நேரு - உள்ளும் புறமும்| Dinamalar

நேரு - உள்ளும் புறமும்

Updated : ஜன 08, 2015 | Added : ஜன 08, 2015 | கருத்துகள் (21)
Advertisement
நேரு - உள்ளும் புறமும்

இந்தியா சுதந்திரம் அடைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு இந்தியா என்றால் அது ஜவஹர்லால் நேருதான். இந்தியாவின் சாதனைகள், குறைபாடுகள், ஏழைமை, வளர்ச்சி, ஐந்தாண்டுத் திட்டங்கள், அயலுறவுக் கொள்கை என்று அனைத்திலும் நேருவே பிரதிபலித்தார். அவருடைய பலமும் பலவீனமும் இந்தியாவின் பலமும் பலவீனமுமாக இருந்தது.இன்று இந்தியா பெருமளவில் உருமாறிவிட்டது என்றாலும் நேருவின் லட்சியமும் அணுகுமுறையும் இன்றும் நம்மை வழிநடத்திச் செல்கின்றன என்பதை இந்தப் புத்தகம் நமக்கு உணர்த்துகிறது. நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மகளான நயன்தாரா சகல் தனது தாத்தா குறித்துத் தீட்டியிருக்கும் சித்திரம் பயனுள்ளதாகவும் ஆச்சரியமூட்டக் கூடியதாகவும் அமைந்துள்ளது.குறிப்பாக, நேருவின் அணிசேராக் கொள்கை உருவான பின்னணி குறித்தும் இதையே அடிப்படையாகக் கொண்டு நேரு வகுத்துக் கொண்ட சர்வதேச அரசியல் உறவுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கிறது இந்தப் புத்தகம். அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தோனேஷியா, வியத்நாம் ஆகிய நாடுகளை நேரு எவ்வாறு அணுகினார், இந்நாடுகளுடன் எத்தகைய பரிமாற்றங்களைக் கொண்டிருந்தார் என்பதை நேரு மற்றும் பிற தலைவர்களின் பிரத்தியேக ஆவணங்களிலிருந்து மேற்கோள் காட்டித் தெளிவுப் படுத்துகிறார் நூலாசிரியர்.நான், என் நாடு, என் மக்கள் போன்ற குறுகிய எல்லைகளைத் தகர்த்தெறிந்து ஒட்டுமொத்த உலகின் பிரச்னைகள் குறித்துத் தெளிவாகச் சிந்தித்து, ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்ட ஓர் அதிசய மனிதரின் கதை இது.வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
31-ஜன-201511:14:14 IST Report Abuse
Tamilnesan நேரு குடும்பமும், காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சாபக்கேடுகள்.அவமான சின்னங்கள். இவர்கள் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும் நாளே இந்தியாவின் உண்மையான விடுதலை திருநாள். ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
K.Palanivelu - Toronto,கனடா
26-ஜன-201506:57:36 IST Report Abuse
K.Palanivelu ஒரு கல்லூரியில் பணியாற்றவேண்டிய அறிவுத்திறன் உள்ள இவர் துரதிருஷ்டவசமாக நிர்வாகத்திறன் இன்றி நாட்டின் பிரதமர் ஆகி, தேவையில்லாமல் உள்துறை மந்திரியின் எச்சரிக்கையையும் மீறி பாகிஸ்தான் காஸ்மீரில் படையெடுத்த பிரச்சினையில் தலையிட்டு,உள்நாட்டு பிரச்சினையை படேலுக்கும் தெரியாமல் ஐ.நா சபைக்கு கொண்டு சென்றதின் மூலம் ஏற்பட்ட இழப்பையும்,வலியையும் இன்றளவும் நாம் சந்த்தித்து கொண்டு இருக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
LAKSHMIPATHI - Thane,இந்தியா
18-ஜன-201515:19:17 IST Report Abuse
LAKSHMIPATHI THE EDITOR MUST HAVE CONSIDERED THE FOLLG. BEFORE PRINTING THE PIC. OF NEHRU His interaction with Gandhi at the time of freedom Jinnah episode and consequent effect on the two countries. First China War and the men and material losses to India. Five year plans and the inflation. Support to Birlas His credentials. His nature of dealing with persons who were the likely choices for PM I think the editor has been very fair to the people of Tamil Nadu in focusing Nehru.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X