பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிக்கு என்ன மரியாதை...! ஐ.நா., கவுன்சில் மீது இந்தியா கடும் அதிருப்தி

Updated : டிச 23, 2014 | Added : டிச 21, 2014 | கருத்துகள் (21)
Advertisement
பயங்கரவாதிக்கு என்ன மரியாதை...! ஐ.நா., கவுன்சில் மீது இந்தியா கடும் அதிருப்தி

புதுடில்லி : மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட, பயங்கரவாதி ஹபீஸ் சயீதை, 'சாகிப்' என்ற மரியாதையான வார்த்தையில் குறிப்பிட்டு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கடிதம் எழுதி யுள்ளது, மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


விசாரணை:

கடந்த, 2008ல், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷன், தாஜ் ஓட்டல் உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி மக்கள், பாதுகாப்பு படையினர் உட்பட, 166 பேர் கொல்லப்பட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த ஹபீஸ் சயீது என்ற பயங்கரவாதி மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் தனித்தனியாக விசாரணை நடந்து வருகிறது. ஹபீஸ் சயீது, பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளான்.இந்நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் நடவடிக்கைகள் குழு தலைவர் கேரி குயின்லன், பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து எழுதியுள்ள ஒரு கடிதத்தில், 'ஹபீஸ் சயீது சாகிப்' என, மரியாதையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை பிரிட்டன் பத்திரிகை அம்பலப்படுத்தியது.


மோசம்:

இதையடுத்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மீது, மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மரியாதைக்குரிய நபர்களை சாகிப் என, வட மாநிலங்களில் அழைப்பது வழக்கம். இந்த வார்த்தையை பயங்கரவாதி ஹபீஸ் சயீதுக்கு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் ஏன் குறிப்பிட்டது என்று தான் தெரியவில்லை. பயங்கரவாதிகள் விஷயத்தை ஐ.நா., எவ்வளவு மோசமாக கையாளுகிறது என்பதற்கு, இது நல்ல உதாரணம்.இவ்வாறு, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
22-டிச-201408:44:45 IST Report Abuse
N.Purushothaman ஒரு வார்த்தையோட அர்த்தம் தெரியலைன்னா அதை தெரிஞ்சிக்கிட்டு பின் நடவடிக்கை எடுக்கலாம்...அதை விடுத்து ஐ.நா இப்படி செய்தது மோசமான முன் உதாரணம்...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
22-டிச-201408:04:26 IST Report Abuse
K.Sugavanam இந்தியா ஐநா சபையில் இருந்து விலகுமா?
Rate this:
Share this comment
Cancel
kalyan - CHENNAI,இந்தியா
22-டிச-201406:51:26 IST Report Abuse
kalyan இங்கே கருத்து பரிமாற்றம் என்ற பெயரில் முழாயடிச்சண்டையே நடக்கிறது.. குடத்தை வைத்துக்கொண்டு பெண்கள் அடித்துக்கொள்வார்கள்.. தண்ணீர் பாட்டுக்கு கொட்டிக்கொண்டே இருக்கும்... இங்கே விஷயம் வைகோவா சயீதா என்பது இல்லை.. சயீது ஒட்டுமொத்த மனித இன துரோகி.. இவன் மட்டும் 9/11 அமெரிக்கத்தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்தால் இந்நேரம் தீர்த்துக்கட்டப் பட்டிருப்பான்..
Rate this:
Share this comment
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
22-டிச-201408:45:40 IST Report Abuse
N.Purushothamanதாங்கள் கூறியது உண்மையே.......
Rate this:
Share this comment
பெரிய ராசு - நெல்லை,இந்தியா
22-டிச-201414:14:51 IST Report Abuse
பெரிய ராசு மட்டும் 9/11 அமெரிக்கத்தாக்குதலில் சம்பந்தப்பட்டிருந்தால் அவன் செத்த இடத்தில மரம் நட்டு 10 வருடம் ஆயிருக்கும் அதுதான் அமெரிக்க பாதுகாப்பு விசயத்தில் அமெரிக்க கவனம் தனி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X