இந்த வாரம் 'டார்லிங்...' கூட...! யாரு டார்லிங்... யாருக்கு டார்லிங்... என மனசுக்குள் மத்தாப்பு பொங்குமே? சிந்தனையை சிதறவிட வேண்டாம்... டார்லிங் படத்தோட நாயகி நிக்கிஹல்ராணி தான் அவர்!பெங்களூரு அழகு, மலையாள கரையில் தவழ்ந்து இப்போது தமிழுக்கு தாவியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி வந்த அவர் 'தினமலர்' வாசகர்களுக்காக வாசல் வந்து நம்மை வரவேற்று வார்த்தைகளால் விளையாடினார்...* கர்நாடக பெண்ணுக்கு தமிழ் வருமா?என் அம்மாவுக்கு தமிழ் தெரியும். அவர் வழியில் 'டப்பிங்' பேசும் அளவுக்கு தமிழ் கற்றேன். யாகாவாராயினும் நா காக்க, டார்லிங் படங்களில் நம்ம குரல் தான்.* தமிழில் யாரோடு ஜோடி சேர ஆசை?ரஜினி சார் தான்.* லிங்கா படம் பார்த்தீங்களா?சூட்டிங் பிஸியில் என்னால் பார்க்க முடியலீங்க!* இப்படி தான் என்று உங்களுக்குள் வரையறை உண்டா?மலையாள படமான 1983ல் பள்ளி மாணவி, டார்லிங்கில் பேய், யாகாவாராயினும் நா காக்கவில் மாடர்ன் பொண்ணு. இதில் ஏது வரையறை?* இந்த அழகிற்கு என்ன தான் செய்றீங்க...அப்பப்போ பிரியாணிய ஒரு கட்டு கட்டுவேன். வெண்பொங்கல் சாம்பார் கிடைத்தால் ஜாலியோ ஜாலி. சதை போடாமல் இருக்க கடும் உடற்பயிற்சி, யோகா செய்றேன். கஷ்டப்பட்டு வேலைபார்க்கறதே...சாப்பிட தானே!* கல்யாண கனவுகள் ஏதாச்சும் உண்டா?காதல் திருமணம் செய்யாத என் பெற்றோர் மகிழ்ச்சியாக உள்ளனர். எனக்கு லவ் மேரேஜ் பிடிக்கும். ஆனால் இப்போதைக்கு அந்த சிந்தனை இல்லை. தற்போதைய என் பாய் பிரண்ட் சினிமா மட்டும் தான்.* உங்களுடையது கலை குடும்பமாமே...நடிகை சஞ்சனா என் அக்கா. அவங்க ரொம்ப பிஸி. மற்றபடி எங்கள் வீட்டில் நாங்கள் இருவர் தான் கலை சார்ந்தவர்கள். எங்கள் உலகம் பெற்றோர். * 2015 சபதம் ஏதாவது உண்டா?2015 ஜூன்வரை கால்ஷிட் உள்ளது. அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு 10 படங்கள் புக் ஆகியுள்ளது. ரசிகர்களின் நடிகை என்ற பெயர் பெற விரும்புகிறேன் என கனவுகளோடு சிறகடித்து பறந்த அந்த பச்சைக்கிளியை பிரிய மனமின்றி பிரிந்தோம்.உங்களுக்கும் மனமில்லையா? nikkigalrani03@gmail.comல் சொல்லிடுங்க!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE