இழுத்தடிக்கும் காவல் துறை கோபத்தில் நெடுஞ்சாலைத்துறை

Added : ஜன 13, 2015
Share
Advertisement
""நாப்பது நிமிஷம் பேசுறதுக்கு, ரெண்டு லட்சம் ரூபாய் சம்பளமாம்; கேள்விப்பட்டதும், "ஷாக்' ஆயிட்டேன்,'' என, வடிவேலு "ஸ்டைலில்' இழுத்தாள் சித்ரா. ""நாப்பது நிமிஷம் பேசுனா, ரெண்டு லட்சம் ரூபாயா? என்னக்கா ஆச்சரியமா இருக்கு?'' என, மித்ரா கேட்க, ""சொல்றேன் கேளு, சமீபத்துல ஒரு காலேஜ் பங்க்ஷன்ல, "டிவி' தொகுப்பாளர் ஒருத்தர் பேசுனாரு. வழக்கமா எல்லோரும் பேசுற
இழுத்தடிக்கும் காவல் துறை  கோபத்தில் நெடுஞ்சாலைத்துறை

""நாப்பது நிமிஷம் பேசுறதுக்கு, ரெண்டு லட்சம் ரூபாய் சம்பளமாம்; கேள்விப்பட்டதும், "ஷாக்' ஆயிட்டேன்,'' என, வடிவேலு "ஸ்டைலில்' இழுத்தாள் சித்ரா.

""நாப்பது நிமிஷம் பேசுனா, ரெண்டு லட்சம் ரூபாயா? என்னக்கா ஆச்சரியமா இருக்கு?'' என, மித்ரா கேட்க, ""சொல்றேன் கேளு, சமீபத்துல


ஒரு காலேஜ் பங்க்ஷன்ல, "டிவி' தொகுப்பாளர் ஒருத்தர் பேசுனாரு. வழக்கமா எல்லோரும் பேசுற தன்னம்பிக்கை பேச்சுதான்; புதுசா எதுவும் பேசிடலை. அதுக்கு, அவ்வளவு சம்பளம்,'' என அங்கலாய்த்தாள் சித்ரா.


""இதெல்லாம் உண்மையா இருக்காது; அவரை பிடிக்காதவங்க, யாராவது கௌப்பி விட்டிருப்பாங்க,'' என்றாள் மித்ரா.


""அப்படியும் இருக்கலாம். ஆனா, பிரபலமா இருக்கும் பலர், தனியார் விழாக்களில் கலந்துகிட்டு, செம வருமானம் பார்த்துடுறாங்க,'' என்ற சித்ரா, ""திருப்பூருக்குள் வண்டி ஓட்டுறதே பெரும்பாடா இருக்கு. எங்க பார்த்தாலும் "டிராபிக் ஜாம்'. டென்ஷன்தான் அதிகமாகுது. இங்க பாலம் கட்டுறோம்; அங்க பாலம் கட்டுறோம்னு சொல்றாங்க. ஒரு இடத்திலும், முழுசா பாலம் கட்டுன மாதிரி தெரியலை,'' என, புலம்பினாள்.


""அந்தக் கதை தெரியாதா? அரசு நிதி ஒதுக்கினாலும், பாலம் கட்டுறதுக்கு தேவையான நிலத்தை வருவாய்த்துறை எடுத்துக் கொடுக்கணும்; வருவாய்த்துறை ஆர்வம் காட்டாததால், ஏழு வருஷத்துக்கு மேலாகியும் மூணு பாலம் கட்டுமான பணி கிடப்புல கெடக்குது. கடந்த ஆட்சியில் தீட்டிய திட்டம்னு, ஆளும்கட்சிக்காரங்களும் கண்டுக்கிறது இல்லை; மாவட்ட நிர்வாகமும், ஆளும்கட்சி தரப்பும் உறுதியான நடவடிக்கை எடுத்தா, சீக்கிரமா முடிச்சிடலாம்னு நெடுஞ்சாலைத்துறைக்காரங்க புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.


""பாலம்னு சொன்னதும், ஞாபகத்துக்கு வருது. ஒருவழியா, ஊத்துக்குளி ரோட்டில் பாலம் கட்டுறதுக்கான வேலையை ஆரம்பிச்சிட்டாங்க...


ஆனா, போக்குவரத்து மாற்றத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி வாங்குறதுக்குள், ஒருவழியாகிட்டாங்க. இதேபோல, அவிநாசி ரோட்டில் புஷ்பா ஜங்ஷனில் இருந்து குமார் நகர் வரை மேம்பாலம் கட்டும் திட்டம் நெடுஞ்சாலைத்துறை கைவசம் இருக்கு. 15 மீட்டருக்கு ஒரு இடத்தில் ரோட்டில் துளையிட்டு, மண் ஆய்வு செய்யணும். ரோட்டுக்கு மத்தியில், பாலத்துக்கு தூண் அமைக்க, இந்த "டெஸ்ட்' எடுக்கணும். இதுக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் ஆபீசுல கொடுத்த லெட்டருக்கு எழுத்துப்பூர்வமாக


பதில் சொல்லலை. இருந்தாலும், நெடுஞ்சாலைத்துறைக்காரங்க வேலையை ஆரம்பிச்சிட்டாங்க,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


""ஆமாக்கா... ஒவ்வொரு இடத்திலும் இழுத்தடிச்சா, அவங்களும் எப்படி வேலை செய்வாங்க,'' என, நெடுஞ்சாலைத்துறைக்கு ஆதரவாக பேசிய மித்ரா, ""பைலில் ஒரு கையெழுத்து போட கமிஷனருக்கு எவ்வளவு நேரமாகும். ஆனா, அவரது பார்வைக்கு பைல் போறதுக்கே பல நாள் ஆகுதாம்,'' என்றாள்.


""தர்மபுரி, நீலகிரியை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் உஷாரா இருக்க, அரசு உத்தரவிட்டிருக்கு,'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் சித்ரா.


""என்னக்கா... அரசு மருத்துவமனை விவகாரமா,'' என மித்ரா கேட்க, ""ஆமா... சில இடங்களில், கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் எடுக்கும்போது, ஆண் குழந்தையா, பெண் குழந்தையான்னு


"சிம்பாலிக்'காக சொல்லிடுறாங்க. திருப்பூரில் கருக்கலைப்பும் ரொம்ப அதிகமா இருக்கு; கருக்கலைப்பு மாத்திரைகளும் அதிகமா விற்பனையாகிட்டு இருக்கு. இதை கேள்விப்பட்டு, சுகாதாரத்துறை உஷாராகியிருக்கு. அதனால், பாலினத்தை முன்கூட்டியே சொல்லக்கூடாதுன்னு எச்சரிக்கை விட்டிருக்காங்க,'' என்று சொல்லி முடிப்பதற்கும், இரவு டிபன் ரெடியாவதற்கும் சரியாக இருந்தது.




Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X