பொது செய்தி

தமிழ்நாடு

கோயில் பணியாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் : பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் பணிக்கு திரும்பினர்

Updated : அக் 27, 2010 | Added : அக் 26, 2010 | கருத்துகள் (34)
Share
Advertisement

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்டிரைக்கில் ஈடுபட்ட கோயில் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மாலை 4 மணியுடன் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  சென்னையில் இந்து அறநிலையத்துறை ஆணையருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டதன் எதிரொலியாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்தாக தெரிகிறது.

பாதிப்பு இல்லை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், பழநி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில்  உட்பட பல முக்கிய கோயில்களில் வழக்கமான பூஜைகள் பாதிக்கப்படவில்லை. அர்ச்சனை, அபிஷேகம், நுழைவு, சிறப்பு தரிசன டிக்கெட் வினியோகம் உள்ளிட்ட பணிகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் வழங்கப்பட்டன. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் 38 ஆயிரத்து 421 கோவில்கள் உள்ளன. கோவில் நிர்வாக அதிகாரி பணியில் துவங்கி, அர்ச்சனை, அபிஷேகம், சிறப்பு வழிபாடு, முடிகாணிக்கை வழங்குவதற்கான  கட்டண டிக்கெட் வழங்குதல், பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தல், பக்தர்களை ஒழுங்குபடுத்துதல் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.கோவில் ஊழியர்களுக்கு சமீபத்தில் சம்பள உயர்வை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் அறிவித்தது. ஆறாவது சம்பளக் கமிஷன்படி அரசு அறிவித்த சம்பள உயர்வை விட, அறநிலையத்துறை நிர்வாகம் தங்களுக்கு குறைவான சம்பள உயர்வை வழங்கியுள்ளதாக கூறி ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசாணையின்படி 40 சதவீத சம்பள உயர்வு ; சம்பள நிலுவையில் ஒரே தவணையில் வழங்குதல்; சம்பளச் செலவு உச்சவரம்பை கைவிடுதல்; தினக்கூலி மற்றும் தொகுப்பூதியம் பெறும் முழுநேரப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கி சம்பள விகிதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில் பணியாளர்கள் இன்று (27ம்தேதி) உள்ளிருப்பு வேலைநிறுத்தம் நடத்த அறிவிப்பு வெளியிட்டனர்.

போராட்டம் குறித்து திருக்கோவில் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி கூறும்போது, "எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்யவுள்ளோம். அர்ச்சனை, அபிஷேக டிக்கெட், வருகை கட்டண டிக்கெட் போன்றவற்றை கொடுக்கமாட்டோம்' என்றார்.

கோவில் ஊழியர்களின் போராட்டத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்து மக்கள் கட்சி மாநில செயலர் செந்தில்குமார் கூறியதாவது:கோவில் ஊழியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, கோவிலுக்கு வெளியே, காவல்துறையின் அனுமதியைப் பெற்று போராட்டம் நடத்தலாம். அதை விடுத்து, இந்து சமய உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், பக்தர்களை பாதிக்கும் விதமாகவும் இது போன்ற போராட்டத்தில் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.கோவிலில் தாமதமின்றி பூஜைகள் நடக்க வேண்டும் என்பதற்காக ஒருபுறம் பூசாரிகளுக்கு முதல்வர் சைக்கிள்களை வழங்குகிறார். மறுபுறம், கோவில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பூஜை நடப்பதை தடுக்கப் பார்க்கின்றனர்.கோவில் பூஜைகள் பாதிப்படைந்தால், அதற்கு காரணமான ஊழியர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று கோவில்களில் பக்தர்களுக்கு உதவும் வகையில் செயல்படுவார்கள். இவ்வாறு செந்தில் குமார்  தெரிவித்திருந்தார்.

- நமது சிறப்பு நிருபர் - 

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அபிமநிகுமார் மோகனசுந்தரி - திருநாகேச்வரம்கும்பகோணம்தமிழ்நாடு,இந்தியா
28-அக்-201013:01:24 IST Report Abuse
அபிமநிகுமார் மோகனசுந்தரி நல்லவன் கோவில் வேலைக்கு வருவான் . அவனுக்கு காசு முக்கியம் இல்லை மனிதன் அழலாம் தெய்வம் காப்பாற்றும்
Rate this:
Cancel
கோடி.ராஜேந்திரன் - கும்பகோணம்தமிழ்நாடு,இந்தியா
28-அக்-201012:55:40 IST Report Abuse
கோடி.ராஜேந்திரன் அவன்க்களும் மனுஷன் அல்லவா
Rate this:
Cancel
Bhavan - Chennai,இந்தியா
27-அக்-201021:20:40 IST Report Abuse
Bhavan mr கிராமத்தான் - saltlakecity,யூ.எஸ்.ஏ , An information for u. No one priest participates in this strike. All staffs except priest participate in this strike. So poojas were not afected and they were performed asusual by the priest.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X