புதுவரவு| Dinamalar

புதுவரவு

Added : ஜன 13, 2015
Advertisement

குழந்தைகளுக்கான ஒன்பது சிறுகதைகளின் தொகுப்பு இது. டால்பின்புரத்தில் வசிக்கும் 'டால்' - க்கும், மீசையூரில் வசிக்கும் 'ழீ'க்குமான சந்திப்பில் நடக்கும் கதைகளின் தொகுப்பு, இந்த புத்தகம். 'டால்' என்றால் டால்பின்; 'ழீ' என்றால் தங்கமீன். அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் சிறுகதையாக எழுதப்பட்டு உள்ளன. சிறுகதைகள் தனித்தனியாக இருந்தாலும், மொத்தமாக வாசிக்கும் போது, சிறிய நாவல் போல் உள்ளது. கதைக்களமும், அதன் பெயர்களும், சம்பவங்களும், குழந்தைகளுக்கானதாகவே உள்ளன. வார்த்தைகளில் தெரியும் புதிய உலகத்தை, ஓவியங்கள் கண் முன் நிறுத்துகின்றன.
டாலும் ழீயும்
பக்கம்: 32 விலை: ரூ. 25 நுாலாசிரியர்: விழியன் வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன்ஸ் ( 044 - 24332424



தீவிர புனைகதை எழுத்துகளின், மொழிபெயர்ப்பாளரான பாவண்ணனின், குழந்தைகளுக்கான பாடல் தொகுப்பு இது. பொதுவாக, பெரும்பாலான குழந்தை பாடல்கள், பெரியவர்களுக்காக எழுதப்பட்டது போன்று தோன்றும். அவை குழந்தைகளுக்கு அன்னியமாகவே இருக்கும். இந்த நுாலில், குழந்தைகள் வாசிக்கும் வகையில், எளிய மொழியில் பாடல்கள் புனையப்பட்டுள்ளன.இவற்றில், போதையும் இல்லை; போதனைகளும் இல்லை. குழந்தைகளைப் போல், குழந்தையாகவே இருக்கின்றன. எளிய மொழியும், எளிய காட்சிகளும் அடங்கி உள்ளன. பாடல்களில் இருந்து, குழந்தைகளுக்கான இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் பெற்றோர், இந்த நுாலை பரிசீலனையில் எடுத்துக் கொள்ளலாம்.


யானை சவாரி
பக்கம்: 64 விலை: ரூ. 40


நுாலாசிரியர்: பாவண்ணன் வெளியீடு: புக்ஸ் பார் சில்ரன்ஸ் ( 044 - 2433 2424




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X