காங்கிரஸ் குடும்ப அரசியல் நடத்துகிறது: நிதின் கட்காரி கடும் தாக்கு

Added : அக் 26, 2010 | கருத்துகள் (7)
Advertisement
காங்கிரஸ் குடும்ப அரசியல் நடத்துகிறது: நிதின் கட்காரி கடும் தாக்கு

பிர்பைன்டி(பீகார்) :காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் குடும்ப அரசியல் நடத்திவருகின்றன என்று, பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி குற்றம் சாட்டியுள்ளார்.


பீகாரில், பாகல்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி தே.ஜ., கூட்டணியை ஆதரித்து கூறியதாவது:காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜனசக்தியும் மன்னர் ஆட்சி முறை பாணியில் அரசியல் நடத்துகின்றன. லாலு பிரசாத், ஊழல் விவகாரத்தில் இருந்து தப்பிக்க, தனது மனைவி ரப்ரிதேவியை முதல்வராக்கினார். ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்., ஆட்சியில், பீகார் மிகவும் பின்தங்கியிருந்தது. அங்கு ஊழலும், காட்டாட்சியும்தான் நடந்தது. நிதிஷ்குமாரின் ஆட்சியில், 45 ஆயிரம் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் மூலம் விரைவாக தண்டிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் கி.மீ., தூர சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரயில் வசதிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.நிதிஷ்குமாரின் ஆட்சி, ஒரு முன்னோட்டம் தான். தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில், பீகார் இடம் பிடிக்கும். மின் வினியோகம் தொடர்பான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அவைகளில் உள்ள பிரச்னைகள் சரிசெய்யப்படும்.குடும்ப அரசியல் காரணமாக, காங்கிரஸ் - ஆர்.ஜே.டி., மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் மண்ணை கவ்வப்போவது உறுதி.இவ்வாறு கட்காரி கூறினார். 


Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வர்ஷா - oklahoma,யூ.எஸ்.ஏ
27-அக்-201020:19:51 IST Report Abuse
வர்ஷா என்னது குடும்ப அரசியலா ...சிவசேனாவுல மட்டும் என்ன வாழுதாம் ..மகன் , தம்பி மகன் , பேரன் , கொள்ளுப்பெரன்னு கட்சில அவங்களுக்குத்தானே பவரு . நம்ம கட்சிதான் பிரம்மச்சாரிகளும் , சந்நியாசிங்க லும் .நெறஞ்ச கூடாரமாச்சே .குடும்பம் , குட்டிங்கன்னு இருந்திருந்தா உங்க கட்டுப்பாடு தெரிஞ்சிருக்கும் ...
Rate this:
Share this comment
Cancel
VENTHAN - kualalumpur,மலேஷியா
27-அக்-201015:43:25 IST Report Abuse
VENTHAN யாரப்பா இவர் ,கடந்த இரண்டு தேர்தல்களிலும் இதைத்தான் சொன்னீர்கள் இருந்தும் அவர்கள்தான் ஆட்சியை பிடித்தார்கள் கடந்த பத்து ஆண்டுகளில் RG இன் செல்வாக்கு பல மடங்கு கூடிஉள்ளது . உண்மையில் உங்களைத்தான் யார் என்று 80 சதவிதம் மக்களுக்கு தெரியாது ,.
Rate this:
Share this comment
Cancel
jajin - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
27-அக்-201014:47:58 IST Report Abuse
jajin இவர் யாருன்னே தெரியலையே ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X