மத்திய அமைச்சரின் வாக்குறுதி: தொழில் துறையினருக்கு தெம்பு

Added : டிச 30, 2014
Share
Advertisement
""மத்திய அரசாங்கத்தின் கருணை இருந்தால், உண்மையாலுமே, வெற்றிப்பாதைக்கு செல்லலாம்,'' என்றவாறு, மிடுக்காக நடந்து வந்து, அமர்ந்தாள் மித்ரா. ""அடடே... நீயும், "வெற்றிப்பாதையில் திருப்பூர்' நிகழ்ச்சிக்கு போயிருந்தியா?'' என்று ஆவலுடன் கேட்டாள் சித்ரா. ""போயிருந்தேன்... நல்ல கூட்டம். மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எந்த பந்தாவும் இல்லாம, எளிமையா இருந்தாங்க.
மத்திய அமைச்சரின் வாக்குறுதி:  தொழில் துறையினருக்கு தெம்பு

""மத்திய அரசாங்கத்தின் கருணை இருந்தால், உண்மையாலுமே, வெற்றிப்பாதைக்கு செல்லலாம்,'' என்றவாறு, மிடுக்காக நடந்து வந்து, அமர்ந்தாள் மித்ரா.


""அடடே... நீயும், "வெற்றிப்பாதையில் திருப்பூர்' நிகழ்ச்சிக்கு போயிருந்தியா?'' என்று ஆவலுடன் கேட்டாள் சித்ரா.


""போயிருந்தேன்... நல்ல கூட்டம். மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், எந்த பந்தாவும் இல்லாம, எளிமையா இருந்தாங்க. நிதானமா... தெள்ளத்தெளிவா தமிழில் பேசுனாங்க. தொழில் துறைக்கு மத்திய அரசு பக்கபலமா இருக்கும்னு உறுதி சொல்லியிருக்காங்க. உண்மையாகவே புத்துணர்ச்சி ஏற்பட்ட மாதிரி இருக்குதுனு, தொழில்துறையினர் பேசிக்கிட்டாங்க; ரொம்பவுமே குஷியாகிட்டாங்க,'' என்ற மித்ரா, ""ஒரு பக்கம் முடிந்த பிறகு, இன்னோரு பக்கம் ஆரம்பிச்சிட்டாங்க...'' என, "சஸ்பென்ஸ்' வைத்தாள்.


""என்ன சொல்ல வர்றே... ஒண்ணுமே புரியலையே...?'' என்று இழுத்தாள் சித்ரா.


""உட்கட்சி தேர்தலை சொன்னேன். தி.மு.க.,வில் தேர்தல் "சுமூகமாக' முடிஞ்சிருச்சு. அ.தி.மு.க.,வில் ஆரம்பிச்சிருக்கு. வார்டு கிளை செயலாளர் பதவிக்கே பலத்த போட்டியா இருக்கு. ஓட்டுப்பெட்டி வைக்காம தேர்தலை முடிக்கணும்னு, மேலிடத்தில் கறாரா சொல்லிட்டாங்க. அதனால, அமைச்சரே, வார்டு வாரியா ஒவ்வொருத்தரையும் நேர்ல அழைச்சு பேசி, வேட்பாளரை தேர்வு செஞ்சிருக்கார். கிளை மற்றும் வார்டு செயலாளர் பொறுப்புக்கே இவ்ளோ போட்டீனா? மத்த பதவியை பிடிக்க சரியான போட்டி இருக்குமே? எப்படி சமாளிக்கிறதுனு மேல்மட்ட நிர்வாகிங்க பயந்து போயிருக்காங்க,'' என்று முடித்தாள் மித்ரா.


""மண்ணு கொட்டி, ரோட்டை ரெடி பண்றதுக்கு, 90 ஆயிரம் ரூபாய் ஒதுக்கியிருக்கோம்னு சொன்னாங்க; மண்ணு கொட்டாமலேயே, இப்ப தொகை செலவாயிடுச்சுன்னு சொல்றாங்க...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


""எங்க... மாநகராட்சியிலா...'' என கேட்டாள் மித்ரா.


""அதெப்படி, கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்ட... நல்லூர் மண்டலத்தில், கேப்டன் கட்சி கவுன்சிலர் வார்டு பேங்கர்ஸ் காலனியில், எந்த வசதியும் செய்து கொடுக்கலை. மழைக்காலத்துல சிரமமா இருக்கு; மண் ரோட்டையாவது சரி பண்ணுங்கனு கேட்டிருக்காங்க. "90 ஆயிரம் ஒதுக்கியிருக்கு; மண்ணு வாங்கிக்கொட்டி, சரி செஞ்சிடலாம்'னு மாநகராட்சி அதிகாரி சொல்லியிருக்கார். இப்ப கேட்டா, வேலை முடிச்சாச்சுனு சொல்றார். மண்ணு வாங்கியிருக்கலாம்; எந்த ஏரியாவுல கொட்டி வேலை செஞ்சாங்கனு தெரியலையே. எதிர்க்கட்சி கவுன்சிலர் வார்டுனா இப்படித்தான் இருக்குமானு, பேங்கர்ஸ் காலனி மக்கள் புலம்பிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.


""கனிம வள ஆபீசுல, அவங்களுக்கு தேவையான வேலையை, கல் குவாரிக்காரங்களே செய்றாங்க...'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் மித்ரா.


""இதென்ன, புதுக்கதையா இருக்கு? கலெக்டர் ஆபீசுல இருக்குதே, அந்த கனிமவள ஆபீசையா சொல்றே...?'' என, நம்ப முடியாமல் கேட்டாள் சித்ரா.


""ஆமாம்... அதேதான். கல் குவாரிக்காரங்க, ஒவ்வொரு லோடும் எடுத்துட்டு போறப்ப, கனிம வளத்துறை உதவி இயக்குனரிடம் வாங்கிய உரிமம், "ஹாலோகிராம்' ஸ்டிக்கர் ஒட்டுன ரசீது வச்சிருக்கணும். அதுக்காக, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை, கல் குவாரி ஆளுங்க, ஆபீசுக்கு வர்றாங்க. "பெர்மிட்' புத்தகத்தை எடுத்துட்டு வந்து, ஆபீஸ் முன்னாடி ஒக்கார்ந்து, உதவி இயக்குனர் பயன்படுத்துற "சீல்' அடிக்கிறாங்க; ஸ்டிக்கர் ஒட்டுறாங்க. அப்புறமா, கையெழுத்து வாங்கிட்டு போறாங்க. இதில், என்ன விஷேசம்னா, பெரிய குவாரிக்காரங்களா இருந்தா, ஆபீசுக்குள்ள ஒக்கார்ந்தே வேலையை முடிச்சுட்டு போறாங்க. கையெழுத்தாவது, அதிகாரி போடுறாரான்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X