இழுத்து வந்த இளமை : நம்மூர் புது வரவு சுஜி

Added : ஜன 05, 2015 | கருத்துகள் (3) | |
Advertisement
'பிளாக் அன்ட் ஒயிட்' காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் அண்டை மாநில நாயகிகளின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. தமிழ் தெரியாத எத்தனையோ பேருக்கு முன்னணி நடிகை அந்தஸ்து வழங்கி அழகு பார்த்தது நாமே.கதைக்கான களமாக தமிழ் சினிமா மாறிய பின் கதாநாயகியை விட கதைக்கான நாயகியை தேடத் தொடங்கியுள்ளனர். அதன் விளைவு தமிழ் முகங்கள் அறிமுகம் சமீபமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் வட்ட
இழுத்து வந்த இளமை : நம்மூர் புது வரவு சுஜி

'பிளாக் அன்ட் ஒயிட்' காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் அண்டை மாநில நாயகிகளின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. தமிழ் தெரியாத எத்தனையோ பேருக்கு முன்னணி நடிகை அந்தஸ்து வழங்கி அழகு பார்த்தது நாமே.கதைக்கான களமாக தமிழ் சினிமா மாறிய பின் கதாநாயகியை விட கதைக்கான நாயகியை தேடத் தொடங்கியுள்ளனர். அதன் விளைவு தமிழ் முகங்கள் அறிமுகம் சமீபமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் வட்ட நிலாவை வெட்டி எடுத்த அழகு பதுமை சுஜி இணைந்திருக்கிறார். அகிலவன் படப்பிடிப்பிற்கு விருதுநகர் மாவட்டத்தில் வலம் வந்த அவர் 'தினமலர்'வாசகர்களுக்கு அளித்த கன்னிப் பேட்டி...
* வாய்ப்பு கிடைத்த நிமிடத்தில் எப்படி உணர்ந்தீர்கள்?நான் சென்னைப் பொண்ணு. அகிலவன் படத்தில் அநீதியை எதிர்த்து போராடும் கரிசல் காட்டுமருத்துவ மாணவி தான் கதாநாயகி. என்னை பார்த்ததும் இயக்குனர் 'ஓகே' கூறினார். அந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். ஆனால் நடிக்க வேண்டும் என்று தோன்றியதுமே பெங்களூரு கிளம்பினேன். அங்கிருந்து தான் வாய்ப்பு தேடினேன்.* சென்னையிலிருந்து தேடினால் வாய்ப்பு கிடைக்காதா?அப்படி இல்லை... நான் தேடியது தெலுங்கு பட வாய்ப்பு. அங்கு இதயமே இதயமே, சில் படங்களில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்தேன். அதன் பிறகு தான் தமிழ் வாய்ப்பு கிடைத்து வந்தேன்.* மாடலிங் பெண்களுக்கு சினிமா வசப்படுவது ஏன்?அதைப் பற்றிய ஞானம் எனக்கில்லை. பள்ளியில் படிக்கும் போதே நடனம், நாடகங்களில் நான் தான் முதலிடம். அந்த தாக்கமே என்னை சினிமாவுக்கு இழுத்து வந்தது.* தெலுங்கிலிருந்து தமிழுக்கு தாவிய முடிவு ஏன்?தெரியாத மொழியில் நடிப்பதை விட தெரிந்த மொழியில் நடித்து வெற்றி பெற வேண்டும். வந்தோம்... போனோம்...என்றில்லாமல் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதற்கு தமிழ் சினிமாவை விட வேறு எந்த களமிருக்கிறது?suji.murugan@yahoo.in

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Iniya - Viluppuram,இந்தியா
10-ஜன-201504:25:33 IST Report Abuse
Iniya தெலுங்குல நடிக்க வாய்ப்பு தேட பெங்களூரு போகணுமா? அப்போ கன்னடத்துல நடிக்க வாய்ப்பு தேட ஹைதராபாத் போகணுமா?
Rate this:
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
08-ஜன-201506:44:45 IST Report Abuse
kundalakesi சும்மா சொல்லக்கூடாதுங்க , நம்ம தமிழ் நாட்டில் அழகு ஒரு ஜீனி பிரச்னை தான். கண்கள் தேடுவதோ வெளுப்பும் வடக்கும். வெறுப்பதுவும் அதையே. ம்ம்ம், இதில் மாற்று நாட்டு போதனையால் "லவ் தை நேபர்" என தப்பர்த்தம் செய்து சீரழியும் கலாசார சீஅழிவு வேறே.
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
07-ஜன-201508:12:01 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே வாழ்த்துக்கள் சுஜி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X