வல்லரசு வழங்கிய வல்லவர் வாஜ்பாய் : இன்று பிறந்த நாள்

Added : டிச 25, 2014 | கருத்துகள் (3)
Advertisement
 வல்லரசு வழங்கிய வல்லவர் வாஜ்பாய் : இன்று பிறந்த நாள்

இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள். நாட்டின் உயரிய பிரதமர் பதவியை அடிமட்ட தொண்டராக இருந்து அடைந்தவர்களில் வாஜ்பாய்க்கு தனி இடமுண்டு. இயற்கை ஆர்வலர், சிறந்த பார்லிமென்டெரியன், நிர்வாகி, பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர் என அனைத்து பொறுப்புகளிலும் தனி முத்திரை பதித்தவர். பிரதமராக இருந்த போது, விருது பெற வந்த ஏழை மூதாட்டி சின்னப்பிள்ளையின் காலில் விழுந்தது அவரை உலகின் மிகச்சிறந்த பணிவு உள்ள தலைவராக மிளிரச் செய்தது. பதவிக்கு வந்ததும், தொலைநோக்கு திட்டங்களை, சாலைகள் உட்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றியதால் காலத்தை வென்ற பிரதமராக மதிக்கப்படுகிறார்.


கவர்ந்திழுந்த பேச்சாற்றல் :

நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக எதிர்கட்சித் தலைவராக இருந்து பண்பட்டு, பிரதமர் ஆனதில் இருந்து மாறுபட்ட பிரதமராக வாஜ்பாய் திகழ்ந்தார். தன் பேச்சாற்றலால் பார்லிமென்டின் இரு அவைகளையும் கட்டுக்குள் வைக்கும் அளவு அவரது உரைகள் அமைந்திருந்தன. கான்பூர் டி.ஏ.வி., கல்லுாரியில் 1946ல் நடந்த விழா ஒன்றில் சிறப்பு பேச்சாளர் பேசுவதற்கு முன் சிலர் பேச அழைக்கப்பட்டனர். அவர்களில் வாஜ்பாயும் ஒருவர்.வாஜ்பாயின் உரையை கேட்ட அந்த சிறப்பு பேச்சாளர், ''நான் பேச வேண்டிய அனைத்தையும் இந்த இளைஞர் பேசி விட்டார்,'' என பாராட்டினார். அந்த அளவுக்கு இளம் வயதிலேயே பேச்சாற்றல் கொண்டவராக திகழ்ந்தார்.ஐ.நா., சபையில் இந்தியில் பேசிய முதல் இந்திய தலைவர் என்ற பெருமையும் வாஜ்பாய்க்கு உண்டு. இன்று ஒன்றிரண்டு கட்சிகளை வைத்து கொண்டு கூட்டணி ஆட்சி நடத்த அரசுகள் திணறுகின்றன. ஆனால் நாடு முழுவதும் பல்வேறு கொள்கைகள் கொண்ட 21 கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி ஆட்சியை திறம்பட நடத்திய ஒரே பிரதமர் வாஜ்பாய் தான். எந்த கட்சியினரும் மனம் கோணாத அளவு அவர்களை ஒரு அங்கமாக நினைத்து எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஆட்சி நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்தினார்.


காத்திருந்த இந்தோனேஷியா பிரதமர் :

பிரதமராக இருந்த வாஜ்பாய் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனேஷியா சென்றார். அந்த நாட்டு வழக்கப்படி பிரதமர் விமான நிலையத்திற்கு சென்று எந்த நாட்டு தலைவர்களையும் வரவேற்பது கிடையாது. ஆனால் வாஜ்பாய் வருகைக்காக அந்நாட்டு பிரதமர் அரை மணிநேரத்திற்கும் மேலாக விமான நிலையத்தில் காத்திருந்து வரவேற்றார். வழக்கத்திற்கு மாறாக விமான நிலையம் வந்தது குறித்து விசாரித்த வாஜ்பாயிடம், ''உலகில் நான் மதிக்கும் தலைவர்களின் நீங்களும் (வாஜ்பாய்) ஒருவர். அதனால் தான் வந்தேன்,'' என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். உண்மையான மதச்சார்பற்ற தலைவராக வாஜ்பாய் திகழ்ந்தார் என்பதை அறியலாம்.


கார்கில் கதாநாயகர் :

1998ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன் மூலம் உலக அரங்கில் இந்தியாவை வல்லரசாக காட்டிய பெருமை அவரைச் சேரும். 1999ல் பாகிஸ்தான் லாகூருக்கு டில்லியில் இருந்து பஸ் போக்குவரத்தை துவக்கி, லாகூர் பிரகடனம் செய்து அமைதியின் துாதுவராக திகழ்ந்தார். அதே வேளையில் எல்லையில் வாலாட்டிய தீவிரவாதிகளை கார்கில் போர் மூலம் வெற்றி கொண்டார்.இமாச்சல் மணாலில் உள்ள வாஜ்பாய் வீடு அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் வாழ்ந்தனர். அவர்கள் தங்கள் ஓய்வு பணத்தை கொண்டு மாடி கட்ட விரும்பினர். ஆனால் பிரதமர் வாஜ்பாய் வீட்டிற்கு அருகில் அவர்கள் வீடு அமைந்ததால், உள்ளூர் அதிகாரிகள் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு மாடி கட்ட அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து அந்த தம்பதியினர் பிரதமர் வாஜ்பாய்க்கு கடிதம் எழுதினர். அந்த கடிதத்தை கண்டதும் வாஜ்பாய், ''உங்கள் விருப்பத்தை காட்டிலும் என் உயிர் பெரியதில்லை,'' என மாடி கட்ட அனுமதி வழங்கும்படி அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்தார்.


தங்க நாற்கரச்சாலை திட்டம் :

தமிழகத்தின் தென்கோடியிலிருந்து தலைநகர் சென்னைக்கு சில மணி நேரங்களில் நம்மால் இன்று வர முடிகிறது என்றால் அதற்கு காரணம் வாஜ்பாய் தான். அவர் பிரதமராக இருந்த போது தான் தங்கநாற்கரச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புற சாலைகளும் அவரது ஆட்சியில் சீரமைக்கப்பட்டன. ரோடுகளுக்கு முக்கியத்துவம் தருவது குறித்து வாஜ்பாயிடம் ஒரு முறை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கிராமங்கள் முன்னேற ரோடு உட்பட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முக்கியம் என பதிலளித்தார்.காங்., தலைவர் ஒருவர் வாஜ்பாயை விருந்துக்கு அழைத்துள்ளார். பின் தன் வீட்டில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் சமையல்காரராக இருப்பதாக தயங்கியபடி வாஜ்பாயிடம் தெரிவித்துள்ளார். அதை கேட்ட வாஜ்பாய், ''இப்போது தான் உங்கள் வீட்டில் ஒரு தாழ்த்தப்பட்டவர் சமைக்கிறார். இருபது ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் தான் என் உதவியாளராக இருக்கிறார்,'' எனக்கூறி விருந்தில் பங்கேற்றார். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தான் நாடு பொருளாதார மேம்பாடு கண்டது. ஜி.டி.பி., சதவீதம் வளர்ச்சி அடைந்தது. அன்னிய முதலீடு 7 சதவீதம் வரை அதிகரித்தது. தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு வாஜ்பாய் அரசு தான் வித்திட்டது. வேலைவாய்ப்புகள் பெருகின. இன்றைய அரசியல் தலைவர்களுக்கு வாழும் வழிகாட்டியாக வாஜ்பாய் திகழ்கிறார் என்பதில் ஐயம் இல்லை.- டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்,மாநிலத் தலைவர்,பாரதிய ஜனதா கட்சி.044 - 2432 7373

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Sandwalker - chenai,இந்தியா
14-மார்-201515:13:51 IST Report Abuse
Indian Sandwalker அவர் பண்ணது இருக்கட்டும், நீங்க எதாவது உருப்படியா பிஜேபி 50 சீட் புடிக்க பண்ணுங்க. இல்ல இடத்த காலி பண்ணுங்கம்மா...
Rate this:
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
25-டிச-201410:37:15 IST Report Abuse
Kankatharan  எல்லாம் சரி அது என்ன்ன "வல்லரசாக காட்டிய பெருமை" தமிழிசையும் நல்ல பேச்சாளரகத்தானே இருக்கிறீங்க.
Rate this:
Share this comment
Cancel
முஹம்மது ரஸீத் - பொ ள் ளா ச் சி.  ( Posted via: Dinamalar Android App )
25-டிச-201408:45:48 IST Report Abuse
முஹம்மது ரஸீத் பதவியில் (மாநில தலைவர்) இருக்கும் போது, அந்த கட்சியின் தலைவர்களை புகழ்ந்து, தொடர்ந்து அறிக்கைகள் விட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று மாநில முதல்வர் பதவியை அடைய முடியும். அவ்வப்போது பிரதமர் மோடி அவர்களையும் புகழ்ந்து பேசிக்கிட்டு இருங்க. ஏனெனில் காலை வார நான், நீ என்று ஒரு கும்பல் தயாராக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X