அரசியல் கட்சி துவக்கியது ஏன்?| Dinamalar

அரசியல் கட்சி துவக்கியது ஏன்?

Added : டிச 16, 2014
Share
""என் வழி, தனி வழின்னு ரஜினி சொன்ன "டயலாக்' மாதிரி, அவரோட ரசிகர்களும், "எங்களோட வழி, அரசியல் வழி'ன்னு போயிட்டாங்க, பார்த்தியா?,'' என்றபடி வந்த மித்ரா, சோபாவில் அமர்ந்தாள். ""திருப்பூரில் பொது தொழிலாளர் சங்கத்தை சார்ந்த ரஜினி ரசிகர்கள், கொஞ்ச நாளைக்கு முன்னாடி, புதுசா அரசியல் கட்சி துவக்குனாங்களே, அதைத்தானே சொல்றே அதை வாங்கி, ஒரு மடக்கு உறிஞ்சிய மித்ரா,
அரசியல் கட்சி துவக்கியது ஏன்?

""என் வழி, தனி வழின்னு ரஜினி சொன்ன "டயலாக்' மாதிரி, அவரோட ரசிகர்களும், "எங்களோட வழி, அரசியல் வழி'ன்னு போயிட்டாங்க, பார்த்தியா?,'' என்றபடி வந்த மித்ரா, சோபாவில் அமர்ந்தாள்.


""திருப்பூரில் பொது தொழிலாளர் சங்கத்தை சார்ந்த ரஜினி ரசிகர்கள், கொஞ்ச நாளைக்கு முன்னாடி, புதுசா அரசியல் கட்சி துவக்குனாங்களே, அதைத்தானே சொல்றே

அதை வாங்கி, ஒரு மடக்கு உறிஞ்சிய மித்ரா, ""மக்கள் மத்தியில், பொது நல அமைப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது; அது, மற்ற மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு பிடிக்கலை; இவங்களோட பெயரை கெடுக்கிற மாதிரி, நெறைய்யா "உள்ளடி' வேலை செஞ்சிருக்காங்க; மன்ற தலைமையும், அவங்களுக்கு ஆதரவா இருந்துருக்கு. அதனால, ரொம்பவும் நொந்து, அரசியல் கட்சி துவங்குனதா பேச்சு அடிபடுது,'' என்றாள்.


""அதுவும் காரணமா இருக்கலாம்; கடந்த சட்டசபை "எலக்ஷன்' சமயம், இந்த அமைப்புக்கு ஆளுங்கட்சி தரப்பு வலைவீசி, மொத்த ஓட்டையும் வெலை பேசுனதா ஒரு பேச்சும் இருந்துச்சு; எத்தனை நாளைக்குதான், வாழ்த்து போஸ்டர் ஒட்டிட்டு இருப்பாங்க,'' என்றபடி, ""இப்ப, கணக்கு இல்லாமல், கல்லா நிரப்ப ஆரம்பிச்சிட்டாங்க,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


""எந்த துறையில் காசு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க... கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்...,'' என மித்ரா கேட்டாள்.


""ஆதார் அட்டைக்கு போட்டோ எடுத்து ரொம்ப நாளாச்சு. என்னாச்சுன்னு விசாரிக்க, மாநகராட்சிக்கு போயிருந்தேன். அப்படியே, அக்கா பையனுக்கு பிறப்பு சான்று வாங்குறதற்கு, "அப்ளை' பண்றதுக்காக தகவல் மையத்தில் விசாரிச்சேன். கடைசியா இருக்கிற கவுன்டரில், படிவம் கொடுத்தாங்க. அவங்களிடம் பிறப்பு சான்று வாங்கணும்னு கேட்டேன். ஐஞ்சு ரூபாய் வாங்குனாங்க. நானும் பணத்தை கொடுத்துட்டு, படிவத்தை பார்த்தேன். இரண்டு ரூபாய்னு போட்டிருந்துச்சு. எனக்கு முன்னாடி படிவம் வாங்கினவரு, அஞ்சு ரூபாய் சில்லரை இல்லைன்னு, 10 ரூபாய் கொடுத்துட்டு போனார்,'' என சித்ரா கூறியபோது, ""இதெல்லாம் சில்லரை பிரச்னை; இதையெல்லாம் பெரிசா பேசுறீங்களே?'' என, மித்ரா கிண்டலடித்தாள்.


""இரண்டு ரூபா கொடுங்கனு கேட்டா கொடுத்துருவாங்களே? ஏன், அஞ்சு ரூபாய் கொடுங்கனு கேக்குறாங்க? தெனமும் 100 பேர் படிவம் வாங்கிட்டு போறாங்க? மீதி சில்லரை எந்த கணக்குல வருது? படிவத்தை இலவசமாகவே கொடுக்கலாமே?,'' என்று டென்ஷனானாள் சித்ரா.


அமைதிப்படுத்திய மித்ரா, ""இன்னொரு விஷயம் கேள்விப்பட்டேன்... சொன்னா... சிரிப்பீங்க என்றபடி, ""பனியன் கம்பெனி ஊழியர் ஒருத்தர், ஓவர் போதையில் மொபட்டை ஓட்ட முடியாமல், தாராபுரம் ரோட்டில் தள்ளாடியபடி வந்திருக்கார். அவ்வழியா வந்த ஒருத்தர்கிட்ட உதவி கேட்டார். அந்த ஆள், அதே மொபட்டில், அவரை ஒக்கார வைச்சு, வீட்டில் இறக்கி விட்டார். வண்டியை காலையில் ஸ்டேஷனுக்கு வந்து


வாங்கிக்கங்கன்னு சொல்லிட்டு, ஓட்டிட்டு போயிட்டார். காலையில் ஸ்டேஷனுக்கு போதை ஆசாமி போயிருக்கார். அப்படி யாரும் வரலை; வண்டியும் கொடுக்கலைன்னு சொல்லியிருக்காங்க. பரவாயில்லை... கேஸ் போடுங்கன்னு அந்த ஆளு நச்சரிக்கிறார். எந்த பிரிவில் கேஸ் போடுறதுன்னு புரியாம


போலீஸ்காரங்க புலம்புறாங்க.


நம்மூரில், போதை படுத்துறபாடு, கொஞ்சம் நஞ்சமில்லை,'' என்றாள்.


டென்ஷன் குறைந்து, சிரித்தாள் சித்ரா.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X