பொது செய்தி

இந்தியா

சுனந்தா கொலை வழக்கு விசாரணை விறுவிறு: சசி தரூரிடம் விசாரிக்க டில்லி போலீஸ் முடிவு

Updated : ஜன 13, 2015 | Added : ஜன 13, 2015 | கருத்துகள் (6)
Advertisement
சுனந்தா கொலை வழக்கு விசாரணை விறுவிறு: சசி தரூரிடம் விசாரிக்க டில்லி போலீஸ் முடிவு

புதுடில்லி:காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டுள்ளதாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், தங்கள் மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளதை அடுத்து, டில்லி போலீசார் இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து, சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணையை துவங்கியுள்ளனர்.

டில்லி சென்றார்:இதற்கிடையே, சில நாட்களாக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த காங்., - எம்.பி., சசி தரூர், நேற்று டில்லி சென்றார். இதனால், சுனந்தா கொலை வழக்கு குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து, டில்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்ஸியிடம் பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பதில் தர முடியாது:பத்திரிகையாளர்களிடம் கமிஷனர் பஸ்ஸி கூறியதாவது:சுனந்தா கொலை வழக்கு தொடர்பான விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். ஊகங்களின் அடிப்படையில் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது. சிறப்பு விசாரணைக் குழுவினர், நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் விசாரணை நடத்தி வருவதால், இதில், யாருக்கும் சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லை. விசாரணையின் முடிவில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். சசி தரூர் டில்லி வந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. வழக்கு தொடர்பாக தேவை இருந்தால், ஓரிரு நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

'தற்கொலை அல்ல':



முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மூன்றாவது மனைவி, சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜன., 17ல் நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. எனினும், அவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரின் உடலில் இருந்து சேகரிப்பட்ட மாதிரிகளை கொண்டு மீண்டும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வை மேற்கொண்ட டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள், சுனந்தாவின் உடலில் காயங்கள் இருப்பதாகவும், அவரின் உடலில் விஷம் கலந்துள்ளதாகவும் கூறினர். மேலும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mrsethuraman - Bangalore,இந்தியா
13-ஜன-201510:48:03 IST Report Abuse
mrsethuraman  ஆயர்வேத சிகிச்சை முடிந்து விட்டது .இனி டெல்லி போலீஸ் தன்னுடைய சிகிச்சையை ஆரம்பிக்கபோகிறது.
Rate this:
Share this comment
Cancel
sagayam - kanyakumari,இந்தியா
13-ஜன-201510:00:01 IST Report Abuse
sagayam இந்த சசி, கொஞ்சம் ஆபத்தானவர், தீர விசாரித்து உடன் தண்டனை கொடுக்கவும்,.
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
13-ஜன-201507:23:12 IST Report Abuse
Sandru கொலை நடந்து வருடம் 1 ஆகி விட்டது. இப்போதுதான் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளார்களாம். அரசியவாதிகளுக்கும் , பணக்காரகளுக்கும் இந்த காவல் துறை ஏவல் செய்ய அடிமை போல காத்து கிடக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X