குழந்தைகளுக்கான பதிப்புலகம் இன்னும் வரவில்லை!| Dinamalar

குழந்தைகளுக்கான பதிப்புலகம் இன்னும் வரவில்லை!

Updated : ஜன 12, 2015 | Added : ஜன 11, 2015 | கருத்துகள் (3)
Advertisement
குழந்தைகளுக்கான பதிப்புலகம் இன்னும் வரவில்லை!

மருதன், பத்தாண்டுகளுக்கு மேல், குழந்தைகளுக்கான, அறிவியல், வரலாற்று, புனைகதைகள்,கட்டுரைகளை எழுதி வருபவர். குழந்தைகளுக்கான இலக்கிய போக்கு குறித்து, மருதன் கூறியதாவது:பெரும்பாலான குழந்தைகளுக்கு, முதல் புத்தகமாக பாடப்புத்தகம் தான் அறிமுகமாகின்றது. அவர்களுக்கு, கதைகள் கூட, பாடங்களாக தான் கற்பிக்கப்படுகின்றன. இந்த கற்பிக்கும் பாங்கு, தங்களது சுதந்திரத்தை பறிப்பதால், குழந்தைகள், தமது கட்டுப்பாட்டுக்குள் இயங்கும், பொம்மைகளோடும், மின்னணு சாதனங்களோடும், தங்களின் உறவை பெருக்கிக் கொள்கின்றனர். நாம், பாடங்களை கற்பிக்க ஆரம்பிக்கும் முன், பாடங்களை பற்றிய கதைகளை சொல்லி தர வேண்டும். குழந்தைகள் பூவினும் மெல்லியவர்கள். அவர்களுக்கான பதிப்புலகம், தமிழில் இன்னும் பிறக்கவில்லை என்று தான், சொல்ல வேண்டும். நீதிக்கதைகள், துப்பறியும் கதைகள் தவிர்த்து, குழந்தைகளுக்கான, புதிய வடிவங்களில் தமிழ் பத்திரிகைகளின் எண்ணிக்கை, மிக குறைவு. ஆனால், குழந்தைகளின் உலகத்துக்குள், நிறைய தொழில்நுட்பங்கள் நுழைந்து விட்டன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், ஒரே கதையை, பல்வேறு வடிவங்களில் சொல்வர். குழந்தைகள் விரும்பும் அனைத்து தளங்களிலும், அது பதியப்பட்டிருக்கும். ஒரு கதைக்குள், ஓவியர், எழுத்தாளர், பதிப்பாளர் எனும், பல்வேறு கைகள் இணைந்திருக்கும். இங்கு, குழந்தைகளின் எண்ண ஓட்டம், ஓவியர், எழுத்தாளர்களுக்குள் பிணைப்பு இல்லாமல், வெவ்வேறு தளங்களில் பயணிப்பதாகவே எனக்குப் படுகிறது. புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளையும், அறிவியல் புனைகதைகளையும், கற்பனை அரசியல் கதைகளையும் குழந்தைகள் விரும்புகின்றனர். அதை நிறைவேற்ற வேண்டும் என்றால், நம் கதை சொல்லும் போக்கும், ஓவியங்களும், காட்சி ஊடகத்தின் கற்பனை திறனை முறியடிப்பதாய் இருக்க வேண்டும். நிறைய, பன்மொழி கதைகள், எளிதாக மொழிபெயர்க்கப்பட வேண்டும். இதற்கு, கார்ட்டூனிஸ்ட், பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர்களின் கூட்டு முயற்சி இருக்க வேண்டும். குழந்தைகளிடம் கதை சொன்ன பின், அவர்களின் சிந்தனை திறனை வளர்க்கும் கேள்விகள், கட்டாயம் இருக்க வேண்டும். அதே கதையை அவர்கள் மூலம் கேட்க வேண்டும். அப்போது தான், மூலக் கதைக்கு, கை, கால்கள் முளைத்து, பல கிளைக்கதைகள் உருவாகும். அந்த கதையை, நடித்துக்காட்ட சொல்ல வேண்டும். அப்போது, அவர்களின் கவனம் உடல்மொழியில் திரும்பும். அவர்களை, விவாதிக்க விட வேண்டும். அப்போது, அவர்கள் கேள்விகளை கேட்கவும், பதில் தயாரிக்கவும், தங்களை மேம்படுத்துவர். இவ்வாறு, அவர் கூறினார்.
புத்தகம், எனக்குள் கலைகளை வளர்க்கிறது!நான், கவிதைகளையும் பாடல்களையும் அதிகம் படிப்பேன். பாடல்களையும், கவிதைகளையும் தொடர்ந்து படிப்பதால், என்னால், மெட்டுக்கு இணையாக பாடல்களை எழுத முடியும். அந்த திறமையால், எங்கள் கல்லுாரி சார்பில், நிறைய கலை போட்டிகளில் கலந்து கொள்ள முடிகிறது. எனக்கு நாட்டுப்புற பாடல்கள் மேல் தீராத காதல் உண்டு. அதனால், நாட்டுப்புற கலைகள், பாடல்களை பற்றிய திறனாய்வு கட்டுரைகளை அதிகம் படிக்கிறேன். என், வாசிப்பு தளத்தை விரிவுபடுத்துமாறு, நண்பர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த புத்தாண்டில், அதை குறிக்கோளாக கொண்டுள்ளேன்.

தினசரி ௧௦௦ பக்கங்கள் வாசிப்பேன்!சிலருக்கு புகைப்பிடித்தல்; மது அருந்துதல், பல்வேறு உணவு வகைகளை தேடி தேடி சாப்பிடுவது போல், எனக்கு புத்தக வாசிப்பு. நான் மட்டுமல்ல, என்னை போன்று பெரிய இளைஞர் கூட்டமே, வாசிப்பு தளத்தில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, தொ.பத்திநாதன் எழுதிய, 'தமிழகத்தின் ஈழ அகதிகள்' என்ற புத்தகத்தை வாசித்து வருகிறேன். இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்காக, ஏங்கிக் கொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டு, புத்தக கண்காட்சியில், 85 புத்தகங்கள் வாங்கினேன். அதில், 45 புத்தகங்கள், நாவல்கள். சுயசரிதைகளை வாசிப்பதில் எனக்கு தனி ஈடுபாடு உண்டு. தினசரி 100 பக்கங்கள் வாசித்த பின்னரே, துாங்க வேண்டும் என்ற இலக்கு வைத்துள்ளேன். அதை நிறைவேற்றியும் வருகிறேன்.


- நமது நிருபர் -வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeban - goodge street ,யுனைடெட் கிங்டம்
12-ஜன-201521:24:50 IST Report Abuse
pradeban அம்புலிமாமா,பாலமித்ரா,முத்து காமிக்ஸ்,லயன் காமிக்ஸ் போன்ற சிறுவர் கதை புத்தகங்கள் வாசித்த காலங்கள் வசந்த காலங்கள் .தேடி பிடித்து படிக்க அவ்வளவு ஆர்வம் .என்றைக்கு t v வந்ததோ அன்றோடு முடிந்து போனது இன்றைய குழந்தைகள் பாவம்
Rate this:
Share this comment
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
12-ஜன-201509:56:25 IST Report Abuse
Anantharaman உண்மை தான் நிருபரே....நான் படித்த காலத்தில்....பூந்தளிர் என்றொரு புத்தகம் மதம் இருமுறை வெளிவரும்...என் அப்பா அதை எப்போது வாங்கீவருவார் நானும் என் தம்பியும் காத்துகொண்டு இருப்போம்.....இபோது அந்த பதிப்பகம் எங்கு இருக்கிறதென்று தெஇர்யவில்லை.......
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
12-ஜன-201508:06:15 IST Report Abuse
Natarajan Ramanathan உண்மைதான்..எனது காலத்தில் பள்ளிகளில் பஞ்சதந்திர கதைகள் சொல்வார்கள். அந்த வகுப்பு மிகவும் ஜாலியாக இருக்கும். மேலும் நீதி கதைகள் எல்லாம் ஒரு A4 அளவுள்ள பேப்பரில் நான்கு படங்களாக இருக்கும். அந்த கதைகளை சொல்லும்போது நமது கற்பனை விரியும். இப்படி கற்றதால் சிறுவயதிலேயே படிப்பின்மீது அளவில்லா காதல் வந்தது. எனது கல்லூரி பருவத்தில் நான்கு ஆண்டுகள் ஒருநாள்கூட 'பங்க்' என்று சொல்லப்படும் செயலை செய்தது கிடையாது. இப்போது அரசு வங்கி அதிகாரியாக இருக்கும்போதும் அனாவசியமாக லீவு எடுக்கும் வழக்கமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X