பனுவல் வாசிப்பு இயக்கம்!| Dinamalar

பனுவல் வாசிப்பு இயக்கம்!

Added : ஜன 18, 2015
Advertisement

சென்னையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும் வாசகர் வட்டம், பனுவல் வாசகர் வட்டம் மட்டுமே. ஒவ்வொரு மாதமும், ஏதாவது பொது தலைப்பின் கீழ், மாதத்தின் அனைத்து நாட்களும் நிகழ்ச்சிகள் நடக்கும். ஆவண படம், முழுநீள திரைப்படம், புத்தக வாசிப்பு, விமர்சனம், எழுத்தாளர் சந்திப்பு என, பல்வேறு வகைகளில், நிகழ்ச்சிகள் நடக்கும். கடந்த மாதம், இசை என்ற தலைப்பின் கீழ், கர்நாடக இசை, தமிழிசை, கானா இசை என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. இலக்கியம் தொடர்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில், எழுத்தாளர்கள் ஜெயமோகன், தியோடர் பாஸ்கரன், நக்கீரன், குட்டி ரேவதி, ச.விஜயலட்சுமி, சந்திரா, அ.ரவி, தேவகாந்தன், இசை விமர்சகர்கள், ஷாஜி, லலிதாராம், ஆவணப்பட இயக்குனர் அம்ஷன்குமார், ஆர்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை நேரங்களை பயனுள்ளதாக மாற்ற விரும்பும் வாசகர்கள், பனுவல் வாசகர் வட்டம் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு: 93828 53646



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X