சிறப்பு பகுதிகள்

சட்டமும் சந்தேகங்களும்

ஜீவனாம்சம் சம்பந்தமான தம்பதியரின் ஒப்பந்தம் செல்லுமா? - ஹன்ஸா

Added : ஜன 17, 2015
Share
Advertisement
அந்த வழக்கில் கணவன் மனைவிக்கு ஜீவனாம்சமாக 30000/- நிரந்தரத் தொகையாகத் தந்து விடவேண்டும் எனத் தீர்ப்பானது. நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு தம்பதியினரால் ஏற்கப்பட்டது.அதன் பின், தம்பதியர் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டனர். அதாவது கணவன் அந்தத் தொகையைத் தந்ததன் பின் மனைவி வேறு பணம், சொத்து ஏதும் கணவனிடம் கேட்கக்கூடாது எனவும், அதை ஒட்டி நீதிமன்றத்தில் மனுச்செய்து
 ஜீவனாம்சம் சம்பந்தமான தம்பதியரின் ஒப்பந்தம் செல்லுமா? - ஹன்ஸா

அந்த வழக்கில் கணவன் மனைவிக்கு ஜீவனாம்சமாக 30000/- நிரந்தரத் தொகையாகத் தந்து விடவேண்டும் எனத் தீர்ப்பானது. நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு தம்பதியினரால் ஏற்கப்பட்டது.அதன் பின், தம்பதியர் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டுக்கொண்டனர். அதாவது கணவன் அந்தத் தொகையைத் தந்ததன் பின் மனைவி வேறு பணம், சொத்து ஏதும் கணவனிடம் கேட்கக்கூடாது எனவும், அதை ஒட்டி நீதிமன்றத்தில் மனுச்செய்து விவாகரத்து பெற்றுக் கொண்டு, விலக வேண்டும் வேண்டும் எனவும், அத்தோடு பணம் தரவேண்டிய கடப்பாடு கணவனுக்கு இல்லை எனவும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.கணவனும் அதை ஒட்டி, மனைவிக்கு மொத்தத்தொகையாக பணத்தை அளித்துவிட்டார்.சில வருடங்களுக்குப் பிறகு, அம்மனைவி ஹைதராபாத் குடும்ப நீதிமன்றத்தில் கணவன் மீது இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 25-ன் படி மனு ஒன்றைத் தாக்கல் செய்கிறார். அதாவது அதில் தனது தந்தை பணி ஓய்வு பெற்றுவிட்டதாலும், தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்டுவிட்டதாலும், தன்னை அவர்களால் கவனித்துக் கொள்ள இயலாது எனவும், ஏற்கனவே பெற்ற ஜீவனாம்ஸ பணம் ஒருபோதும் காணாது எனவும். ஆகவே, ஜீவனாம்ச பணத்தை 5 லட்சமாக உயர்த்தித்தரவேண்டும் எனவும் கேட்டிருந்தார்.ஆனால், ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி, நிரந்தர ஜீவனாம்சத் தொகையும், விவாகரத்தும் ஆனபிறகு இருவருக்கும் எந்த ஒரு கட்டுப்பாடும் அடுத்தவர் மீது இல்லை. எனவே அவர் எந்த சமயத்திலும் அதன் பின் கணவனுக்கெதிராக எவ்வித கோரிக்கையும் கேட்க இயலாது. எனவே, மனைவி கேட்பது சட்டப்புறம்பானது எனவும், கணவர் தரப்பில் வாதிடப்பட்டது.இதற்கான முடிவாக குடும்ப நீதிமன்றம் உரைத்த தீர்ப்பில், மேற் சொன்ன காரணங்களின் அடிப்படையில் இந்து திருமணச்சட்டத்தின் பிரிவு 25 பொருந்தாது எனச்சொல்லப்பட்டது.பிரிவு 25, இந்து திருமணச்சட்டம். 195525 Permanent alimony and maintenance .—(1) Any court exercising jurisdiction under this Act may, at the time of passing any decree or at any time subsequent thereto, on application made to it for the purpose by either the wife or the husband, as the case may be, order that the respondent shall 55 [***] pay to the applicant for her or his maintenance and support such gross sum or such monthly or periodical sum for a term not exceeding the life of the applicant as, having regard to the respondent's own income and other property, if any, the income and other property of the applicant 56 [, the conduct of the parties and other circumstances of the case], it may seem to the court to be just, and any such payment may be secured, if necessary, by a charge on the immovable property of the respondent.(2) If the court is satisfied that there is a change in the circumstances of either party at any time after it has made an order under sub-section (1), it may at the instance of either party, vary, modify or rescind any such order in such manner as the court may deem just.(3) If the court is satisfied that the party in whose favour an order has been made under this section has re-married or, if such party is the wife, that she has not remained chaste, or, if such party is the husband, that he has had sexual intercourse with any woman outside wedlock, 57 [it may at the instance of the other party vary, modify or rescind any such order in such manner as the court may deem just].இதை எதிர்த்து மனைவி ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதன்படி, “நிரந்தர ஜீவனாம்சமாக தொகை ஒன்றைப் பெற்றுவிட்டாலும், அதன் காரணமாக மேற்கொண்டு எவ்வித கோரிக்கையும் செய்வதில்லை என கணவனிடம் மனைவி உடன்படிக்கை செய்து கொண்டாலும், அது வாழ்க்கைப் பொருளுதவிப் பணத்தை உயர்த்தித்தரும்படி செய்யும் கோரிக்கையை நிராகரித்தல் ஆகாது என்றும் அப்படிப்பட்ட ஒரு உடன்படிக்கையே பொதுக் கொள்கைக்கு முரணானதாகும் என்றும் எனவே அது ஒரு செல்லத்தக்க ஒப்பந்தம் ஆகாது என்றும் நீதிபதிகள் அடங்கிய ஆயம் நிலைநிறுத்தியது. இறுதியில் மனைவியின் மேல் முறையீட்டை அனுமதித்தும், குடும்ப நீதிமன்றத்தின் ஆணையை ரத்து செய்தும் மேற்கண்ட கருத்துகளின்படி (அந்த உடன்படிக்கை செல்லாது எனும் ஆந்திரப்பிரதேச உயர்மன்றத்தின் கருத்துப்படி) அந்த மனைவியின் ஜீவனாம்சத்தொகையை உயர்த்தித்தரும்படியான மனுவை மீண்டும் புதிதாக பரிச்சிலித்து ஆணையிடும்படி அதற்கு எவுரைத்தும் ஆந்திரப்பிரதேச உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.இந்த தீர்ப்பின் அடிப்படை:அந்தப் பெண் நிரந்தர ஜீவனாம்சமாகப் பெற்ற பணம், வாங்கிய சமயத்தில் போதுமான பெருந்தொகையாகத் தோன்றி இருக்கலாம். ஆனால் பணவீக்க விகிதத்தின்படி, அது பின்வரும் நாட்களில் காணாமல் போகலாம். ஆகவே நிரந்தர ஜீவனாம்சத் தொகை என்பது, மாத ஜீவனாம்சத்திலிருந்து மாறுபட்டது எனினும், இருவருக்குமான கடப்பாட்டை தீர்த்துவைக்காது, அதைப் பற்றி, அவர்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தம், செயல்பாட்டுக்கு ஒவ்வாத, நீதிநெறிமுறைக்கு மாறானது. ஏனெனில், அந்தப் பெண் திருமணம் முறியாதிருந்தால் எப்படியான வாழ்க்கைத்தரத்தில் அவள் இருந்திருப்பாளோ அதே நிலையில் அவளை வைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தச் சமூகமும், அந்தக் கணவனும் இருக்கிறார்கள். இது பெண்ணின் சமூக நிலை மாறும்வரை பெண்களுக்கான ஈடாக இந்த நிலை தொடரும் என்பதையே காட்டுகிறது.இந்த முடிவைப் பற்றி பேசும் வழக்குகளாவன:Smt. P. Archana alais Atchamamba Vs Varada Siva Rama Krishnahttp://www.telegraphindia.com/1100218/jsp/calcutta/story_12113549.jsp
அடுத்த கட்டுரையாக…ஆணுக்கான ஜீவனாம்சத்தொகை..

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X