பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ முகாமில் சமுதாய வளைகாப்பு

Added : டிச 28, 2014
Advertisement

செங்குன்றம்: செங்குன்றத்தில், அரசு சிறப்பு மருத்துவ முகாமில், கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பழங்கள், சத்துணவுகள் வழங்கப்பட்டன.சென்னை செங்குன்றத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. அதில், நாரவாரிக்குப்பம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், நுாற்றுக்கும் அதிகமானோருக்கு, மருத்துவ சிகிச்சை அளித்தனர்.சித்த மருத்துவ பிரிவின் மூலம், முகாமில், பங்கேற்றவர்களுக்கு, நிலவேம்பு குடிநீர் காய்ச்சியும், பொடியாகவும் வழங்கப்பட்டது. மேலும், 20 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு பழங்கள், சத்துணவு ஆகியவை வழங்கப்பட்டன. கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.முன்னதாக, மருத்துவ முகாமை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X