மோடி அரசிடம் எதிர்பார்ப்பது என்ன?| Dinamalar

மோடி அரசிடம் எதிர்பார்ப்பது என்ன?

Updated : ஜன 20, 2015 | Added : ஜன 15, 2015 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மோடி அரசிடம் எதிர்பார்ப்பது என்ன?

( " உங்கள் குரல் உலகம் முழுவதும் " என்ற தலைப்பில் அமைந்துள்ள இந்த புதிய பகுதியில், வாசகர்கள் தாங்கள் விரும்பும் சுவையான தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் தரமானதாக, தனி நபர் எவரையும் காயப்படுத்தாததாக இருக்க வேண்டும். அரசியல், மனித நேயம், உடல் ஆரோக்கியம் போன்று எது தொடர்பாக வேண்டுமானாலும் கட்டுரைகள் அமைந்திருக்கலாம். உங்கள் பெயர், இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களுடன் உங்களுடைய கட்டுரைகள் வெளியாகும். பொங்கல் பரிசாக இந்த புதிய பகுதியை வரவேற்று ஆதரவு தர வேண்டுகிறோம்.)

கடந்த 2014 லோக்சபா தேர்தலில், அசுர பலத்துடன் வென்று ஆட்சித்தலைமை பீடத்தில் அமர்ந்திருக்கும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான, மத்திய அரசிடம், 2015இல் மக்கள் எதிர்பார்க்கும் சில முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சித் திட்டங்கள் இவைகளாத்தான் இருக்கும் என்பது எனது அனுமானம்.


ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம்:

பிரம்மாண்ட ஊழல்களால்தான், மக்கள் காங்கிரசை அகற்றி, பா.ஜ.க., வை ஆட்சியில் அமர வைத்தனர். எனவே மக்கள் முதலில் எதிர்பார்ப்பது, ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகம்.

ஒரு அரசுத் துறையில் நடக்கும் பதவி உயர்வுகள், பணி மாறுதல்கள், பணியிட மாற்றங்கள் போன்றவை, எதன் அடிப்படையில் நடக்கின்றன என்பது, சாதாரண மக்களுக்குத் தெரியாது. பல துறைகளில், உயரதிகாரிகளை அனுசரித்து போகாத, கீழ் நிலை அதிகாரிகள், இட மாறுதல் செய்யப்படுவது; பின், சில லட்சங்களை லஞ்சமாக கொடுத்து, தாங்கள் விரும்பிய இடத்தில், பணி மாறுதல் பெறுவது போன்றவை, நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இதனால், ஊழியர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்; மக்கள் பணியும் தொய்வடைகிறது.

இறுதியாக பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். குறித்த காலத்தில் ஒரு சேவை கிடைக்காமல், அலைக்கழிக்கப்படுகின்றனர். சில லட்சங்களை கொடுத்து, பணிக்கு வரும் சில அதிகாரிகள், அந்தப் பணத்தை மக்களிடம் தான் லஞ்சமாக பெற நினைப்பர். எனவே பணி நியமனங்கள், பணி இடமாறுதல்கள், பதவி உயர்வுகள் போன்றவை, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை, மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.மேலும், அதிகாரிகள், குறித்த நேரத்தில் பணிக்கு வருவது, குறிப்பிட்ட பணி நேரம் அலுவலகத்தில் இருப்பது போன்றவற்றையும், அரசு கண்காணிக்க வேண்டும்.


தொழில் முதலீடுகளைப் பெருக்குதல்:

சிறப்பான பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில், அதிகமான தொழில் முதலீடுகளை ஈர்க்க வேண்டும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.

தொழில் துறையினருக்கு, இந்தியாவை பற்றிய பயத்தை போக்க வேண்டும். ஊழல், தீவிரவாதம், பாதுகாப்பின்மை போன்றவை, தொழில் துறையினருக்கு இருக்கும் தடங்கல்கள். இவற்றைக் களைந்து, தொழில் தொடங்க ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.

ஒரு தொழிற்சாலை அமைந்தால் தான், பத்தாயிரம் தொழிலாளிகளின் வீட்டில் அடுப்பு எரியும். மேலும், இதன் மூலம், உள்நாட்டு உற்பத்தி பெருகி, அரசின் வருவாய் அதிகரித்து, பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.

வெளிநாட்டு முதலீடுகளின் மூலம், அரசிற்கு அதிக அந்நிய செலாவணி கிடைக்கும். எனவே, அமெரிக்க டாலர் தட்டுப்பாடு குறைந்து, ரூபாயின் மதிப்பு அதிகமாகும். இதன் தொடர்ச்சியாக, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை கணிசமாக குறையும்; பொருட்களின் விலைவாசியும் குறையும்.

அதே சமயம், வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை, மத்திய அரசு தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். உள்நாட்டு தொழிலாளர்கள் பாதிப்படையாமல், விவசாயம் நசிவடையாமல் பாதுகாக்க வேண்டும்.


விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்தல்:

இந்தியாவிலேயே மகாராஷ்ட்ராவில் தான், அதிகமான விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்கின்றன. அதற்கடுத்தபடியாக, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் வருகின்றன.

பொய்க்கும் பருவமழை, வேலைக்கேற்ற கூலி கிடைக்காத நிலைமை, கழுத்தை நெரிக்கும் கடன் போன்றவை, ஏழை விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டுகின்றன. விவசாய நிலங்கள் எல்லாம், அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறி வரும் நிலையில், அரசு இந்த விஷயத்தை தீவிரமாக கையிலெடுத்து, சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு, எளிமையான முறையில் வங்கிகள் கடன் கொடுத்தல், இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், சரியான லாபம் கிடைத்தல் போன்றவற்றை அரசு உறுதிபடுத்த வேண்டும்.

விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு நகர்ப்பகுதிகளில், கட்டுமான கூலித் தொழிலாளிகளாக இருக்கும் அவல நிலை உள்ளது. அவர்களை மீண்டும் விவசாயத்திற்கு திருப்பி, வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில் துறையும், விவசாயமும் எதிரிகள் என்பது போன்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மை அல்ல. இரண்டும் சரியான விகிதத்தில் வளர்ச்சி பெற்றால் தான், நாடு வளர்ச்சி பெறும்.


சுகாதாரம்:

மருத்துவ துறை வேகமாக வளர வளர, நோய் உண்டாக்கும் கிருமிகளும் வேகமாக பரவி வருகின்றன. புதிது புதிதாக பல கிருமிகள் தோன்றி, மனித இனத்தை அச்சுறுத்துகின்றன.

வசதி உள்ளவர்கள் உயர்தர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வர். ஆனால், அடித்தட்டு ஏழை மக்கள் நாடுவது, அரசு மருத்துவமனைகளை தான். பெரும்பாலான அரசு மருத்துவமனைகளின் தரம், எவ்வாறு உள்ளது என்பது, நம் எல்லாருக்கும் தெரியும்.

எனவே, போர்க்கால அடிப்படையில், அனைத்து அரசு மருத்துவமனைகளின் தரத்தையும் உயர்த்த வேண்டும். ஏழை மக்கள் தரமான சிகிச்சை பெறுவதை உறுதிபடுத்த வேண்டும். உயிர்க் கொல்லி நோய்களுக்கான மருத்துவத்தை, இலவசமாக அல்லது குறைந்த செலவில் உலகத்தரத்துடன் அளிக்க வேண்டும்.

அமைச்சர் முதலான அனைத்து உயர்பதவிகளில் உள்ளவர்களும், அரசு மருத்துவனையையே பயன்படுத்த உத்தரவிட வேண்டும். அப்போது தான் மருத்துவத்தின் தரம் மேம்படும்.

'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில், மருத்துவத் துறையில், பல்வேறு ஆராய்சிகளை மேற்கொண்டு, புதிய ரக மருந்துகளையும், சிகிச்சை முறைகளையும் கண்டறிய வேண்டும்.

இந்தியா வளர்வதை பிடிக்காத சில நாடுகள், வேண்டுமென்றே பல கிருமிகளை இந்தியாவில் பரப்பி விட, திட்டம் தீட்டி வருகின்றன. இந்த உயிர்-போரை (ஞடிணி - தீச்ணூ) தொடக்க நிலையிலே முறியடித்து, இந்திய மக்களை காக்க வேண்டும்.

ஆப்பிரிக்கா போன்ற பல நாடுகளிலிருந்தும், இந்தியாவிற்கு மருத்துவ சுற்றுலா வருகின்றனர். அவர்களுக்கு, குறைந்த செலவில் தரமான சிகிச்சை அளித்து, இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிரச் செய்ய வேண்டும்.


கல்வி:

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, இருந்த கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை விட, இன்றைய எண்ணிக்கை பல மடங்கு அதிகம். ஆனால் தரமான கல்வி அளிக்கப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லை. கல்வியும், மருத்துவமும் சேவையாக இருந்த காலம் மாறி, இன்று வியாபாரமாகி வருகிறது. அரசு பள்ளிகளை தரம் உயர்த்தினால் நிச்சயம் பெரும்பாலான மக்கள் அரசு பள்ளிகளை நோக்கி வருவர்.

குறைந்த செலவில் நிறைந்த தரத்துடன் கல்வி அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். கல்வி இடைநிற்றலை தடுத்து, அனைவரும் கல்வி பெறுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவை தவிர....

கீழே கொடுக்கப்பட்டுள்ள, பல்வேறு விஷயங்களில் மோடி அரசு, கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.


பெண்களுக்கு சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு; அரசியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்கை உறுதி செய்தல் ;விளையாட்டுக்களில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் சாதனை புரிதல்; சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல்; கலை, அறிவியல், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் இந்தியா சாதனை புரிதல், போன்றவற்றில் கவனம் செலுத்தி, நிறைவான ஆட்சி புரிந்தால், அடுத்த ஆட்சியிலும், மக்கள் மோடியையே தேர்ந்தெடுப்பர்.
-ஸ்ரீதர் சத்யநாராயணன், குரோம்பேட்டை, சென்னை

மொபைல் எண்: 9790824237

sridhar s narayanan < sridhar.great 2007 @ gmail.com>

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bioprabhu - Madurai,இந்தியா
17-ஜன-201515:53:51 IST Report Abuse
Bioprabhu பிரதம மந்திரி திரு மோடி அவர்கள் மிகவும் நல்லவர். மக்கள் அதிகம் எதிர்பார்கின்றனர். இந்தியாவை மிகவும் வல்லரசாக மாற்றவேண்டும். ஒவ்வொரு இளைங்கனையும் நல்வழிப்படுத்தி அவர்களிடம் உள்ள திறமையை நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வழி செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
17-ஜன-201515:12:49 IST Report Abuse
N.Purushothaman தினமலரின் இந்த சேவை அபாரமானது....வரவேற்கப்பட வேண்டிய ஒன்று....
Rate this:
Share this comment
Cancel
santha kumar - ruwi,ஓமன்
17-ஜன-201514:18:48 IST Report Abuse
santha kumar நிச்சயம் நீங்கள் ஒருவரும் நான் சொல்வதை நம்ப மாட்டீர்கள். ஆனால் இதுதான் உண்மை. காங்கிரஸ் ஆட்சி சரி இல்லைதான், ஆனால் இவர்களுடைய ஆட்சி அவர்களை விட மோசமாகத்தான் இருக்கும்.அதற்கு ஒரு eg காமராஜர் ஆட்சி தமிழ்நாட்டில் சில தவறை தவிர மற்றபடி நன்றாக இருந்தது. அந்த சில தவறை பயன்படுத்தி தி மு க போன்ற கட்சிகள் மக்களிடம் அதிகம் பேசி மக்களின் மனநிலையை மாற்றி காமராஜரையே தோற்கடித்தனர். தோற்கடித்த மக்களிடம் கேட்கிறேன் அவரை விடவா இபொழுது உள்ளவர்கள் சிறந்தவர்கள். அதே போல் தான் இதுவும் காங்கிரஸ் சில தவறு செய்தது, அதை எதிர்கட்சியினர் சமூகலைத்தளம் மூலமாக பெரிதாக்கி காங்கிரஸ் ஆட்சியை படு தோல்வி அடைய செய்தனர்.இதே நீங்கள் தான் 10 வருடம் அப்புறும் சொல்வீர்கள் காங்கிரஸ் நன்றாக தான் இருந்தது , நாம்தான் அவசரபட்டோம் . நான் ஒரு நடுநிலைமையில் தான் சொல்கிறேன். வேண்டும் என்றால் நீங்கள் சற்று சிந்தித்து பாருங்கள். டெல்லி யில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது, தோல்வி அடைய செய்தவர் டெல்லி மக்களுக்கு காங்கிரஸ் செய்ததைவிட என்ன செய்தார். தற்பொழுது மோடி காங்கிரஸ் கட்சி யை அதிக விமர்சனம் செய்தார். அவர் என்ன செய்தார் , என்ன செய்கிறார் இனி என்ன செய்வார்.பொறுமை யாய் இருந்து பாருங்கள். நான் சொல்வது உங்களுக்கு புரியும்.காங்கிரஸ் கட்சியில் பல திருடர்கள் இருந்தார்கள் , ஆனால் அவர்களுக்கு அனுபவம் உண்டு.இவர்களிலும் பல திருடர்கள் இருகிறார்கள். இனி மேல் தான் தெரியும் கடைசியாக ஓன்று சொல்கிறேன், கடந்த லோக் சபா தேர்தலில் ப ஜ க பல கோடிகளை செலவளித்தது , குறைந்த பட்சம் அதை திருப்பி எடுக்க முயற்சி செய்ய மாட்டர்களா, திருப்பி எடுத்த பிறகு ருசி கண்ட பூனை போல திரும்பவும் திருட முயற்சி செய்ய மாட்டார்கள் என்று என்ன உத்தரவாதம்.நன்றி......
Rate this:
Share this comment
இளங்கோ - chennai,இந்தியா
18-ஜன-201502:07:03 IST Report Abuse
இளங்கோதவறு நண்பரே.உங்களுக்கான பதில் ஒரு பத்து வருடம் பின்னோக்கி இருக்கிறது. இப்பொழுது ஊடகத்தை பயன்படுத்தி காங்கிரஸ் ஐ வீழ்த்தியதாக சொல்கிறீர்களே, 2004-ல் வாஜ்பாய் ஆட்சி எப்படி வீழ்ந்தது.குஜராத் கலவரத்தை காரணம் காட்டி நரேந்திர மோடியை செய்யாத விமர்சனமா?அவருக்கு அமெரிக்கா செல்ல விசா கொடுக்காதீர்கள் என்று ஒரு அந்நிய நாட்டுக்கு பல MP க்கள் கடிதம் எழுதும் அளவுக்கு கேவலமாக நடந்து கொண்டார்கள்.அதையெல்லாம் தாண்டி தான் மோடி அவர்கள் இன்று வெற்றி வாகை சூடி வந்திருக்கிறார்கள். இன்றைய நிலையில் எந்த அரசியல் கட்சியும் 100% நல்லாட்சி புரியும் என்று எதிர்பார்க்க முடியாது.ஆனாலும் பிஜேபி காங்கிரஸ்-ஐ விட சிறப்பாக ஆட்சி செய்யும் என்பதை பார்க்க தான் போகிறோம் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X