சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை : ஏர் ஏசியா விமான விபத்தில் உடல்கள் மீட்பு| More than 40 bodies of AirAsia QZ8501 victims recovered from Java sea, | Dinamalar

' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விமான விபத்தில் உடல்கள் மீட்பு

Updated : டிச 30, 2014 | Added : டிச 30, 2014 | கருத்துகள் (35)
Share
சுமத்ரா : காணாமல் போன ஏர் ஏசியா விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை என ஏர் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.தலையில் அடித்துக் கொண்டு அழுகை : ஏர் ஏசியா கடலில் தான் விழுந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' 40 உடல்கள் மீட்பு ; உறவினர்கள் கதறல்

சுமத்ரா : காணாமல் போன ஏர் ஏசியா விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை என ஏர் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.தலையில் அடித்துக் கொண்டு அழுகை : ஏர் ஏசியா கடலில் தான் விழுந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலில் மிதக்கும் உடல்கள் தொடர்பான காட்சிகள் உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது வரை 4 அல்லது 6 உடல்கள் வரை மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுர்பையா விமான நிலையத்தில், பலியான பயணிகளின் உறவினர்கள் குவிந்துள்ளனர். பயணிகள் இறந்துவிட்டனர் என்ற செய்தியை கேட்டதும், கூடியிருந்த பலர் தலையில் அடித்து கொண்டு அழுது கதறும் காட்சி அனைவரையும் நெஞ்சுருக செய்துள்ளது. பலர் சோகம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
' இந்த சோகத்தை சொல்லிக்கொள்ள வார்த்தைகள் ஏதுமில்லை ' என ஏர் ஏசியா தலைமை அதிகாரி தனது டுவிட்டரில இரங்கல் தெரிவித்துள்ளார். சுர்பையா மேயர் ரிஷ்மகரினி தனது இரங்கல் செய்தியில் , " அவர்கள் நம்மவர்கள் அல்ல. கடவுளுக்கு சொந்தமானவர்கள்” என கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X