கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் மீதான வழக்கு: மார்ச் 4ல் ஆஜராக உத்தரவு

Added : ஜன 08, 2015
Share
Advertisement
விழுப்புரம்: விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கில், வரும் மார்ச் 4ம் தேதி, நேரில் ஆஜராக விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சியில் 2014 பிப்., 2ம் தேதி தே.மு.தி.க., மாநாடு நடந்தது. அதில், கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.,க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர், அப்போதைய முதல்வர் ஜெ., வை அவதூறாக பேசியதாக, அரசு

விழுப்புரம்: விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கில், வரும் மார்ச் 4ம் தேதி, நேரில் ஆஜராக விழுப்புரம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த எறஞ்சியில் 2014 பிப்., 2ம் தேதி தே.மு.தி.க., மாநாடு நடந்தது. அதில், கட்சி தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.,க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர், அப்போதைய முதல்வர் ஜெ., வை அவதூறாக பேசியதாக, அரசு வழக்கறிஞர் பொன்சிவா, கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி வழக்குத் தொடர்ந்தார். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், விஜயகாந்த் உள்ளிட்ட நான்கு பேரும் வரும் மார்ச் 4ம் தேதி நேரில் ஆஜராகி, குற்ற நகல்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட நீதிபதி சரோஜினிதேவி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X