அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பக்கம் சாய்கிறாரா விஜயகாந்த்? அமித் ஷாவை சந்திக்காததால் பா.ஜ.,வினர் அதிருப்தி

Updated : டிச 23, 2014 | Added : டிச 21, 2014 | கருத்துகள் (73)
Advertisement
தி.மு.க., பக்கம் சாய்கிறாரா விஜயகாந்த்? அமித் ஷாவை சந்திக்காததால் பா.ஜ.,வினர் அதிருப்தி

பா.ஜ., தலைவர் அமித் ஷாவை சந்திக்க மறுத்த விஜயகாந்த், தி.மு.க., துாதரை, கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். இதனால், அவரின் கூட்டணி வியூகத்தை புரிய முடியாமல், தே.மு.தி.க., நிர்வாகிகள் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.


விரைவில்...:

இதுதொடர்பாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் நேரத்தில், தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைந்த கூட்டணியில், தே.மு.தி.க., - ம.தி.மு.க., மற்றும் பா.ம.க., போன்ற கட்சிகள் சேர்ந்தன. தற்போது, இந்தக் கூட்டணியில் இருந்து, ம.தி.மு.க., விலகி விட்டது; விரைவில், பா.ம.க.,வும் வெளியேறலாம்.அதேநேரத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், பா.ஜ.,வின் செயல்பாடுகள் மீது, கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. வரும் 2016ல், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தினால் மட்டுமே, கூட்டணியில் தொடர்வது என்ற முடிவில், அவர் இருக்கிறார்.ஆனால், அதற்கு நேர்மாறாக, தமிழகத்தை சேர்ந்த, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, பா.ஜ., மேலிடம் தயாராகி வருகிறது. இந்தச் செய்தி வெளியாகியதும், பா.ஜ., தரப்பு மீது, விஜயகாந்த் கொண்டுள்ள அதிருப்தி, மேலும் அதிகரித்துள்ளது.


அழைப்பு:

இதற்கிடையில், கடந்த இரு நாட்களாக சென்னையில் முகாமிட்டு, கட்சியை, சட்டசபைத் தேர்தல் நோக்கி முடுக்கி விட்டார், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா. இதற்காக, அவர் சென்னை வந்தபோது, பா.ஜ., கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர் சந்தித்து பேசினர். ஆனால், விஜயகாந்த் சந்திக்கவில்லை.அதேநேரத்தில், தே.மு.தி.க., சார்பில், இன்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில், கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாக கொண்டாட, விஜயகாந்த் ஏற்பாடு செய்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என, தி.மு.க., ஆதரவாளரான, பேராயர் எஸ்ரா சற்குணத்திற்கு, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. விஜயகாந்தின் இந்தச் செயலால், தமிழக பா.ஜ., தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க., அணி பக்கம் தாவுவதற்கான அறிகுறியே, இது என்றும் கூறுகின்றனர்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


இன்று பிரியாணி விருந்து :

விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை:சாதி, மத பேதமற்ற, சம தர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், எல்லா மதமும் நம் மதமே என்ற பரந்த சிந்தனையோடும், அனைத்து மதத்தினரின் விழாக்களையும், தே.மு.தி.க., கொண்டாடி வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று என் தலைமையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அப்போது, ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் கேக் மற்றும் பிரியாணியும், நலத் திட்ட உதவிகளும் வழங்கப்படும்.மத நல்லிணக்கத்திற்கும், வகுப்பு ஒற்றுமைக்கும் எடுத்துகாட்டாக, இவ்விழா அமைய, கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி, எல்லா மதத்தினரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.தே.மு.தி.க., நிர்வாகிகளும், தொண்டர்களும், தங்கள் மாவட்டத்தில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சிகளில், கிறிஸ்தவ மக்களுடன் இணைந்து, வரும், 25ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட வேண்டும். அப்போது, தங்களால் இயன்ற அளவிற்கு, கேக் மற்றும் பிரியாணி வழங்க வேண்டும்.இவ்வாறு, விஜயகாந்த் கூறியுள்ளார்.

-- நமது சிறப்பு நிருபர் --

Advertisement


வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
22-டிச-201423:04:39 IST Report Abuse
Krish Sami யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், வழக்குகள் இருந்தாலும் இல்லையென்றாலும், தமிழ் நாட்டின் மிகப்பெரிய கட்சிகள் அ இ அ தி மு க மற்றும் தி மு க மட்டும்தான். மற்ற தமிழ் நாட்டு உதிரி கட்சிகளும் தமிழ்நாட்டில் முகவரியே இல்லாத காங்கிரஸ், பா ஜ க, கம்யூனிஸ்ட் என்ற தேசிய கட்சிகளும் தேர்தல் வரை கூட்டல், கழித்தல் கணக்கு மாற்றி மாற்றி போட்டுப்பாக்கலாம், பின்னர் ஐந்து வருடங்களுக்கு சிலேட்டையும் குச்சியையும் பரண் மேல் போட்டுவிடலாம் ( உடனே ஏன் மேல் பாய வேண்டாம் அது எலெக்ட்ரானிக் சிலேட்டாகவும் இருக்கட்டுமே முடிவு ஒன்றுதான் ).
Rate this:
Share this comment
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
22-டிச-201422:44:55 IST Report Abuse
m.viswanathan விஜயகாந்தும் தான் கொஞ்ச நாள் முதல்வராக இருந்து விட்டு போகட்டுமே , நல்லாட்சி கிடைக்கும் என்று மட்டும் எதிர்பார்க்ககூடாது .
Rate this:
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
22-டிச-201420:54:45 IST Report Abuse
GUNAVENDHAN விஜயகாந்த் 7 சதவிகித ஒட்டு வங்கியை வைத்துள்ளார் என்று இந்திரன் தவறுதலாக இங்கு குறிப்பிட்டு உள்ளார், விஜயகாந்த்துக்கு அண்ணா திமுக வுடன் இனைந்து சென்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது 10 சதவிகித ஒட்டு கிடைத்தது, ஆனால் அதன்பிறகு அங்கிருந்து முதல்வராகும் நினைப்பில் முறுக்கிக்கொண்டு வெளியே வந்த பிறகு அந்த ஓட்டுவங்கி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, நடந்துமுடிந்த பாராளுமன்ற தேர்தலில் 4.7 சதவிகிதமாகி விட்டது. 7 சதவிகித ஒட்டு வங்கியை வைத்துக்கொண்டு விஜயகாந்த் எந்த காலத்திலும் முதல்வராவது குதிரைக்கொம்பு என்று சொல்லியுள்ளார். 7 சதவிகிதத்துக்கே அந்த நிலை என்றால் 4.7 சதவிகிதத்துக்கு முதல்வர் பதவி பற்றியே கனவில் கூட நினைக்கக்கூடாது. இன்று கூட விஜயகாந்த்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தின் எதிரே சில இடங்களில் பெரிய பேனர்களை வைத்திருந்தார்கள், அதில் 2016 நமது ஆட்சி தான் என்றும், வருங்கால முதல்வரே என்றும் விஜயகாந்த்தை விழித்திருந்தனர், மக்கள் அதை படித்துவிட்டு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டு போவதையும் பார்த்தேன், தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக முடியாது என்று தெரிந்தும் வீணாக ஏன் தான் இப்படியெல்லாம் விஜயகாந்த்தையும் , அவரது மனைவியையும் உசுப்பேற்றுகின்றார்களோ . இப்படி சொல்லி சொல்லித்தான் வோட்டு வங்கி குறைந்துகொண்டே போகிறது, 2016 தேர்தலில் ஒன்றுமில்லாமல் போன பிறகு தான் அடங்குவார்களோ .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X