' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விமான விபத்தில் உடல்கள் மீட்பு

Updated : டிச 30, 2014 | Added : டிச 30, 2014 | கருத்துகள் (35)
Share
Advertisement
சுமத்ரா : காணாமல் போன ஏர் ஏசியா விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை என ஏர் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.தலையில் அடித்துக் கொண்டு அழுகை : ஏர் ஏசியா கடலில் தான் விழுந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' 40 உடல்கள் மீட்பு ; உறவினர்கள் கதறல்

சுமத்ரா : காணாமல் போன ஏர் ஏசியா விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை என ஏர் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.தலையில் அடித்துக் கொண்டு அழுகை : ஏர் ஏசியா கடலில் தான் விழுந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலில் மிதக்கும் உடல்கள் தொடர்பான காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது வரை 4 அல்லது 6 உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுர்பையா விமான நிலையத்தில், பலியான பயணிகளின் உறவினர்கள் குவிந்துள்ளனர். பயணிகள் இறந்துவிட்டனர் என்ற செய்தியை கேட்டதும், கூடியிருந்த பலர் தலையில் அடித்து கொண்டு அழுது கதறும் காட்சி அனைவரையும் நெஞ்சுருக செய்துள்ளது. பலர் சோகம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
' இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை ' என ஏர் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில இரங்கல் தெரிவித்துள்ளார். சுர்பையா மேயர் ரிஷ்மகரினி தனது இரங்கல் செய்தியில் , " அவர்கள் நம்மவர்கள் அல்ல. கடவுளுக்கு சொந்தமானவர்கள்” என கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugan - Chennai ,இந்தியா
31-டிச-201402:59:57 IST Report Abuse
murugan மோசமான வானிலை இருந்தால் விமானங்க்களை எவ்வாறு இயக்கணும் என்ற ஆராய்ச்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும் தற்போது தாழ்வாக பறக்கும் நடைமுறையை தான் கடைப்பிடிக்கிறார்கள் முதல் நாள் செய்தியிலியே இந்த விமானத்தை இயக்கிய விமானிகள் கீழே பனி மூட்டம் அதிகமானதால் அதிக உயரத்திற்கு பறக்க விமான நிலையத்தில் அனுமதி கேட்டதாகத்தான் செய்தி வெளியானது அந்த விமானிகள் உயர பறக்கும் போது வாயு மண்டலத்தை தாண்டியிருந்தால் விமானம் வெடித்து சிதறி விடும் ராடாருடன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு விடும் நாம் யூகத்தின் அடிப்படையில் எதையும் சிந்திக்க முடியாது பயணிகள் இழப்பையும் அந்த துயரத்தையும் துடைக்க முடியாது நமது இரங்கலை மட்டும் வெளிப்படுத்துவோம்
Rate this:
Cancel
kdadhi - Bangkok,தாய்லாந்து
31-டிச-201400:49:21 IST Report Abuse
kdadhi எல்லாம் வல்ல இறைவன் ...இறந்தவர்கள் ஆன்ம சந்தம் அடைய அருள் புரிய வேண்டும் ....
Rate this:
Cancel
dhanasekar - dharmapuri  ( Posted via: Dinamalar Android App )
31-டிச-201400:34:33 IST Report Abuse
dhanasekar we pray god to that will not happend again and agian.. in thiz year itz a 2 nd accident... i feel sorry for their families and friends
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X