நீ நடிகண்டா....நல்லா வருவடா.....

Added : டிச 14, 2014 | கருத்துகள் (1) | |
Advertisement
நடிப்பதற்கு வகுப்பறை அமைத்து கொடுப்பதில் நாடகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சினிமாவில் நடிகனாக வளர கை கொடுப்பது நாடகம். குறும்படக்கலை சினிமாவில் சிறந்த இயக்குனராக வளர அடித்தளம் அமைக்க உதவுகிறது.''திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, பாடல், இசை என்ற சினிமா கடலில் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம். சினேகத்துடன் சினிமாவை பார்த்தால் மட்டுமே பல அனேகங்களுக்கு அர்த்தம் காண
நீ நடிகண்டா....நல்லா வருவடா.....

நடிப்பதற்கு வகுப்பறை அமைத்து கொடுப்பதில் நாடகம் முக்கிய பங்கு வகிக்கிறது. சினிமாவில் நடிகனாக வளர கை கொடுப்பது நாடகம். குறும்படக்கலை சினிமாவில் சிறந்த இயக்குனராக வளர அடித்தளம் அமைக்க உதவுகிறது.''திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, பாடல், இசை என்ற சினிமா கடலில் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம். சினேகத்துடன் சினிமாவை பார்த்தால் மட்டுமே பல அனேகங்களுக்கு அர்த்தம் காண முடியும்,'' என்கிறார் குறும்பட இயக்குனர் ர.பிரியதர்ஷன்.மதுரையை சேர்ந்த இவர் 19 வயதே நிரம்பியவர். கோவையில் 'அனிமேஷன்' படிக்கிறார். இவரது முதல் குறும்படம் 'பேய் ஸ்டோரி' 27 நிமிடங்கள் ஓடும். இதில் வரும் 'த்ரில்' காட்சிகள் குறைந்தபட்சம் 27 நாட்களுக்கு 'திக்...திக்...' என திக்குமுக்காட வைக்கும். அடுத்த குறும்படம் 'கெட்ட வார்த்தை' பத்து நிமிடங்களே ஓடும் இப்படத்தை பார்ப்போர் 'நல்ல வார்த்தை' பேசக்கூட பலமுறை யோசிப்பர். அந்தளவிற்கு 'கெட்ட வார்த்தை' பேசுவதால் ஏற்படும் சமுதாய சீரழிவுகள், பின் விளைவுகளை குறும்படம் மூலம் அழகாக... எளிமையாக... சிந்திக்க வைக்கும் விதமாக... எடுத்த பாங்கு முதிர்ந்த அனுபவசாலியாக பிரியதர்ஷனை சித்தரிக்கிறது.'கெட்ட வார்த்தை' குறும்படத்தின் 'இளம் நாயகன்' விக்னேஷ்வரன், 9. மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேதாஜி நடுநிலைப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். தந்தை பாபுவுக்கு பெயின்ட்டர் தொழில். 'பொடியன் என்னம்மா... நடிக்கிறான்...?,' என கூறுமளவிற்கு நடிப்பில் பொளந்து கட்டியுள்ளார். பஞ்சாயத்து ஒன்றில் நாட்டாமையை பார்த்து 'கெட்ட வார்த்தை' பேசியதால் சிறுவன் கதையை முடிக்கின்றனர். இதுவே கதையின் கரு. யதார்த்தமான கதைக்கு கவிதையாய் உருவெடுத்துள்ளார் விக்னேஷ்வரன்.விக்னேஷ்வரனை வாழ்த்த 95437 02939 ஐ அழுத்தலாம். 'கெட்ட வார்த்தை' குறித்து நான்கு நல்ல வார்த்தைகள் பேச... 83000 12604 க்கு ஹலோ சொல்லலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman - Porur, Chennai,இந்தியா
30-டிச-201400:34:06 IST Report Abuse
Anantharaman வாழ்த்துகள் ப்ரியதர்ஷன்......கெட்ட வார்த்தை குறும்படம் வெளிவந்துவிட்டதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X