ராஜினாமா செய்வேன் மோடி மிரட்டல்?

Updated : டிச 22, 2014 | Added : டிச 22, 2014 | கருத்துகள் (104)
Share
Advertisement
ராஜினாமா செய்வேன் மோடி மிரட்டல்?

புதுடில்லி : ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார் தலைவர்கள் மீதான அதிருப்தியால், பிரதமர் நரேந்திர மோடி, தன் பதவியை ராஜினாமா செய்வேன் என, மிரட்டியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களை, தாய் மதத்திற்கு மாற்றும் முயற்சியில், ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு, சங் பரிவார் அமைப்புகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவின் சிலையை, நாடு முழுவதும் வைக்கப் போவதாக, இந்து அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

சில மாநிலங்களில், பா.ஜ., மூத்த தலைவர்கள் பலரும், சிறுபான்மையின மக்கள் மீது, வேறுபாடு பாராட்டும் வகையில் பேசி உள்ளனர்.இதனால், அந்த அமைப்புகள் மற்றும் அவற்றின் செயல்பாட்டில்அதிருப்தி அடைந்த பிரதமர் மோடி, பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் சிலரிடம், மிரட்டல் விடுத்ததாக, செய்தி வெளியானது.பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிர மாநிலத்தில் வெளியாகும், 'மகாராஷ்டிரா டைம்ஸ்' என்ற பத்திரிகையில், இந்த செய்தி வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gafnbktec - doha,கத்தார்
22-டிச-201423:04:02 IST Report Abuse
gafnbktec RSS மோடியை காட்டி கோடி கோடியாக செலவு செய்து ஆட்சியை பிடித்தது என்பதே உண்மை. RSS ன் ரகசிய திட்டமே இதுதான், ஜனங்களுக்கு மிகவும் பரிச்சயமான மோடியை காட்டி ஆட்சியை பிடிப்பது பிறகு மோடியை அகற்றிவிட்டு பிராமணரான அமீத்சாவை பிரதமராக்குவது.அதற்காகத்தானே அமீத்சாவை இப்போது super man போல develop பண்ணி சித்தரித்து வருகிரார்கள். கூடிய சீக்கிரம் நாம் புதிய பிரதமரை பார்கலாம்.மோடிக்கு வோட்டு போட்டவர்கள் எல்லோருக்கும் அல்வா.
Rate this:
Cancel
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
22-டிச-201421:14:30 IST Report Abuse
Sivan Mainthan இந்து மதம் அழிவில்லாதது. மற்ற மதங்களைப்போல் அதை ஆள் பிடித்து காப்பாற்ற வேண்டியதில்லை. தயவு செய்து ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சங் பரிவார் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
LOURDU IRUDAYARAJ.G - coimbatore,இந்தியா
22-டிச-201420:19:53 IST Report Abuse
LOURDU IRUDAYARAJ.G நம்முடைய நாடு இன்னும் எவல்லவோ முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டி இருப்பதால் இது போன்ற சின்ன பிரச்சனைகளை விட்டு விட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபடவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X