நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைதானடா- இந்த நன்றி கெட்ட உலகில் நாய்கள் மேலடா...

Added : ஜன 11, 2015 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை காசி மேடு துறைமுகத்தில் கடந்த வாரம் ஒரு அதிகாலை வேளையில் படம் எடுக்க போயிருந்த போது கண்ட காட்சி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அங்கு இருந்த சிமெண்ட் திண்டு மேல் சடைமுடிதாடியுடன் காவிஉடை தரித்தபடி உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரை சுற்றி ஏாரளமான நாய்கள்.அவைகள் சிறியதும் பெரியதுமாக ரகம் ரகமாக இருந்தன. நீண்ட நாட்கள் பிரிவிற்கு பிறகு தந்தையை சந்திக்கும் சின்ன
நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைதானடா-       இந்த நன்றி கெட்ட உலகில் நாய்கள் மேலடா...

சென்னை காசி மேடு துறைமுகத்தில் கடந்த வாரம் ஒரு அதிகாலை வேளையில் படம் எடுக்க போயிருந்த போது கண்ட காட்சி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அங்கு இருந்த சிமெண்ட் திண்டு மேல் சடைமுடிதாடியுடன் காவிஉடை தரித்தபடி உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரை சுற்றி ஏாரளமான நாய்கள்.அவைகள் சிறியதும் பெரியதுமாக ரகம் ரகமாக இருந்தன.

நீண்ட நாட்கள் பிரிவிற்கு பிறகு தந்தையை சந்திக்கும் சின்ன குழந்தைகள் போல அந்த நாய்கள் அவர் மீது ஏறி விளையாடுவதும் நாக்கால் நக்குவதும் மடிமீது துள்ளிகுதிப்பதுமாக கும்மாளமிட்டன.

அவரும் அவைகளுக்கு ஈடுகொடுத்து காதை கடிக்காதட குழந்தை..முதுகில இருந்து விழுந்துடாதே அடிபட்டுடப்போகுது என்று அன்பொழுக பேசியபடி தன் பாசத்தை காட்டியவர் பின்னர் கையோடு கொண்டுவந்திருந்த பையில் இருந்து பிஸ்கட் எடுத்து அவைகள் சாப்பிட கொடுத்தார்.

சாப்பிட்டபின் மீண்டும் அந்த பாசவிளையாட்டு துவங்கி கொஞ்ச நேரம் நடந்தது.சரி நான் இன்னோரு நாளைக்கு வர்ரேன் இன்னும் நிறைய பிள்ளைகளை பார்க்க வேண்டியிருக்கு என்று தன் பிரியமான நாய்களிடம் சொல்லிவிட்டு பிரியாவிடைபெற்றவரிடம் பேச்சுகொடுத்தோம்.

பேரு செல்வம் ஊரு மதுரை மாவட்டம் அலங்கநல்லுார். அம்மா அப்பா தவறினபிறகு யாருமில்லாத ஆளாயிட்டேன் வறுமையும் வெறுமையும் வாட்டியது கடுமையா உழைச்சேன் ஆனாலும் உழைப்பை உறிஞ்சியவர்கள் அதற்கான ஊதியத்தை தராததால் பலநாட்கள் பட்டினிதான்.

என்னைப்பற்றி நன்கு தெரிந்த ஊர்க்காரர்களே என்னை ஊதாசீனப்படுத்தியபிறகு இந்த ஊரில் இனி நமக்கு என்ன வேலை என்று முடிவு செய்து ஊரைவிட்டு நாற்பது வருடத்திற்கு முன்பாகவே கிளம்பிவிட்டேன்.

பெயரில் மட்டும் 'செல்வத்தை' வைத்துக்கொண்டு சித்தன் போக்கு சிவன் போக்கு என்று காசி ரிஷிகேஷ் என்று வடமாநில புண்ணியதலங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு கடைசியில் சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலை வந்தடைந்தேன்.

இங்கே என்னை பாசத்தோடு வரவேற்றது இங்கு சுற்றித்திரிந்த நாய்கள்தான்.பட்டினத்தாரை தரிசிக்கவருபவர்கள் எனக்கு தேவையான உணவையும் உடையும் கொடுத்துவிடுகின்றரன்.இதை தாண்டி எனக்கு பக்தர்கள் அன்போடு கொடுக்கும் பணத்தில் பிஸ்கட் வாங்கிக்கொண்டு இங்கு இருக்கும் நாய்களுக்கு மட்டுமின்றி இதர தெருக்களில் உள்ள நாய்களையும் தேடிப்போய் உணவு கொடுத்துவருகிறேன்.எங்கேயும் போகாத நேரத்தில் இங்கேயே இருந்து பட்டினத்தார் புகழ் பாடிக்கொண்டு இருக்கிறேன்.இது பல ஆண்டுகாலமாக நடந்துவருகிறது.

இந்த பரதேசி மீது பாசம் காட்டும் நாய்கள் மீது நானும் மிகுந்த அன்பு காட்டிவருகிறேன் இவைகளை பார்க்காமல் என்னால் இருக்கமுடியாது சரி வரட்டுமா இன்னும் சில ஏரியாக்களுக்கு போய் என் மிச்ச பிள்ளைகளை பார்க்கவேண்டி உள்ளது என்றபடி தனது நடையை தொடர்ந்தார்.

-எல்.முருகராஜ்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthupriya - trichy,இந்தியா
02-பிப்-201514:56:18 IST Report Abuse
muthupriya தாத்தாக்கு நன்றி
Rate this:
Cancel
edakkanattan - edaikazhinadu,இந்தியா
14-ஜன-201515:20:23 IST Report Abuse
edakkanattan உயிகளிடத்தில் அன்பு வேணும் _பாரதி வரிகளுக்கு உயிர் கொடுப்பவர்
Rate this:
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜன-201511:29:41 IST Report Abuse
Swaminathan Nath மிருகங்களையும் அன்போடு நேசிக்கும் இவர் நல்ல மனிதர்,. கார்ட்டூன் போட்டதற்கு மனிதனை கொல்லும் கூட்டம் வெட்க பட வேண்டும்,.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X