காஞ்சிபுரம்; செங்கல்பட்டு அடுத்த, பொன்விளைந்தகளத்துாரில், மாந்திரீகம் செய்ய வந்த ஆணிடம், பாலியல் தொந்தரவு செய்த, போலி சாமியார்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு அடுத்த, பொன்விளைந்தகளத்துார் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா
கிருஷ்ணன், 27; செங்கல்பட்டு பகுதியில் கணினி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். தன் தொழில் வளர்ச்சியடைய, மாந்திரீகம் செய்ய திட்டமிட்டு உள்ளார். இதற்காக, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த காதர் பாஷா, 37, செகத் அலி ஆகிய இருவரையும், இணையதளம் மூலம் கண்டுபிடித்து தொடர்பு கொண்டுள்ளார். பேசியபடி, நேற்று காலை ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு, இருவரும் வந்துள்ளனர். அப்போது, மாந்திரீகம் செய்வதற்கு, நிர்வாண நிலையில் இளம்பெண் வேண்டும் என, கேட்டுள்ளனர். இதற்கு மறுத்து, தனக்கு வேண்டப்பட்ட ஆண் ஒருவரை, ஆடையின்றி நிறுத்தியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில், அவருக்கு காதர் பாஷா மற்றும் செகத் அலி ஆகிய இருவரும், பாலியல் தொல்லை கொடுத்ததால், அதிர்ச்சி அடைந்த ராதாகிருஷ்ணன் மற்றும் ஆதரவாளர்கள் சிலரும் சேர்ந்து, இருவரையும் தாக்கி, செங்கல்பட்டு தாலுகா போலீசாரை வரவழைத்து, அவர்களிடம் ஒப்படைத்தனர். போலி சாமியார் இருவரையும், போலீசார் கைது செய்தனர்.