பொது செய்தி

தமிழ்நாடு

'பெருமாள் முருகன் செத்துவிட்டான்': எழுத்தாளர் உருக்கமான அறிக்கை

Added : ஜன 13, 2015 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: 'மாதொருபாகன்' சர்ச்சை முற்றிவிட்ட நிலையில், நேற்று எழுத்தாளர் பெருமாள் முருகன் விடுத்த அறிக்கையில். ''இனி எனது சமூக வலைத் தள செயல்பாடுகளை நிறுத்த போகிறேன். பெருமாள் முருகன் செத்துவிட்டான். அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்,'' என, உருக்கமாகவும், வேதனையுடனும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர், தனது முகநூல் பக்கத்தில்

சென்னை: 'மாதொருபாகன்' சர்ச்சை முற்றிவிட்ட நிலையில், நேற்று எழுத்தாளர் பெருமாள் முருகன் விடுத்த அறிக்கையில். ''இனி எனது சமூக வலைத் தள செயல்பாடுகளை நிறுத்த போகிறேன். பெருமாள் முருகன் செத்துவிட்டான். அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்,'' என, உருக்கமாகவும், வேதனையுடனும் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர், தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது:குறிப்பு: நண்பர்களே, கீழ்வரும் அறிக்கை இரண்டு நாட்களுக்கு இந்த முகநூலில் இருக்கும். அதன்பின் சமூக வலைத்தளச் செயல்பாடுகளில் இருந்து, பெருமாள் முருகன் விலகி விடுவான். சமூக வலைத்தளங்களில் அவனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.எழுத்தாளர் பெருமாள் முருகன் என்பவனுக்காக, பெ.முருகன் அறிக்கை:எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல; ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி, அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.'மாதொருபாகன்' நூலோடு பிரச்சினை முடிந்துவிட போவதில்லை. வெவ்வேறு அமைப்புகள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்து பிரச்னை ஆக்க கூடும். ஆகவே பெருமாள் முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:1. பெருமாள் முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர, அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக் கொள்கிறான். இனி, எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறான்.2. பெருமாள் முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார், அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் என, கேட்டுக் கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை, அவர்களுக்கு பெ.முருகன் வழங்கி விடுவான்.3. பெருமாள் முருகனின் நூல்களை, இதுவரை வாங்கியோர், தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்தி விடலாம். யாருக்கேனும் நஷ்டம் என கருதி அணுகினால், உரிய தொகையை அவருக்கு வழங்கிவிட தயாராக உள்ளான்.4. இனி, எந்த இலக்கிய நிகழ்வுக்கும் பெருமாள் முருகனை அழைக்க வேண்டாம் என கேட்டு கொள்கிறான்.5. எல்லா நூல்களையும் திரும்ப பெறுவதால் ஜாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள், போராட்டத்திலோ பிரச்னையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டு கொள்கிறான்.அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.பெ.முருகன்.இவ்வாறு, அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.பெருமாள்முருகன் என்பவனுக்காக

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthilkumar - kilakarai,இந்தியா
14-ஜன-201510:10:23 IST Report Abuse
senthilkumar பொது வாழ்விற்கு வருபவர்கள் தன்னை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைக்கும் பொழுதுதான் இது போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. பொதுவாக எழுத்தாளர்கள் தான் நினைக்கும் கருத்தை சொல்ல முடிந்து அதனால் ஏற்படும் ஜனநாயக விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.இங்கு நடக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்றால் உலகின் வேறு இடங்களில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கையும் மீறி முன்னேடுத்துத்செல்பவர்களே துணிவுள்ளவர்கள் என கருதப்படுவார்கள்.காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்பதை நினைவில் கொண்டு திரு பெருமாள் முருகன் அவர்கள் எழுத்துலகிற்கு தங்களின் உயரிய பங்களிப்பை உறுதி செய்யவேண்டும் நன்றி.
Rate this:
Cancel
chelladorai - Chennai,இந்தியா
14-ஜன-201509:51:27 IST Report Abuse
chelladorai பெருமாள் முருகன் அவர்களுக்கு, படைப்பில் சத்தியம் காப்பது என்பது நன்கு ஆய்வு செய்த தகவல்களை அஞ்சாமல் வெளிப்படுத்துவது. ஒரு படைப்பாளனுக்கு இருக்க வேண்டிய பல தகுதிகளில் அஞ்சாமை, அறம் காத்தல் ஆகியவை அடங்கும். வரலாற்று உண்மைகளை ஆய்ந்து படைப்புகளாக வெளிப்படுத்துவது என்பது மக்களுக்கு தன் பண்பாடு உருவானவிதம் குறித்தான சரியான புரிதலையும் தொடர் வாழ்க்கையில் மேம்பட்ட அற நெறிகள் கடைபிடிப்பதற்கும் உதவும். கல்வி என்ற பெயரில் தவறே இன்று அதிகமாக கற்றுத்தரப்படுகையில் ஒரு உண்மையானப் படைப்பாளியின் கடமை சமுதாயத்தில் மேலும் அதிகமாகின்றது. அக்கடமையே அவரது அறமாகும். உங்களின் படைப்புகளளில் தவறு இல்லை என்று உங்களுக்குத் தெளிவாகத் தோன்றும்போது நீங்கள் உங்கள் படைப்பாக்கத்தை தொடர்வதுதான் அறச் செயல்பாடு. ஒரு வேளை தவறு இருப்பின் அல்லது தவறு சுட்டிக்காட்டப்படின் அதை தீர ஆய்ந்து களைவது அல்லது அதற்கு பதில் சரியானதை நிரப்புவதே எழுத்தில் அறத்தை கடைப்பிடிப்பதாகும். எழுத்தையே விட்டவிடுவதல்ல உங்கள் முடிவு தவறு செய்பவர்களுக்கு மேலும் தவறான வழி காட்டுகின்றது. அறத்தை நிலைநாட்ட எழுத்தறத்தை அஞ்சாமையுடன் தொடர பெருமாள் முருகனிற்கும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள். அறத்தின் வழி, செல்லதுரை
Rate this:
Cancel
sadasivan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201500:43:24 IST Report Abuse
sadasivan சினிமாவில் இந்து கலாச்சாரத்தை கெட்டதாக காட்டுகிறீர்களே என்றால் மக்கள் பார்ப்பதால் தான் அப்படி எடுக்கிறோம் என்கிறார்கள், நாவலை ஆபாசமாக எழுதி மக்கள் கேட்டால் மக்களிடம் கேட்டுக்கொண்டா எழுத முடியும் என கேட்கிறார்கள். எப்படியும் சரி இந்து மதத்தை பழித்து இழித்து எழுத வேண்டும், காட்ட வேண்டும். அவ்வளவுதான் இவர்களது நோக்கம். இப்படி எழுதுபவர்களுக்கும், காட்டுபவர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் என்ற பட்ட வேறு. த்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X