பொது செய்தி

தமிழ்நாடு

பூவரசம் குறித்து விழிப்புணர்வுஇலவச கன்று வழங்க ஏற்பாடு

Added : டிச 20, 2014
Advertisement

திண்டுக்கல்:தேக்கு மரத்திற்கு இணையாக கதவு, ஜன்னலுக்கு பூவரச மரத்தின் தடிகள் பயன்படுத்தப்படுவதால் அவற்றின் கன்றுகளை இலவசமாக வழங்கி ஊக்குவிப்பதற்கான முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.திண்டுக்கல் சிறுமலை வனச் சரக அலுவலர் சரவணன் கூறியதாவது:"ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் சக்தி பூவரச மரத்தில் உள்ளது. ஏழைகளின் தேக்கு என அழைக்கப்படுகிறது. எல்லா காலங்களிலும் பசுமையாகவே காணப்படும். வீடுகளின் ஓரங்களில் இவற்றை வளர்க்கலாம். தெற்கு ஆற்காடு பகுதியில் மர சாமான்கள் செய்வதற்கு அதிகமாக இவ்வகை மரங்களின் தடிகளைத்தான் பயன்படுத்துகின்றனர். குறைந்தளவு தண்ணீரை பயன்படுத்தி வளரும் தன்மை பெற்றது. மரத்திலிருந்து உதிரும் இலைகள் மண்ணை வளப்படுத்தும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பூவரச மரம் இருக்க வேண்டும் என்பதற்காக இதன் கன்றுகளை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X