோடி அபராதம்...... இதிலிருந்தே தெரியவில்லை இந்த வழக்கின் பின்னணியில் யார் இருப்பார்கள் என்று......??? ஒரு நாள் அவர்கள் முகமுடி இதே இடத்தில கிழியும்.....அம்மா அவர்கள் மீண்டும் தமிழக முதல்வர் ஆவார்....
Rate this:
Share this comment
paul - london,யுனைடெட் கிங்டம்
13-டிச-201400:30:26 IST Report Abuse
paulஏப்பா கோவாலு,ஒன்ன மாதிரி ஆளு இருக்கிறதுனாலத்தான் தப்பு செய்யுற அரசியல் வியாதிங்க யாருமே தன்னுடைய தப்ப உணருவதே இல்லை.இராமலிங்க ராஜு எந்த மாநில முதல்வர்?தண்டனை ஊழலுக்கு மட்டும் இல்லை அதை யார் செய்தது அதற்குத்தான்.i feel really sorry for this kind mind set for our community,first we don't feel corruption is crime because in our blood its used in it.its not something personal Mr Gopal.These two party's are really screwed our state and one does mistake and if they been questioned then they escape other did bigger then their.Im sick of these kind supporting act from common people....
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
12-டிச-201415:34:32 IST Report Abuse
rajan 18 வருடம் பொறுமை காட்டினீங்க சரி. இப்போ ஒரு லட்சம் பக்கம் உள்ள ஆவண சாதனை புத்தகத்தை வெளியிட்டு உடனே கேச முடிக்க கோர்டுக்கு கெடுபிடி கொடுக்குறீங்களே இது எப்படி. எல்லாத்தையும் விபரமா கோர்ட் படித்து பார்க்கவில்லை என அப்புறம் கேசு போடலாம்னா இந்த அவசரம்? இப்போ கோர்ட்டு நீங்க காட்டின பொறுமை என்ன என உங்களுக்கு புரிய வைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
12-டிச-201414:57:44 IST Report Abuse
Tamilar Neethi பன்னீர் வேண்டும். கடவுள் சக்தி மிக்கவரா இல்லை ஜெயா கடவுளா என்பது இப்போதுதான் தெரிகிறது .பன்னீர் கடவுள்தான் .போகிற போக்கை பார்த்தல் ஆடாமல் ஜெயித்த பன்னீர்தான் 2016 தேர்தல் வரை முதல்வர் போல தெரிகிறது. .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X