அரசியல் செய்தி

தமிழ்நாடு

60 லட்சம் பேர் தமிழக பா.ஜ.,வில் சேர்ந்தால் ஆட்சி அமைவது உறுதி: அமித் ஷா

Updated : டிச 22, 2014 | Added : டிச 22, 2014 | கருத்துகள் (68)
Share
Advertisement
கடந்த இரு நாட்களாக, சென்னையில் முகாமிட்டிருந்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று காலை,தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடனும், மாலையில் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், 'முதலில், 60 லட்சம் பேரை கட்சியில் சேருங்கள்; ஆட்சி அமைப்பது என் பொறுப்பு' என்றார்.தமிழக பா.ஜ., அலுவலகமான, கமலாலயத்தில், நேற்று காலையில், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒரு மணி நேரம்
 60 லட்சம் பேர் தமிழக பா.ஜ.,வில் சேர்ந்தால் ஆட்சி அமைவது உறுதி: அமித் ஷா

கடந்த இரு நாட்களாக, சென்னையில் முகாமிட்டிருந்த, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, நேற்று காலை,தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடனும், மாலையில் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், 'முதலில், 60 லட்சம் பேரை கட்சியில் சேருங்கள்; ஆட்சி அமைப்பது என் பொறுப்பு' என்றார்.

தமிழக பா.ஜ., அலுவலகமான, கமலாலயத்தில், நேற்று காலையில், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. ஒரு மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய பொறுப்பாளர் முரளீதர் ராவ், தேசிய செயலர் எச்.ராஜா, மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், வானதி சீனிவாசன் மற்றும் கோவை செல்வக்குமார் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், 13 கோட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், தமிழகத் தில் ஆட்சி அமைப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள வியூகம் குறித்து, அமித் ஷா விரிவாக விவரித்தார். தமிழகத்தில் கட்சிக்கு வலுவூட்ட தேவையான ஆலோசனைகளையும், அதற்கான உத்திகளையும் அவர் கூறினார்.அதை தொடர்ந்து, குரோம்பேட்டையில் நடந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட மையக் குழு பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, சில அதிரடி கட்டளைகளை பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:தேசிய தலைவராக பொறுப்பேற்ற பின், அமித் ஷா சந்தித்து வரும் மாநில தேர்தல்களில் எல்லாம், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக, அவரது அதிரடி அரசியல் வியூகத்திற்கு, பா.ஜ.,வில் மிகப்பெரியவரவேற்பு கிடைத்துள்ளது.தமிழகத்திலும் அதை செயல்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினர் மத்தியில் ஆழமாக பதிந்திருப்பதால், நேற்றைய கூட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அதை பூர்த்தி செய்யும் விதத்தில், மாநில நிர்வாகிகள் கூட்டத்திலும், அதை தொடர்ந்து நடந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்திலும் அமித் ஷா, முக்கியமான சில ஆலோசனைகளை கூறினார்.

அதில் முக்கியமானது, தமிழகத்தில் உள்ள, 60 ஆயிரம் பூத்துகளிலும், தலா 100 பேர் வீதம், 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பது தான். '60 லட்சம் பேரை சேர்த்த பின், என்னிடம் வாருங்கள்; நான் இங்கே ஆட்சி அமைத்து காட்டுகிறன்; அது என் பொறுப்பு' என, திட்டவட்டமாக தெரிவித்தார்.'ஒரு பூத் பொறுப்பாளருக்கு, இரண்டு உறுப்பினர் சேர்க்கை புத்தகம் வழங்க வேண்டும். போலி உறுப்பினர்கள் என, ஒருவரும் இருக்க கூடாது. மூன்று மாதங்களில், 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்; இதுவே, நமது இலக்கு. மகாராஷ்டிரா மாநிலத்தில் செய்ததை போல, இந்தியாவின் முழு சக்தியையும் தமிழகத்தில் இறக்கி, பா.ஜ., ஆட்சியை தமிழகத்தில் மலர செய்வேன்' என்றும் உறுதி அளித்தார்.இத்துடன், நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, தமிழக சட்டசபை தேர்தலை, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார் என அறிவித்த பிறகே, எதிர்கொள்ளும் என்றும், அமித் ஷா கூறினார்.இவ்வாறு, மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.

உறுப்பினர் சேர்க்கை எப்படி?


1 தமிழகம் முழுவதும், குக்கிராமம் முதல், மாநகரங்கள் வரை, மூலை முடுக்கு, சந்து பொந்து எல்லா இடங்களிலும், ஒரே நாளில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.
2 பேருந்து நிலையம், சினிமா திரையரங்கம், ஷாப்பிங் மால் என, எல்லா இடங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை,
நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும்.
3 உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக, ஜனவரியில் ஒரு ஆய்வு கூட்டம், பிப்ரவரியில் ஆய்வு கூட்டம் என, மாதந்தோறும் நடத்த வேண்டும். ஒவ்வொரு பூத்திலும், பா.ஜ.,வுக்கு கமிட்டி இருக்க வேண்டும்.
4 உள்ளூர் பிரச்னைகளை கையில் எடுக்க வேண்டும். அந்தந்த ஊர்களில் உள்ள நிர்வாகிகள், அங்குள்ள பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அவற்றை தீர்க்க பாடு பட வேண்டும்.
5 அரசியல் பிரச்னைகளை கையில் எடுக்க வேண்டும். இதை நோக்கியே, தமிழக பா.ஜ.,வின் பயணம் அமைய வேண்டும்.


கேள்வியால் திணறிய நிர்வாகிகள்:

தமிழக பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில், கோட்ட பொறுப்பாளர்கள், 13 பேரும் கலந்து கொண்டனர். அவர்களிடம், அந்த கோட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக செய்துள்ள பணிகள் குறித்து அமித் ஷா விசாரித்தார்.அப்போது திடீரென்று, தமிழகத்தில் எவ்வளவு பூத்துகள் (ஓட்டுச் சாவடிகள்) உள்ளன என, கேட்டுள்ளார். அதற்கு சரியான பதிலை உடனடியாக சொல்ல முடியாமல், ஆளுக்கொரு கணக்கை கூறியுள்ளார்.அவர்கள் திணறியதை பார்த்த அமித் ஷா சிரித்துள்ளார். பின் விசாரித்து, சரியான எண்ணிக்கையை அவரிடம் கூறியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Bangalore,இந்தியா
22-டிச-201423:00:16 IST Report Abuse
Raja '60 லட்சம் பேரை சேர்த்த பின், என்னிடம் வாருங்கள் நான் இங்கே ஆட்சி அமைத்து காட்டுகிறன் அது என் பொறுப்பு' என்று நீங்களே சொன்னால் எப்படி? 60 லட்சம் பேரை மூன்றே மாதத்தில் எப்படி கட்சியில் சேர்ப்பது என்பது உள்ளூர் தலைகளுக்கு தெரிந்து இருந்தால் நீங்கள் எதற்கு ஷா ஜி? அது தெரியாமல் தானே அவர்கள் முழிக்கிறார்கள். நீங்கள் இங்கே வந்து இருப்பதே உ.பி. யில் நீங்கள் கண்டுபிடித்த அந்த மந்திரத்தை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க என்றல்லவா அவர்கள் உங்களை பார்க்க இத்தனை நாட்களாக ஆவலாக இருந்தார்கள். ஆறு மாதம் கழித்து வந்து இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டால் அவர்கள் எங்கே போவார்கள்? யாரிடம் யோசனை கேட்க முடியும்? அதுவும் இப்படி ஒரு கடுமையான target ஐ கொடுத்து விட்டு பிஜேபி தமைமையில் தான் கூட்டணி, பிஜேபி தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என்று வேறு கூறி விட்டு நீங்கள் போய் விட்டீர்கள். பிறகு 2016ல் தேர்தல் பிரச்சாரத்துக்கு உங்களை அழைத்தால் 60 லட்சம் பேர் ஆச்சா என்று கேட்டால் எங்கே போவது? கூட்டணி கட்சிகளும் ஒவ்வொன்றாக கழண்டு கொள்கிறார்கள். கடைசியில் நம் கட்சி மட்டும் தனியாக நிற்க வேண்டி கூட இருக்கலாம் அப்படி ஒரு நிலைமை வரும்போது 234 வேட்பாளர்களையும் நாமே நிறுத்த வேண்டியிருக்கும். அதனால், இதோ ஒரு அருமையான யோசனை. உடனடியாக நமக்கு தேவைப்படும் அந்த 234 வேட்பாளர்களையும் கண்டு பிடித்து, கட்சியில் சேர்த்து, அவர்கள் கைக் காசை வைத்து அந்த 60 லட்சம் பேரையும் அடுத்த மூன்று மாதத்தில் சேர்த்தால் தான் நம் கட்சி தேர்தலில் நிற்கும் என்று சொல்லி விடுங்கள். அப்புறம் பாருங்கள் வேகத்தை. மற்ற கட்சி சிட்டிங் MLA கூட பதவியை ராஜினாமா செய்து விட்டு நம் கட்சியில் சேர்ந்து விடுவான். 60 லட்சம் என்ன? 1.5 கோடியை கூட தொடலாம்.
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
22-டிச-201422:47:07 IST Report Abuse
m.viswanathan தமிழகத்தின் தலைஎழுத்தை மாற்ற ஒரு மாற்று சக்தியாக வாருங்கள்
Rate this:
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
22-டிச-201421:20:55 IST Report Abuse
GUNAVENDHAN அமித் ஷா வின் 60 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது பற்றிய செய்தியை இங்கு விமர்சித்துள்ள ஜெகன் மிக அருமையாக புள்ளிவிவரங்களை ஓரளவுக்கு சரியாகவே எடுத்து வைத்துள்ளார். தமிழகத்தில் ஒருசில பூத்துக்களில் மொத்த வோட்டுக்களே 600, 700 என்கிற நிலைமையில் உள்ளது , அதில் ஆண்கள் வோட்டு சுமாராக 350 அளவில் இருக்கும் , தேர்தல் நேரத்தில் வோட்டுபோடவே சுமாராக அத்தகைய பூத்துகளில் 200 முதல் 250 பேர் வரை தான் வருவார்கள் . மூலை முடுக்கிலெல்லாம் பரவி உள்ள அண்ணா திமுக , திமுக போன்ற கட்சிகளுக்கே அத்தகைய ஊர்களில் சுமாராக கட்சி வேலை செய்பவர்கள் 20, 30 பேர் தான் இருப்பார்கள் . திமுகவை பாதியாக உடைத்துக்கொண்டு வைகோ வெளியே வந்தபோதே அத்தகைய பூத்துக்களில் அவர் கட்சிக்கு 10, 15 பேர் தான் இருப்பார்கள் . தமிழகத்தை ஆண்ட கட்சியான காங்கிரசுக்கே ஒரு பூத்துக்கு 100 பேர் என்ன 50 பேரைக்கூட பல இடங்களில் பிடிக்க முடியாத நிலைமை இருந்தது . நிலைமை இப்படி இருக்கும்போது ஒவ்வொரு பூத்துக்கும் 100 பேரை சேர்க்க வேண்டும் என்று சொன்னால் அதெல்லாம் நடக்க கூடிய விஷயமே இல்லை . தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பூத்துக்களுக்கு ஓரிருவரை கூட பாஜகவால் பிடிக்க முடியாத நிலைமை தான் உள்ளது . மத்தியில் ஆட்சி அதிகாரம் கையில் கிடைத்ததால் இந்த ஆட்டம் போடுகின்றார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது . மத்தியில் ஆட்சி அதிகாரம் கையில் உள்ளதாலும் , நூற்றுக்கணக்கான கோடிகளை அள்ளிவிட தயாராக இருப்பதாலும் ஆட்சியை பிடித்துவிடலாம், நாம் நினைக்கும் ஒருவரை முதல்வராக உட்காரவைத்துவிட முடியும் என்று தப்பு கணக்கு போடுகின்றார்கள் என கருதுகிறேன். மத்தியில் சென்ற 10 வருடம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட தலை கீழாக என்னன்னவோ செய்து பார்க்கவில்லையா, ஆனால் உருப்படியாக கட்சியை வளர்க்க முடியவில்லையே . மத்தியில் ஆட்சி, கைவசம் கோடிக்கணக்கான பணம் என்றால் ஆட்சியை பிடித்து விடலாம் என்று கருதுவதே மமதையை தான் காட்டுகின்றது , 60 லட்சம் பேரை சேருங்கள் , ஆட்சியை நான் அமைக்கின்றேன் என்று அமித் சா பேசியுள்ளாரே , இதற்க்கு வேறு என்ன அர்த்தம் . 4.7 சதவிகித வோட்டை வைத்துக்கொண்டு நான் தான் முதல்வர் என்று சொல்லிக்கொண்டு திரியும் விஜயகாந்த், அதேபோல 4 சதவிகித வோட்டை வைத்துக்கொண்டு என் பையன் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக்கொண்டு திரியும் ராமதாஸ் ஆகியோர் வரிசையில் இப்போது புதிதாக பாஜகவும் சேர்ந்துள்ளது என்பது தான் உண்மை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X