'பிளாக் அன்ட் ஒயிட்' காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் அண்டை மாநில நாயகிகளின் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. தமிழ் தெரியாத எத்தனையோ பேருக்கு முன்னணி நடிகை அந்தஸ்து வழங்கி அழகு பார்த்தது நாமே.கதைக்கான களமாக தமிழ் சினிமா மாறிய பின் கதாநாயகியை விட கதைக்கான நாயகியை தேடத் தொடங்கியுள்ளனர். அதன் விளைவு தமிழ் முகங்கள் அறிமுகம் சமீபமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் வட்ட நிலாவை வெட்டி எடுத்த அழகு பதுமை சுஜி இணைந்திருக்கிறார். அகிலவன் படப்பிடிப்பிற்கு விருதுநகர் மாவட்டத்தில் வலம் வந்த அவர் 'தினமலர்'வாசகர்களுக்கு அளித்த கன்னிப் பேட்டி...
* வாய்ப்பு கிடைத்த நிமிடத்தில் எப்படி உணர்ந்தீர்கள்?நான் சென்னைப் பொண்ணு. அகிலவன் படத்தில் அநீதியை எதிர்த்து போராடும் கரிசல் காட்டுமருத்துவ மாணவி தான் கதாநாயகி. என்னை பார்த்ததும் இயக்குனர் 'ஓகே' கூறினார். அந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை தான். ஆனால் நடிக்க வேண்டும் என்று தோன்றியதுமே பெங்களூரு கிளம்பினேன். அங்கிருந்து தான் வாய்ப்பு தேடினேன்.* சென்னையிலிருந்து தேடினால் வாய்ப்பு கிடைக்காதா?அப்படி இல்லை... நான் தேடியது தெலுங்கு பட வாய்ப்பு. அங்கு இதயமே இதயமே, சில் படங்களில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்தேன். அதன் பிறகு தான் தமிழ் வாய்ப்பு கிடைத்து வந்தேன்.* மாடலிங் பெண்களுக்கு சினிமா வசப்படுவது ஏன்?அதைப் பற்றிய ஞானம் எனக்கில்லை. பள்ளியில் படிக்கும் போதே நடனம், நாடகங்களில் நான் தான் முதலிடம். அந்த தாக்கமே என்னை சினிமாவுக்கு இழுத்து வந்தது.* தெலுங்கிலிருந்து தமிழுக்கு தாவிய முடிவு ஏன்?தெரியாத மொழியில் நடிப்பதை விட தெரிந்த மொழியில் நடித்து வெற்றி பெற வேண்டும். வந்தோம்... போனோம்...என்றில்லாமல் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதற்கு தமிழ் சினிமாவை விட வேறு எந்த களமிருக்கிறது?suji.murugan@yahoo.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE