மண்ணிற்கும் உண்டு மனசு!- எம்.ராஜேஷ்| Dinamalar

மண்ணிற்கும் உண்டு மனசு!- எம்.ராஜேஷ்

Added : ஜன 07, 2015 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மண்ணிற்கும் உண்டு  மனசு!- எம்.ராஜேஷ்

மழைபெய்ய ஆரம்பிக்குமுன் வரும் மண்ணின் மணத்தை முகர்ந்து அனுபவிக்காதவர்கள் இந்த பிரபஞ்சத்தில் யாரும் இருக்கமுடியாது. எல்லோருக்கும் பிடித்த மண்ணின் மணம் மட்டுமே இப்போது உள்ளது. அதன் வளத்தை காணவில்லை. 'பிறந்த மண்' என்று பெருமையாக சொல்கிறோம்; அதற்கேற்ப மண்ணை போற்றி பாதுகாப்பது இல்லை. இயற்கை விவசாயத்தை கைவிட்டு ரசாயன உரங்களை நம்பியதன் பலன்... மண்ணில் எந்தவித உயிரும் இல்லை; உயிர்ச்சத்தும் இல்லை.


முன் தோன்றிய மண்:

மண்ணும், மரங்களும் மனிதனுக்கு முன் தோன்றியவை. அதிலும் மரங்களுக்கு முன் தோன்றியது மண் தான். மண் இன்றேல் மரங்களும் இல்லை; மண்ணை நம்பித்தான் மனிதன் வாழ்கிறான். மண்ணில் மனிதன் பிறந்து தவழ்ந்து நடந்து ஓடி ஆடி வளர்ந்து விளையாடி வாழ்ந்து அதே மண்ணில் இறந்து விடுகிறான். மனிதன் தன் வாழ்வியலை அமைக்க மண் உதவுகிறது. தனக்கு வேண்டிய உணவை மண்ணிலிருந்து பெற்று பசியைத் தீர்க்கிறான். மண்மேல் வீடமைத்து பாதுகாப்பாய் வாழ்கின்றான். மண்ணைக் குடைந்து நீரைப் பெற்று தன் தேவைகளுக்கு அனுபவிக்கிறான். மண்ணில் கிடைக்கும் இயற்கை கனிமங்களும் அவன் சொத்தாகிறது.

மண்... புவியியல் வல்லுனருக்கு நாகரிகத்தை கண்டு கொள்வதற்கு, விவசாயிக்கு பயிர்களை உற்பத்தி செய்ய, பொறியியலாளருக்கு கட்டடம் கட்டும் மூலப்பொருளாக முக்கிய பங்கு வகிக்கிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான மண் உயிரற்ற பொருளாக கருதப்பட்டாலும் உயிரினங்களின் புகலிடமாக, தாவரங்களின் வளர்ச்சிக்கு கருப்பையாக இருப்பதால் உயிருள்ள பொருளாகவே கருதப்படுகிறது.


மண்ணுக்கு என்ன செய்தோம் :

புவியின் பரப்பில் 29 சதவீதம் நிலப்பரப்பு சூழ்ந்துள்ளது. மண்ணிலிருந்து தான் எல்லாவற்றையும் பெறுகிறோம். இருக்கும் போது நம்மை காக்கின்ற மண் இறக்கும் போதும் அடைக்கலம் தருகிறது. அத்தகைய மண்ணுக்கு நாம் என்ன செய்கிறோம். என்றாவது மனிதஇனம் மண்ணின் பெருமையை நினைத்துப் பார்த்ததுண்டா.பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் மண்ணை நேரடியாகவோ மறைமுகமாகவோ சார்ந்துள்ளன. மண்புழு, பாக்டீரியா, பூச்சி, கணுக்காலிகள் மண்ணில் மட்டுமே வாழ்கின்றன. தாவர, விலங்கு கழிவுகளை பாக்டீரியா மக்கச் செய்வதன் மூலம் மண்வளத்தை மேம்படுத்துகின்றன. உழவனின் வேலையை எளிமையாக்கிய மண்புழு ரசாயன உரங்களால் சந்ததி இழந்தது. மண்ணும் சத்து இழந்ததால் நிலங்கள் விற்கப்பட்டன. மண் இருந்த இடத்தில் மாடமாளிகைகள், அடுக்குமாடி கட்டடங்கள் வந்து விட்டதால் மண்ணை பார்ப்பதே அரிதாகி விட்டது.இருக்கின்ற சிறிதளவு நிலத்தை காப்பாற்றும் வகையில் ஐ.நா., பொதுச் சபை 2015ம் ஆண்டை 'உலக மண் ஆண்டு' என அறிவித்துள்ளது. மண்ணில் அப்படி என்ன விசேஷம்.


நம்மைவிட அதிகம் :

ஒரு தேக்கரண்டி மண்ணில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை நம் மனித இனத்தின் எண்ணிக்கையை விட அதிகம். ஒரு கிராம் மண்ணில்5000க்கும் அதிகமான பல்வகை பாக்டீரியாக்கள் உள்ளன. புவியில் உள்ள 0.01 சதவீதம் தண்ணீர், மண்ணில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் மண்புழுவால் 15 டன் உலர்மண் பதப்படுத்தப்படுகிறது. ஒரு ஏக்கரில் 14லட்சம் மண்புழுக்கள் காணப்படுகின்றன. ஏக்கருக்கு ??ஆயிரம் மொத்த எடை உள்ள உயிரினங்கள் ஆறு அங்குல மண் அளவில் உயிர்வாழ்கின்றன. உலகளவில் வெளியாகும் கரியமில வாயுவில் 10 சதவீதம் மண்ணில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.ஒரு ஆண்டில் 600 லட்சம் எக்டேர் நிலப்பரப்பின் இழப்பால் ??? லட்சம் டன் மேற்புற மண் அரிப்பு ஏற்படுகிறது. அதிகபட்ச பயன்பாடு மற்றும் தரமற்ற மேலாண்மையால் ??? லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இழக்கப்படுகின்றன. பாலைவனமாக மாறும் நிலங்கள் மூலம் ??? லட்சம் சதுர மைல் அளவு உலகின் நிலப்பரப்பு இழக்கப்படுகிறது.


என்ன காரணம் :

தொழிற்சாலை கழிவுகள், பயிர்களின் பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்களால் மண் மாசுபடுகிறது. மழைக்காலத்தில் இந்த ரசாயனங்கள் வயல்வெளியிலிருந்து ஆறு, குளம், குட்டையில் கலந்து மீன் இனங்களை அழிக்கிறது. மனிதனால் மாசுபடுத்த முடியாதது சூரியஒளி மட்டும் தானோ.'மண் இன்றி இப்பூமியில் நாம் வாழமுடியாது. உணவுக்கும், எரிபொருளுக்கும், நார்ப்பொருள் உற்பத்திக்கும் மண் அடிப்படையாக உள்ளது' என ஐ.நா.,வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவன உதவி இயக்குனர் மரியா ஹெலினா செமிடோ தெரிவித்துள்ளார்.

'மண்அரிப்பு, மண்ணில் அமிலத்தன்மை, நகர்மயமாதல், வேதிப் பொருட்களால் உலகில் ?? சதவீத மண்வளம் ஏற்கனவே தரம் குறைந்து விட்டது' என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மண் நம்மைப் போல ஒரு உயிரினம் என நினைத்தால் மட்டுமே மண்ணைக் காப்பாற்ற முடியும். 'காணி நிலம் வேண்டும்'... ரியல் எஸ்டேட்டுக்கு அல்ல. 'அங்கே தென்னை, மா, பலா மரங்கள் வளர்த்து கத்தும் குயிலோசை சற்றே என் காதில் விழவேண்டும்' என்ற பாரதியின் கூற்றுக்கு உயிர்கொடுத்து நல்ல இயற்கைச் சூழலை உருவாக்குவோம். அதற்காகவேனும் மண்ணைக் காப்போம். நம் சந்ததிக்கும் மண்ணின் அருமையை கற்றுத் தருவோம்.

*ஒரு ஆண்டில் 600 லட்சம் எக்டேர் நிலப்பரப்பின் இழப்பால் 240 லட்சம் டன் மேற்புற மண் அரிப்பு ஏற்படுகிறது.
*அதிகபட்ச பயன்பாடு மற்றும் தரமற்ற மேலாண்மையால் 150 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இழக்கப்படுகின்றன.
* தொழிற்சாலை கழிவுகள், பயிர்களின் பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்களால் மண் மாசுபடுகிறது.
* 'மண் இன்றி இப்பூமியில் நாம் வாழமுடியாது. உணவுக்கும், எரிபொருளுக்கும், நார்ப்பொருள் உற்பத்திக்கும் மண் அடிப்படையாக உள்ளது'
*'மண்அரிப்பு, மண்ணில் அமிலத்தன்மை, நகர்மயமாதல், வேதிப் பொருட்களால் உலகில் ?? சதவீத மண்வளம் ஏற்கனவே தரம் குறைந்து விட்டது'
- எம்.ராஜேஷ்,
உதவி பேராசிரியர்,
விலங்கியல் துறை,
அமெரிக்கன் கல்லூரி,
மதுரை. 94433 94233

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
08-ஜன-201516:20:00 IST Report Abuse
Shekar Raghavan கட்டுரை, பழ வியாபாரி படம் சூப்பர் சூப்பர்......ஒரு நல்ல செய்தி படித்த நிறைவு. நன்றி
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
08-ஜன-201514:52:19 IST Report Abuse
P. SIV GOWRI இருக்கும் போது நம்மை காக்கின்ற மண் இறக்கும் போதும் அடைக்கலம் தருகிறது. அத்தகைய மண்ணுக்கு நாம் என்ன செய்கிறோம். மனது கனக்கிறது . அந்த மண் நம்மை பார்த்து கேள்வி கேட்பது போல் உள்ளது. நாம் வாழும் போதும், வாழுகின்ற போதும், வாழ்ந்து முடியும் போதும் நமக்கு தாய் போல் நம்மை காக்கும் பூமி தாயை நன்றியுடன் காக்க வேண்டும். மிகவும் அருமையான பதிவு. அனைவரும் பாது காக்க வேண்டிய பதிவு நன்றி எம்.ராஜேஷ்,ஜி அண்ட் தினமலர்
Rate this:
Share this comment
Cancel
krishna - madurai,இந்தியா
08-ஜன-201514:15:04 IST Report Abuse
krishna சொல்லறது ஒன்னு செய்யிறது ஒன்னு... நா பொதுவா சொன்னேன்....நீங்க சொல்லுங்க..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X