பொது செய்தி

இந்தியா

முக்கிய ரயில் நிலையங்களில் இனி சுவையோ சுவை: பிட்சா, பர்கர், வடாபாவ் விற்க அனுமதி

Updated : டிச 14, 2014 | Added : டிச 12, 2014 | கருத்துகள் (50)
Share
Advertisement
புதுடில்லி: ரயில் பயணிகளின், நாக்கு ருசிக்கு தீனி போடும் வகையில், 'காபி டே, சப்வே, பிட்சா ஹட்' உள்ளிட்ட, தனியார் உணவு நிறுவனங்களின் கடைகளை, முக்கியமான ரயில்வே நிலையங்களில் அமைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.தற்போது, நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், பயணிகளுக்கு சுவையான, சூடான உணவு கிடைப்பது, அரிதாகவே உள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான,
முக்கிய ரயில் நிலையங்களில் இனி சுவையோ சுவை: பிட்சா, பர்கர், வடாபாவ் விற்க அனுமதி

புதுடில்லி: ரயில் பயணிகளின், நாக்கு ருசிக்கு தீனி போடும் வகையில், 'காபி டே, சப்வே, பிட்சா ஹட்' உள்ளிட்ட, தனியார் உணவு நிறுவனங்களின் கடைகளை, முக்கியமான ரயில்வே நிலையங்களில் அமைக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது, நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில், பயணிகளுக்கு சுவையான, சூடான உணவு கிடைப்பது, அரிதாகவே உள்ளது. இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., மூலம், முக்கியமான ரயில்வே ஸ்டேஷன்களிலும், ரயில்களிலும் உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவின் தரம் தொடர்பாக, தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.


தனியார் உணவகங்கள்:

மேலும், பயணிகள் விரும்பும் வகையிலான, சுவையான, சூடான உணவுகளும் கிடைப்பது இல்லை. இதையடுத்து, தன் வருமானத்தை பெருக்கும் முயற்சியாகவும், தன்னுடைய உணவு நடைமுறை கொள்கையில், மாற்றம் செய்யும் வகையிலும், ஐ.ஆர்.சி.டி.சி., அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. வரும் ஆண்டுகளில், முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில், 'காபி டே, பிட்சா ஹட், பாரிஸ்டா காபி, சப்வே, ஜம்போ கிங் வடாபாவ்' உள்ளிட்ட, புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களின் உணவகங்களை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.


ருசியான உணவு:

முதற்கட்டமாக, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில், 'மேப்பில்ஸ் ஓட்டல்ஸ்' நிறுவனத்தின் உணவகம் அமைக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக, குஜராத் மாநிலம் பவ நகர், டில்லி கன்டோன்மென்ட், உ.பி., கான்பூர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட, 106 ரயில்வே ஸ்டேஷன்களில், இதர நிறுவனங்களின் உணவகங்கள், துரித உணவகங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. டில்லி மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன்களிலும், 56 உணவகங்கள் அமைய உள்ளன. இதனால், ரயில் பயணிகளுக்கு இனி, ருசியான, வகை வகையான உணவுகள் கிடைக்கும்.

தாம்பரத்திலும்...!* ஐ.ஆர்.சி.டி.சி.,யின் தற்போதைய ஆண்டு வருமானம், 30 கோடி ரூபாய்; இதை, 50 கோடி ரூபாயாக அதிகரிக்கும் நோக்குடன், இந்த திட்டம் துவக்கப்படுகிறது.
* ரயில்வே ஸ்டேஷன்களில், இந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதன் வாயிலாக, அதற்கான வாடகை அல்லது குத்தகை கட்டணம் மூலம், கணிசமான அளவு வருவாய், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு கிடைக்கும்.
* கே.எப்.சி., போன்ற உலகப் புகழ் பெற்ற, உணவு வகைகளின் தனி உரிமையை பெற்றிருக்கும், டி.எப்.எஸ்., நிறுவனமும், ரயில்வே ஸ்டேஷன்களில் சிற்றுண்டி மையங்களை அமைக்க உள்ளது.
* இந்த நிறுவனம் சார்பில், அடுத்தாண்டு ஏப்ரல் முதல், விஜயவாடா, அவுரா, ஜெய்பூர் ரயில்வே ஸ்டேஷன்களில், சிற்றுண்டி மையங்கள் அமைக்க உள்ளது.
* சென்னையில், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனிலும், புகழ் பெற்ற உணவகங்கள் அமைய உள்ளன.
* 'ஜம்போ கிங் வடாபாவ்' நிறுவனமும், 20 ரயில்வே ஸ்டேஷன்களில், அதன் பிரத்யேக கிளைகளை திறக்க உள்ளது.

எந்தெந்த நிறுவனங்கள்:1.பிட்சா ஹட்
2.காபி டே
3.கே.எப்.சி.,
4.டோமினோஸ் பிட்சா
5.காபிசினோ
6.ஹேகன் - டாஸ்
7.தி காபி பீன்
8.டீ லீப்
9.பாரிஸ்டா காபி
10.சப்வே
11.ஜம்போ கிங் வடாபாவ்

Advertisement


வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanichamy - Theni,இந்தியா
13-டிச-201417:36:07 IST Report Abuse
Palanichamy பாரம்பரியமான இந்திய உணவுகள் ஆயிரக்கணக்கில் இருக்க இந்த வெளிநாட்டு துரித உணவுகளை ஏன் மத்திய அரசு அனுமதிக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. துரித உணவுகள் கேடு விளைவிக்கும் உணவுகள் என்பது ஏன் மேல் மட்ட வர்க்கத்தினருக்கு புரியவில்லை. நாட்டு மக்களுக்கு ஆரோக்கியமான, கட்டுபடியான உணவுகளை வழங்குவதுதான் அரசின் வேலை. தனியார் மாயம், வெளிநாட்டு உணவுகள் மக்களின் ஆரோக்கியம் ரெம்ப பிரமாதம் போங்கே
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
13-டிச-201415:49:41 IST Report Abuse
ரத்தினம் ஓட்டை வாயன் கருத்து மிகச்சரி
Rate this:
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
13-டிச-201415:31:29 IST Report Abuse
இடவை கண்ணன் சரவண பவன் உணவுகளையும் கொடுக்கலாமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X